தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஷேர்லக்: 2023-ம் ஆண்டில் நிஃப்டி 20500 புள்ளிகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை 4 மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். 18-ம் ஆண்டுச் சிறப்பிதழ் பக்கங் களைப் புரட்டிப் பார்த்தவர், “அனைத்துப் புதிய பகுதி களும் சூப்பர். கட்டுரைகள் ஒவ்வொன்றும் அருமை” என பாராட்டியவருக்கு ஆனியன் தூள் பஜ்ஜியைத் தந்தோம். ‘‘வாவ், சூப்பர்’’ என்று சாப் பிட்டபடி, நம் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

நிஃப்டி குறியீடு புள்ளிகள் 2023-ம் ஆண்டில் 20500 புள்ளி களுக்கு உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதே?

“அமெரிக்காவின் முன்னணி ஈக்விட்டி ரிசர்ச் நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ், இந்தியப் பங்குச் சந்தையின் நிலவரம் குறித்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஆசியாவிலும் வளரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியப் பங்குச் சந்தைகளின் செயல் பாடு வரும் ஆண்டில் சிறப் பாக இருக்கும் என்று கூறி யிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி பிரகாச மாக இருக்கும் என்றும், அது அவற்றின் பங்கு விலைகளில் நல்ல ஏற்றத்தைப் பதிவு செய்யும் என்றும் கூறியிருக் கிறது.

2023-ல் உள்நாட்டு பொரு ளாதார வளர்ச்சி, அமெரிக்க டாலர் இருப்பு, சர்வதேச பொருளாதாரச் சூழல் ஆகியவை பாசிட்டிவ்வாக மாறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே, 2023 இறுதியில் பங்குச் சந்தையின் செயல்பாட்டில் காணப்படும் வளர்ச்சியின் பொருட்டு நிஃப்டி அதன் தற்போதைய நிலையிலிருந்து 12% வரை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது, நிஃப்டி தற்போது 18500-க்குள் வர்த்தகமாகிறது. இந்த நிலை யிலிருந்து 2023 இறுதிக்குள் 20500 புள்ளிகள் என்ற நிலைக்கு உயரும் என்று கூறியுள்ளது.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை சரிந்திருக்கிறதே, என்ன காரணம்?

“ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தின் பங்கு விலை கடந்த நவம்பர் 23-ம் தேதி 5% வரை சரிந்து ரூ.65.55 என்கிற புதிய 52 வார குறைந்தபட்ச விலை யைச் சந்தித்திருக்கிறது. கடந்த மூன்று வர்த்தக தினத்தில் 15% வரை சரிந்திருக் கிறது. அது மட்டுமல்லாமல், இந்த மூன்று வர்த்தக தினத்திலும் என்.எஸ்.இ சந்தையில் லோயர் சர்க்யூட் நிலையில் வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த பங்கு விலை 30% வரை சரிவையும், கடந்த ஒரு ஆண்டில் 26% வரை சரிவை யும் சந்தித்துள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவில் நிறுவனம் ரூ.308.24 கோடி நிகர இழப்பைச் சந்தித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.60.78 கோடி நிகர இழப்பை இந்த நிறுவனம் சந்தித்திருக்கிறது.”

ஈஸி டிரிப் பிளானர்ஸ் நிறுவனப் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு, முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகள் வழங்குவது குறித்த முடிவுகளை வெளியிட்டது. இதனால், நவம்பர் 22-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 13% வரை அதிகரித்து, ரூ.64.65-க்கு வர்த்தகமானது. கடந்த இரண்டு வர்த்தக தினத்தில் மட்டும் 30% வரை பங்கு விலை அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனம் 3:1 என்கிற கணக்கில் போனஸ் பங்கு களையும், 1:2 என்கிற கணக்கில் பங்கு உட்பிரிப்பு விஷயங்களையும் மேற்கொள்ள முடிவு செய்திருக் கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் பங்குத் தரகு நிறுவனம், இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்துள்ளது. பங்கு இலக்கு விலையை ரூ.63-ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

ஃபினோ பேமென்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் ஃபினோ பேமென்ட்ஸ் பேங்க் நிறுவனப் பங்கு விலை ஒரே நாளில் 20% வரை அதிகரித்து அப்பர் சர்க்யூட் நிலையில் ரூ.230.70-க்கு வர்த்தகமானது. கேப்ரி குளோபல் என்கிற நிறுவனம் இந்த நிறுவனத்தின் 13 லட்சத்துக்கும் அதிகமான பங்குகளை வாங்கியதே இந்த விலையேற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பங்குச் சந்தையில் ரூ.577 என்கிற விலையில் பட்டியலிடப் பட்டது. ஆனால், வெளியீட்டு விலையைவிட 60% விலை சரிந்து தற்போது வர்த்தகமாகிறது’’ என்ற வருக்கு ஏலக்காய் டீ தந்துவிட்டு, மீண்டும் கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தோம்.

