நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இரண்டாம் காலாண்டு... ஹிண்டால்கோ ரிசல்ட் எப்படி? - லாபம் அதிகரித்த பி.டி.சி...

இரண்டாம் காலாண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
இரண்டாம் காலாண்டு

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் லாபம் 3.33% உயர்ந்து, 793.55 கோடி ரூபாயாக இருக்கிறது!

செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. முக்கிய நிறுவனங்கள் சிலவற்றின் முடிவுகள் இங்கே...

மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் (Motherson Sumi Systems)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 39.76% குறைந்து, 995.57 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 1,652.71 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 12.84% குறைந்து, 151.86 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 174.23 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 41.56% குறைந்து, 169.70 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 290.38 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 0.55 பைசாவிலிருந்து 0.48 பைசாவாகக் குறைந்துள்ளது.

இரண்டாம் காலாண்டு... ஹிண்டால்கோ ரிசல்ட் எப்படி? - லாபம் அதிகரித்த பி.டி.சி...

ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் (Jain Irrigation Systems )

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 0.27% குறைந்து, 394.73 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 395.80 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர இழப்பு 5.46% உயர்ந்து, 106.93 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 113.11 கோடி ரூபாயாக இருந்தது.இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 71.59% உயர்ந்து, -11.07 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 38.96 கோடி ரூபாயாக இருந்தது.

ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா (Eros International Media)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 73.98% குறைந்து, 51.45 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 197.71 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர இழப்பு 187.89% குறைந்து, 5.37 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 6.11 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 8.98% குறைந்து, 27.78 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 30.52 கோடி ரூபாயாக இருந்தது.

பிடிசி இந்தியா (PTC India)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 18.41% உயர்ந்து, 5,624.50 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4,749.87 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 23.19% உயர்ந்து, 166.19 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 134.90 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 4.56 ரூபாயிலிருந்து, 5.61 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரண்டாம் காலாண்டு... ஹிண்டால்கோ ரிசல்ட் எப்படி? - லாபம் அதிகரித்த பி.டி.சி...

டிரைஜின் டெக்னாலஜிஸ் (Trigyn Technologies)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 4.37% குறைந்து, 19.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 20.04 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 92.67% குறைந்து, 0.24 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 3.23 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 63.39% குறைந்து, 2.68 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 7.32 கோடி ரூபாயாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 1.05 ரூபாயிலிருந்து 8 பைசாவாகக் குறைந்துள்ளது.

குஜராத் இண்டஸ்டிரீஸ் பவர் கம்பெனி (Gujarat Industries Power Co)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 1.18% உயர்ந்து, 336.31 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 332.38 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபமானது 9.34% குறைந்து, 46.94 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 51.77 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 2.19% குறைந்து 117.26 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 119.88 கோடியாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 3.42 ரூபாயிலிருந்து 3.10 ரூபாயாகக்குறைந்துள்ளது.

கேசோராம் இண்டஸ்டிரீஸ் (Kesoram Industries)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 19.13% குறைந்து, 587.13 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 726.04 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபமானது 127.35% உயர்ந்து, 31.51 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் -115.21 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 295.4% உயர்ந்து, 124.59 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 31.51 கோடி ரூபாயாக இருந்தது.

ஹிண்டால்கோ இண்டஸ்டிரீஸ் (Hindalco Industries)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை செப்டம்பர் காலாண்டில் 4.49% குறைந்து, 9,518.00 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 9,965.00 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 153.85% உயர்ந்து, 198.00 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 78.00 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 3.56% உயர்ந்து, 1,018.00 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 983.00 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 36 பைசாவிலிருந்து, 89 பைசாவாக உயர்ந்துள்ளது.

ரூபா அண்ட் கம்பெனி (Rupa and company)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 5.43% உயர்ந்து, 303.53 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 287.90 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 41.98% குறைந்து, 45.40 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 31.97 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 53.23% உயர்ந்து, 68.22 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 44.52 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 4.02 ரூபாயிலிருந்து, 5.71 ரூபாயாக உயர்ந்துள்ளது.

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 0.05% குறைந்து, 4,977.34 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4,979.95 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபமானது 3.33% உயர்ந்து, 793.55 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 767.99 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் எபிட்டா வருமானம் 3.43% உயர்ந்து, 4,723.79 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 4,567.31 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 15.22 ரூபாயிலிருந்து, 15.65 ரூபாயாக உயர்ந்துள்ளது.