
‘‘ஏப்ரல் மாதத்தில் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் ஃபார்மா துறை பங்குகளை அதிகம் வாங்கியிருக்கின்றன!’’
‘‘எச்சரிக்கை, எச்சரிக்கை. கடந்த 15-ம் தேதி முதல் மூன்று நாள் களுக்கு இறக்கம் கண்டு வந்த சந்தை, இன்று (18-ம் தேதி)காலை ஏற்றத்தில் வர்த்தக மாகத் தொடங்கி, இறுதியில் இறக்கத்தில் முடிந்திருக்கிறது. நாளை சந்தை மேலேயா அல்லது கீழேயா என்பதைப் பொறுத்தே அடுத்த வாரத்தில் பங்குச் சந்தைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல முடியும். எச்சரிக்கை, எச்சரிக்கை’’ என்று ஆரூடம் சொல்லிக்கொண்டே நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். சென்னையின் கொடும் வெயிலுக்கு இதமாக ஜில்லென தர்பூசணி ஜூஸ் தந்தோம். அதை வாங்கிப் பருகிக்கொண்டே நம் கேள்வி களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார் அவர்.
வெளிநாட்டு நிதி நிறுவனங் களின் முதலீடு இந்தியப் பங்குச் சந்தையில் எப்படி இருக்கிறது?
‘‘கடந்த மூன்று ஆண்டு களில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து 14 நாள்களாக வெளிநாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors - FIIs) இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள். அதாவது, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரையிலான 14 வர்த்தக தினங்களில் எஃப்.ஐ.ஐ-கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார்கள். ஏப்ரல் 26-ம் தேதி ரூ.1,257 கோடி, 27-ம் தேதி ரூ.1,652 கோடி, 28-ம் தேதி ரூ.3,304 கோடி, மே 2-ம் தேதி ரூ.1,997 கோடி, 3-ம் தேதி ரூ.1,338 கோடி, 4-ம் தேதி ரூ.1,414 கோடி, 5-ம் தேதி ரூ.77 கோடி, 8-ம் தேதி ரூ.2,123 கோடி, 9-ம் தேதி ரூ.1,942 கோடி, 10-ம் தேதி ரூ.1,833 கோடி, 11-ம் தேதி ரூ.837 கோடி, 12-ம் தேதி ரூ.1,014 கோடி, 15-ம் தேதி ரூ.1,685 கோடி, 16-ம் தேதி ரூ.1,406 கோடி முதலீடு செய்திருக் கிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க ஃபெட் வங்கி ஆகியவற்றின் வட்டி விகித உயர்வு நிறுத்தி வைப்பு, சிறப்பான மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் போன்ற பல காரணங்களால் எஃப்.ஐ.ஐ-கள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள்.’’

அதானி பங்குகளை விலக்கும் கோல்டுமேன்... என்ன காரணம்?
‘‘கோல்டுமேன் சாக்ஸ் குழுமத்தின் முதலீட்டுப் பிரிவு, அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட மோசடி குற்றச்சாட்டு களுக்குப் பிறகு, சில வாரங் களில் அதன் இ.எஸ்.ஜி போர்ட்ஃபோலியோக்களில் அதானி குழுமத்தின் பங்கு முதலீட்டை வெகுவாகக் குறைத்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, கோல்டுமேன் சாக்ஸ் 1.17 கோடி அதானி பங்குகளைத் தனது போர்ட்ஃபோலியோவில் குறைத்துள்ளது. கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தைப் போலவே, நார்தன் டிரஸ்ட் கார்ப்பரேஷன் மற்றும் ஸ்டோர்பிராண்டு ஏ.எஸ்.ஏ ஆகிய இரண்டு நிறுவனங் களும் தங்களின் இ.எஸ்.ஜி போர்ட்ஃபோலியோவில் அதானி குழும நிறுவனப் பங்குகளின் அளவை குறைத்துள்ளன.’’
கடந்த மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்த, விற்ற பங்குகள் விவரம் சொல்ல முடியுமா?
‘‘கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் ஃபார்மா துறை சார்ந்த பங்குகளை அதிகம் வாங்கி யிருக்கின்றன. குறிப்பாக, டி.எல்.எஃப், கோத்ரேஜ் புராபர்ட்டீஸ் மற்றும் பிரஸ்டீஜ் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குகளையும், ஃபார்மா துறை சார்ந்த அல்கெம் லேபரட்டரீஸ், அஜந்தா ஃபார்மா மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங் களின் பங்குகளையும் வாங்கியிருக்கின்றன.
அதே நேரத்தில் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களான ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மற்றும் நிப்பான் இந்தியா ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சில மாதங்கள் சிறப்பாக வர்த்தக மாகிக்கொண்டிருக்கும் ஐ.டி.சி பங்குகளை விற்பனை செய்திருக்கின்றன.
