
ஷேர்லக்
" ‘மாண்டஸ்’ புயலால் சென்னையில் வியாழன் காலை முதலே ஒரே மழை மயம். கிடுகிடு குளிர் வேறு. எனவே, கூகுள் மீட்டில் பேசு வோமா” என்று கேட்டிருந்தார் ஷேர்லக். ஓகே சொல்லிவிட்டு, மாலை 4 மணிக்கு அவருடன் பேசினோம். வீட்டில் ரிலாக்ஸ்ஸா உட்கார்ந்திருந் தவர் நம் கேள்விகளுக்கு விளக்கமான பதிலைத் தந்தார்.
சந்தை மதிப்பு உயர்வாக இருக்கும் நிலையிலும் முதலீட்டாளர்களுக்கு லாபம் தரும் நான்கு துறைகளை ஐ.சி.ஐ.சி.ஐ ஏ.எம்.சி பட்டியல் இட்டிருக்கிறதே?
“தற்போது சந்தையின் போக்கில் பங்குகளின் மதிப்பு உயர்வாக இருக்கக்கூடிய சூழல் நிலவினாலும், முதலீட் டாளர்களுக்கு லாபம் தரக் கூடிய வகையில் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறைகளும் உள்ளன. அத்தகைய துறைகள் என்னென்ன என்பதைத்தான் ஐ.சி.ஐ.சி.ஐ ஏ.எம்.சி பட்டியல் இட்டுள்ளது. அவை, ரயில்வே, பாதுகாப்புத் துறை, உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய நான்கு துறைகளும் முதலீடு செய்வதற்கான துறை களாக இருக்கின்றன. விரைவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட்டில் எப்போ துமே இந்த நான்கு துறை களுக்கு முதன்மை முக்கியத் துவம் அளிக்கப்படும். இந்த முறையும் இவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு மற்றும் தனியார் இணைந்து இந்தத் துறைகளில் அதிக அளவி லான மூலதன செலவினங் களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எனவே, இந்தத் துறைகளில் சிறப்பான ஃபண்டமென்டல் அம்சங் களுடன் உள்ள பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்கலாம்.”

ரியல் எஸ்டேட் பங்குகள் திடீரென்று இறக்கம் கண்டிருக் கிறதே?
“ரியல் எஸ்டேட் துறை பல ஆண்டுகள் அழுத்தத்தில் இருந்து கொரோனா காலத் துக்குப் பிறகு மெள்ள மீண்டு வரத் தொடங்கியது. ரியல் எஸ்டேட் துறை பங்குகளும் மீண்டுவந்து ஏற்றத்தின் போக்கில் வர்த்தகமாயின. இந்த நிலையில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் தொடர்ச்சியாக அனைத்து நிதிக் கொள்கைக் கூட்டங் களிலும் வட்டி விகிதத்தை உயர்த்திக்கொண்டே வந்தது. ரெப்போ வட்டி விகிதம் 4 சத விகிதத்திலிருந்து தற்போது 6.25 சதவிகிதமாக உயர்த்தப் பட்டிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால், வீட்டுக் கடன்களுக்கான வட்டி கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால், வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நெகட்டிவ்வான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ரியல் எஸ்டேட் துறை பங்குகள் இறக்கத்தைச் சந்தித்திருக்கின்றன. சமீபத்தில் வட்டி விகித உயர்வு அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் மட்டும் ஓபராய் ரியால்டி 3.07 சதவிகிதமும், பிரிகேட் என்டர்பிரைசஸ் 2.05 சதவிகிதமும், டி.எல்.எஃப், கோத்ரேஜ் புராப்பர்ட்டீஸ் இரண்டும் 1.5 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தி ருக்கின்றன.”
ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி பங்கு விலை உயர்ந்து வர்த்தகமாகி இருக்கிறதே..?
“ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் புரொமோட்டர்களில் ஒன்றான அப்ரடின் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் தன் வசம் இருந்த 10.21% பங்குகளை முழுமையாக விற்க முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட்டில் 5.58% பங்குகளை ரூ.2,300 கோடிக்கு விற்பனை செய்த நிலையில், தற்போது 10.21% பங்குகளையும் விற்று வெளியேறுவதாக செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பங்கு விற்பனை காரணமாக பங்குகளின் விலை 2.14% உயர்ந்து வர்த்தகமானது. முழுமையாகப் பங்குகளை விற்பனை செய்வதால், ஹெச்.டி.எஃப்.சி ஏ.எம்.சி-யின் இணை ஸ்பான்சர் என்ற நிலையிலிருந்து அப்ரடின் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் விலகுகிறது.”
சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாகக் காணப்படுகிறதே, குறுகிய காலத்துக்கு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதேனும் இருக்கிறதா?