நைகா நிறுவனத்தின் சி.எஃப்.ஓ தனது பதவியை ராஜினாமா செய்ததால், பங்கு விலை குறைந்துள்ளதா?

“ஆம். இந்த நிறுவனத்தின் சி.எஃப்.ஓ அர்விந்த் அகர்வால் தனது பதவியை ராஜினாமா செய்ததும், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் நைகா நிறுவனப் பங்கு விலை 3% வரை சரிவை சந்தித்து, ரூ.169.30-க்கு வர்த்தகமானது. அதே வர்த்தக தினத்தில் தனியார் ஈக்விட்டி நிறுவனமான லைட்ஹவுஸ் இந்தியா தன் வசம் இருந்த ரூ.336 கோடி மதிப்புள்ள 18.44 மில்லியன் நைகா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தது. உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களான ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான போஃபா செக்யூரிட்டீஸ், பி.என்.பி பரிபாஸ் ஆர்பிட்ரேஜ், சொசைட்டி ஜெனரல் ஆகியவை நைகா பங்குகளை வாங்கியிருக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் சென்செக்ஸ் 4% ஏற்றத்தை சந்தித் திருக்கும் நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு 25% வரை சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் சென்செக்ஸ் 5% ஏற்றத்தை சந்தித்திருக்கும் நிலையில், இதன் பங்கு விலை 50% வரை சரிந் துள்ளது. இந்தப் பங்கின் அதிகபட்ச விலையான ரூ.429-லிருந்து 60% வரை இந்தப் பங்கு விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை 12.06 மணிக்கு இதன் பங்கு விலை ரூ.171.05-க்கு வர்த்தகமானது.”

பிரசிஷன் வயர்ஸ் நிறுவனம் போனஸ் பங்குகள் அறிவித்திருக்கிறதே..!

“மல்ட்டிபேகர் பங்காக விளங்கும் பிரசிஷன் வயர்ஸ் இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் 235% ஏற்றம் கண்டிருக்கிறது. இந்த நிறுவனம் தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய வயர் தயாரிப்பு நிறுவனம் ஆகும். ரூ.1,202 கோடி சந்தை மதிப்பு கொண்ட இந்த நிறுவனம் ஆண்டுக்கு 40,000 டன் அளவிலான வயர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, இரண்டு பங்குகளுக்கு ஒரு பங்கு வீதம் போனஸ் பங்கு வழங்க உள்ளது. அதன்படி டிசம்பர் 22-ம் தேதி போனஸ் பங்கு வழங்க பதிவுத் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.”

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் 55% வீழ்ச்சி கண்டிருக்கிறதே?

“இந்த நிறுவனப் பங்கு விலை அதன் 52 வார உச்சத்தி லிருந்து 55% வீழ்ச்சி கண்டிருக் கிறது. சமீபத்தில்தான் இந்த நிறுவனம் அதன் ஃபார்மா பிரிவிலிருந்து ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பிசினஸைத் தனியாகப் பிரித்தது. இனி கெமிக்கல் பிசினஸில் தீவிர கவனத்தைச் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பல்வேறு பங்கு ரிசர்ச் நிறுவனங்களும் இந்நிறுவனம் மீது பாசிட் டிவ்வான கணிப்பை வெளி யிட்டுள்ளன. முதலீடுகளை மேற்கொண்டு உற்பத்தி திறனையும் அதிகரிக்க உள்ளது. இதன் அடிப்படை யில் பார்க்கும்போது இந்தப் பங்கில் காணப்படும் இறக்கங் கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகப் பார்க்கலாம்” என்றவர், சட்டென்று வீட்டுக்குக் கிளம்பினார்!

பேடிஎம் பங்கு மீண்டும் வீழ்ச்சி..!

“பேடிஎம் நிறுவனப் பங்கு விலை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்க காரணம், ரிலையன்ஸ் ஜியோதான் என மெக்யர் நிறுவனம் சொல்லி இருக் கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இது குறித்து மாக்யூரி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஐந்தாவது பெரிய ஃபைனான்ஷியல் நிறுவனமாக உருவெடுக்கும் என்றும், இது பேடிஎம் போன்ற நிறுவனங்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை அடுத்து பேடிஎம் நிறுவனத்தின் ஒன் 97 கம்யூனிகேஷன் பங்குகள் வீழ்ச்சியைச் சந்திக்க ஆரம்பித்தன. கடந்த செவ்வாய் அன்று 11% குறைந்து ரூ.475-க்கு வர்த்தகமானது. இந்தப் பங்கின் எதிர்காலம் இன்னும் எப்படி எல்லாம் இருக்குமோ” எனப் பலரும் கவலைப்படுகின்றனர்!