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ் மற்றும் டெலிவரி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருக்கிறது. ஆக்ஸிஸ் பேங்க், மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட், டாரன்ட் பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திருக்கிறது. எஸ்.பி.ஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு முதலீட்டில் இருந்து முழுமையாக வெளியேறி இருக்கிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ் மற்றும் ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியிருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஓ.என்.ஜி.சி பங்குகளை விற்பனை செய்திருக்கிறது. வேதாந்தா, கெயில் இந்தியா மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு முதலீட்டில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறது. இந்த மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனம் சாகர் சிமென்ட்ஸ், கே.பி.ஐ.டி டெக்னாலஜிஸ், கேம்ஸ் ஆகிய நிறுவ னங்களின் பங்குகளைப் புதிதாக வாங்கி தனது பங்கு போர்ட் ஃபோலியோவில் சேர்த்திருக்கிறது.
ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், அப்போலோ ஹாஸ்பிட்டல், சிப்லா, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகளை வாங்கியும், எல் அண்ட் டி, சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட், டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தும் இருக்கிறது. ரோலக்ஸ் ரிங்ஸ் மற்றும் மிர்சா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் பங்கு முதலீட்டில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கிறது. ஆர்.ஹெச்.ஐ மேக்னெசிடா இந்தியா, ஷாப்பர்ஸ் ஸ்டாப், கிரிசில் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை புதிதாக வாங்கி தனது போர்ட்ஃபோலியோவில் சேர்த்திருக்கிறது.
நிப்பான் இந்தியா, கோட்டக், ஆக்ஸிஸ், ஆதித்ய பிர்லா எஸ்.எல், டி.எஸ்.பி, கனரா ரெப்கோ, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ வில் பல நிறுவனங்களின் பங்கு களைப் புதிதாக வாங்கிச் சேர்த்திருக்கின்றன.
ஃபண்ட் நிறுவனங்களின் நடவடிக்கையைப் பார்க்காமல், சிறு முதலீட்டாளர்கள் எந்தப் பங்கை வாங்குவதாக இருந் தாலும், அதில் உள்ள ரிஸ்க் என்ன, அந்த ரிஸ்க் தனக்கு உகந் ததுதானா என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்த்துவிட்டுதான் வாங்குவதே சரியாக இருக்கும்.’’
அம்பர் என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கின் விலை அதிகரித்தது ஏன்?
‘‘கடந்த மே 17-ம் தேதி வர்த்த கத்தில் அம்பர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12% வரை அதிகரித்தது. அன்றைய தினத்தின் காலை வர்த்தகத்தில் இதன் பங்கு விலை 10.5% அதிக ரித்து, ரூ.2,80-க்கு என்.எஸ்.இ சந்தையில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 82% அதிகரித்து, ரூ.104 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நடப்பு கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாலும், அதற்கு ஏற்றபடி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், நிறுவனத் தின் வருவாய் அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் செயல் பாடுகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்றே அனலிஸ்ட் டுகள் சொல்கிறார்கள். இதன் காரணமாக 18 பங்கு தரகு நிறுவனங்கள் இதன் பங்குகளை வாங்கச் சொல்லியும், 6 பங்கு தரகு நிறுவனங்கள் இந்த பங்கைத் தொடர்ந்து வைத்திருக்கும் படியும் சொல்லியிருக்கின்றன. ஒரே ஒரு பங்குத் தரகு நிறுவனம் மட்டும் இந்த பங்கை விற்பனை செய்யச் சொல்லி இருக்கிறது.’'

எஃப்.பி.ஐ-களின் முதலீடு கடந்த காலாண்டில் குறைந்துள்ளதே?
‘‘கடந்த 2022-2023-ம் நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில், இந்திய பங்குச் சந்தையில் எஃப்.பி.ஐ-களின் (Foreign Portfolio Investment) முதலீடு 11% குறைந்து, 542 பில்லியன் டாலராக உள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 7% குறைந்து, 584 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இது கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 612 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த 2022-23 நிதியாண்டில் உலக அளவில் பெரும்பாலான மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கின. இதன் விளைவாக, இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் இருந்து முதலீட்டுப் பணம் வெளியேறியது. கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளையும், 2022-2023-ம் நிதி ஆண்டில் ரூ. 37,632 கோடி மதிப்புள்ள பங்குகளையும் எஃப்.பி.ஐ விற்று வெளியேறின.’’
எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் பங்கு விலை குறைந்தது ஏன்?
‘‘எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகள் அதன் மார்ச் காலாண்டு முடிவுகளை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, கடந்த மே 17-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை பி.எஸ்.இ சந்தையில் 7% வரை சரிந்து, ரூ.366.80-க்கு வர்த்தகமானது. கடந்த மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 5.5% அதிகரித்து, ரூ.1,180.28 கோடியாக இருந்த போதிலும் பங்கு விலை சரிந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருமானமும் 20.8% அதிகரித்து, ரூ.6,415 கோடியாக உள்ளது. கடந்த மே 18-ம் தேதி வர்த்தகத்தில் இதன் பங்கு விலை மேலும் சரிந்து ரூ.365.65-க்கு விற்பனையானது.’’
ரியஸ் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகளின் நிலை எப்படி?