“இந்தியப் பங்குச் சந்தைகள் சமீபத்தில் கண்ட உச்சங்களிலிருந்து மீண்டும் இறக்கம் கண்டிருக்கிறது. சர்வதேச, உள்நாட்டுக் காரணிகள் ஏற்படுத்தும் தாக்கத்துக்கேற்ப பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத் துடன் வர்த்தகமாகின்றன. பணவீக்கம், வட்டிவிகித உயர்வு, ஜி.டி.பி குறித்த கணிப்பு என ஒருபக்கம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர், தேர்தல் முடிவுகள் என இன்னொரு பக்கம் காரணிகள் தயாராக இருக்கின்றன. ஆனால், இந்த ஏற்ற இறக்கமான சூழலிலும் லாபம் பார்ப்பதற்கான சாத்தியமுள்ள பங்குகள் நிறையவே இருக்கின்றன. அவற்றில் குறுகிய கால இலக்குடன் கவனிக்க வேண்டிய பங்குகளைச் சொல்கிறேன். டாடா பவர், எல்ஜி எக்யூப்மென்ட், பாரத் கியர்ஸ், ஐ.டி.டி சிமென்டேஷன், ஹிண்டால்கோ, இ.எஸ்.ஏ.பி (ESAB) இந்தியா, ராடிகோ கைதான், ஹெமிஸ்பியர் புராப்பர்ட்டீஸ்...’’
சன் ஃபார்மா பங்கு விலை இறக்கம் கண்டு வர்த்தகமானதே?
“இந்த நிறுவனத்தின் குஜராத் ஹலோல் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் அமெரிக்கச் சந்தையில் நுழைவதற்கு அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. தயாரிப்புகளின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதால், சன் ஃபார்மா நிறுவனத்தின் பங்குகள் விலை இறக்கம் கண்டு வர்த்தகமானது. இந்தக் கட்டுப்பாடு வெளியானதும் பங்கின் விலை 3% அளவுக்கு குறைந்து வர்த்தகமானது.”
மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் பங்குகளை நிறுவன முதலீட்டாளர் களுக்கு விற்கத் திட்டமிட்டிருக்கிறதே?
“லோதா என்ற பிராண்டின் கீழ் வீடு, மனைகளை விற்பனை செய்துவரும் மும்பையைச் சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் புரொமோட்டர்கள் அதன் பொது முதலீட்டாளர்கள் பங்கு சதவிகிதத்தை குறைந்தபட்ச வரம்புக்கு அதிகரிக்க கணிசமான பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 82.20% பங்குகளைத் தன் வசம் வைத்துள்ள நிறுவனம், இந்த அளவை 75 சதவிகிதமாகக் குறைக்க உள்ளது. மேலும், இந்தப் பங்கு விற்பனை மூலம் ரூ.3,500 கோடி நிதி திரட்டத் திட்ட மிட்டிருக்கிறார்கள். இதற்காக தகுதியான நிறுவன முதலீட் டாளர்களுக்கு மட்டும் பங்கு களை விற்க முடிவு செய் துள்ளது. இந்த விற்பனைக்காக பங்கு விலையை ரூ.1,022.75 என நிர்ணயித்துள்ளது. இந்த விலை தற்போது சந்தையில் வர்த்தகமாகும் விலையை விடக் குறைவு என்பது குறிப் பிடத்தக்கது.”
எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் இப்போது அதிகம் முதலீடு செய்யும் துறைகள் பற்றி சொல்லுங்களேன்...
“வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்துவருவது, ரூபாய் மதிப்பு சரிவு உட்பட இன்னும் சில காரணங்களால் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்றுவந்தனர். 2022-ல் மொத்தமாக ரூ.1.25 லட்சம் கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனர். ஆனால், சமீப காலமாக எஃப்ஐ.ஐ முதலீட் டாளர்கள் மீண்டும் இந்தியப் பங்குச் சந்தைகளில் விற்பனை யைக் குறைத்துவிட்டு பங்கு களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களாக முதலீட்டை அதிகரித்துவரும் எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் டிசம்பர் மாதத்திலும் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த நவம்பரில் ரூ.36,239 கோடி முதலீடு செய்துள்ளனர். இதில் ரூ.30,682 கோடி குறிப்பிட்ட ஆறு துறைகளில் மட்டுமே முதலீடு செய் துள்ளனர். மொத்த முதலீட்டில் 40% வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அக்டோபரில் நிதித்துறை பங்குகளில் முதலீடு செய்யாத எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்கள் நவம்பரில் ரூ.14,205 கோடி முதலீடு செய்துள்ளனர்.