‘‘கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதையே மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் காட்டுகின்றன. இதன் காரணமாக, பி.எஸ்.இ ரியாலிட்டி இண்டெக்ஸ் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத உச்சநிலையான 3760-ஐ கடந்த மே 15-ம் தேதி வர்த்தகத்தில் தொட்டிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் ரியாலிட்டி இண்டெக்ஸ் 20% அதிகரித்துள்ளது. இதே சமயத்தில், பி.எஸ்.இ சென்செக்ஸ் 5.8% அதிகரித்துள்ளது. மே 15-ம் தேதி வர்த்தகத்தில், மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ், டி.எல்.எஃப், கோத்ரெஜ் புராபர்ட்டீஸ், பிரஸ்டீஜ் எஸ்டேட் புராஜெக்ட்ஸ் மற்றும் ஷோபா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை 5% முதல் 7% வரை ஏற்றம் கண்டன. ஓபராய் ரியாலிட்டி மற்றும் மேக்ரோ டெக் டெவலப்பர்ஸ் (லோதா) ஆகிய பங்குகள் முறையே 4% மற்றும் 3% ஏற்றம் அடைந்தன.’’
ஆர்.எம்.எல் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?
‘‘ஆர்.எம்.எல் (ரானே மெட்ராஸ் லிமிடெட்) நிறுவனத்தின் பங்கு விலை கடந்த மே 17-ம் தேதி வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் 19% வரை அதிகரித்து, ரூ.578.50-க்கு வர்த்தகமானது. ஆர்.எம்.எல் நிறுவனம் எல்.எம்.சி.ஏ (ரானே லைட் மெட்டல் காஸ்ட்டிங் இன்கார்ப்பரேஷன் யூ.எஸ்.ஏ) நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து தங்களை முழுமையாக விளக்கிக் கொள்ள தீர்மானித்திருப்பதாக ஆர்.எம்.எல் நிறுவனத்தின் இயக்குநர் குழு அறிவித்த பிறகு, இந்த விலை ஏற்றம் நடந்திருக்கிறது. ஆர்.எம்.எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானத்தில் எல்.எம்.சி.ஏ நிறுவனத்தின் பங்கு 9.78%. அதாவது, ரூ.231.94 கோடி. சொத்து மதிப்பில் 13.33%. அதாவது, ரூ.32.20 கோடி ஆகும். இந்த முடிவு முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக இருந்ததால், பங்கு விலை உயர்ந்திருக்கிறது.’’
ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் நிறுவனப் பங்கு விலை அப்பர் சர்க்யூட் விலை வர்த்தகமானதே?
‘‘கடந்த மே 17-ம் தேதி வர்த் தகத்தில் 10% அப்பர் சர்க்யூட் விலையான ரூ.581.50-க்கு வர்த் தகமானது. இந்த நிறுவனப் பங்கு விலை மார்ச் 28-ம் தேதிக்குப் பிறகு, கடந்த 11 வாரத்தில் 100% வரை விலை அதிகரித்துள்ளது. அதாவது, மார்ச் 28-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.190.80. இந்த நிறுவனத்தின் ஆர்டர் புத்தம் ரூ.820 கோடியுடன் வலுவாக இருக்கிறது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் செயல் பாடுகள் எதிர்காலத் தில் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்’’ என்ற ஷேர் லக்கின் செல்போனுக்கு ஓர் அழைப்பு வரவே, உடனே டாட்டா காட்டி புறப்பட்டார்!

வளைகுடா & மத்திய கிழக்கு நாடுகள் வாழ் என்.ஆர்.ஐ:வரி முதல் முதலீடு வரை..!
நாணயம் விகடன் நடத்தும் வளைகுடா & மத்திய கிழக்கு நாடுகள் வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு மே 22, 2023 திங்கள்கிழமை இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRI) வருமான வரி முதலீடு / வருமான வரிக் கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடை அளிக்கும் விதமாக இந்த ஆன்லைன் இருக்கும். என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வரும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் பயிற்சி அளிக்கிறார். இவர், ‘ஜி.எஸ்.டி - ஒரே நாடு, ஒரே வரி’ என்கிற நூலை எழுதி இருக்கிறார். ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக்கால அனுபவம் கொண்டவர். இந்த வகுப்பில் கலந்துகொள்ள கட்டணம் ரூ.900. முன்பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N

சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்; தேர்வு செய்யும் எளிய உத்திகள்..!
நாணயம் விகடன் ‘சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்; தேர்வு செய்யும் எளிய உத்திகள்...’ என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளது. நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம், (Holisticinvestment.in) பயிற்சி அளிக்கிறார். ஜூன் 17, 2023, சனிக்கிழமை. (10.30 am to 12 pm) நடக்கிறது. கட்டணம் ரூ.300.
நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம் ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர். நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.
இந்தப் பயிற்சி வகுப்பில் பாதுகாப்பான வழியில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஆரம்பிப்பது எப்படி, சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது எப்படி, எஸ்.ஐ.பி முதலீட்டில் செய்யும் தவறுகள், எஸ்.ஐ.பி முதலீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், இண்டெக்ஸ் ஃபண்ட் Vs ஆக்டிவ் ஃபண்ட், புதிய வருமான வரி விதிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் கற்றுத் தரப்படும். இதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய: https://bit.ly/3nxadc5