இது தவிர, எஃப்.எம்.சி.ஜி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐ.டி, கன்ஸ்யூமர் சர்வீசஸ் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். எஃப்.எம்.சி.ஜி துறையில் ரூ.3,956 கோடியும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ரூ.2,774 கோடியும், ஐ.டி துறையில் ரூ. 3,859 கோடியும், கன்ஸ்யூமர் சர்வீசஸ் துறையில் ரூ.2,837 கோடியும், ஆட்டோமொபைல் துறையில் ரூ.3,051 கோடியும் முதலீடு செய்துள்ளனர். அதே சமயம், நவம்பர் வரையில் முதலீடு செய்துவந்த கன்ஸ்யூமர் ட்யூரபிள்ஸ், டெலிகாம் மற்றும் ஆற்றல் சார்ந்த துறைகளில் பங்குகளை விற்று வருகின்றனர்.
வரும் டிசம்பர் 14-ம் தேதி அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரலின் நிதிக் கொள்கை கூட்டம் உள்ளது. ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் சார்ந்து எடுக்கும் முடிவுகள் தற்போதைய எஃப்.ஐ.ஐ முதலீட்டாளர்களின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத் தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
ஐ.டி.பி.ஐ வங்கியின் 51% பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கலாம் என்று அரசு அறிவித்திருக்கிறதே?
“ஐ.டி.பி.ஐ வங்கியில் மத்திய அரசு 45.48% பங்குகளும், எல்.ஐ.சி 49.24% பங்குகளும் வைத்துள்ளன. இதில் ஐ.டி.பி.ஐ வங்கியின் 60% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான விருப்ப விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் டிசம்பர் 16 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இதில் தற்போது தெளிவான விளக்கம் ஒன்றை மத்திய முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐ.டி.பி.ஐ வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்கள் 51% பங்குகளை வாங்கலாம் எனக் கூறியிருக்கிறது.
ரிசர்வ் வங்கி விதிகளின்படி இந்திய வங்கியின் புரொ மோட்டர் இந்தியக் குடியுரி மையுடன் இருக்க வேண்டும் என்பது முக்கிய அம்சமாக இருக்கிறது. ஆனால், ஐ.டி.பி.ஐ வங்கி ஏற்கெனவே இயங்கிவரும் வங்கி என்ப தால், இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு குடியுரிமை விதி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐ.டி.பி.ஐ வங்கி பங்கு விற்பனையில் வெளி நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங் களுடன் இணைக்கப்பட் டால், பங்குகளுக்கான ஐந்தாண்டு ‘லாக்இன்’ விதியும் தளர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.”
தர்மாஜ் கிராப் கார்ட் சந்தையில் பட்டியலானதே, முதல் நாள் வர்த்தகம் எப்படி?
“அகமதாபாத்தைச் சேர்ந்த அக்ரோ கெமிக்கல் நிறுவனமான தர்மாஜ் கிராப் கார்ட் கடந்த வியாழக்கிழமை சந்தையில் பட்டியலானது. ஐ.பி.ஓ வெளியீட்டு விலையை விடவும் 12% அதிகரித்து ரூ.266-க்குப் பட்டியலாகி ஆச்சர்யம் அளித்தது’’ என்ற வர், ‘‘அடுத்த வாரம் பிசினஸ் ஸ்டார் அவார்டு நிகழ்ச்சியா? சூப்பர், வாழ்த்துகள்’’ என்று வாழ்த்தி விடை தந்தார் ஷேர்லக்!
எல்.ஐ.சி வாடிக்கையாளர் சேவைக்கு வாட்ஸ்அப் அறிமுகம்!
எல்.ஐ.சி வாடிக்கையாளர் சேவைக்கு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெற எல்.ஐ.சி-யின் இணையதளத்தில் (licindia.in) பாலிசியைப் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். அப்படி பதிவு செய்தவர்கள் 8976862090 என்ற எண்ணுக்கு `Hi’ என்று வாட்ஸ் அப் குறுந்தகவல் அனுப்பினால் கட்ட வேண்டிய Premium, Bonus Information, Policy / Loan details போன்ற தெரிவுகள் வரும். அதில் தேவையானதை தெரிவு செய்து விவரங்கள் பெறலாம். மார்ச் மாதம் வருமான வரி விலக்கு பெறவும், ஆண்டு முழுவதும் கட்டிய Premium Statement பெறவும் இச்சேவையை உபயோகிக்கலாம்.

நாமக்கல், ஈரோடு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் கூட்டங்கள்..!
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!’ என்ற நிகழ்ச்சி நாமக்கல்லில் ஜனவரி 6 வெள்ளிக்கிழமை (மாலை 6 pm – 8.30 pm) நடைபெறுகிறது. மேலும், ஈரோட்டில் ஜனவரி 7 சனிக்கிழமை (மாலை 6 pm – 8.30 pm) நடைபெறு கிறது. சிறப்பு பேச்சாளராக நிதி நிபுணர் வ.நாகப்பன் பங்கேற்கிறார். அனுமதி இலவசம்.
பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla
