பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.சி.எல், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்... ரிசல்ட் எப்படி?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

- காலாண்டு முடிவுகள்

சென்ற நிதியாண்டின் (2022-23) கடைசி காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த வாரத்தில் வெளியிட்ட சில நிறுவனங்களின் முடிவுகள் இனி...

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank)

நமது நாட்டின் இரண்டாவது பெரிய தனியார்துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் மார்ச் காலாண்டில் 30% அதிகரித்து, ரூ.9,122 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 40.2% அதிகரித்து,

ரூ.17,667 கோடியாக உள்ளது. தொடர்ந்து இந்த வங்கி சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்த வங்கிப் பங்குகளின் விலை ஒரு வருட காலத்தில் 25% வரை விலை ஏறும் என்று இந்த வங்கியின் பங்குகளை வாங்க பல பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும், இந்த வங்கி ஒரு பங்குக்கு ரூ.9 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries)

இந்த நிறுவனம், சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.19,299 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால், 19.11% அதிகம் ஆகும். நிறுவனத்தின் நிகர வருமானம் 2.8% அதிகரித்து, ரூ.2.13 லட்சம் கோடியாக உள்ளது.

இந்தக் குழுமத்தின் டெலி கம்யூனிகேஷன் துறை சார்ந்த ஜியோ நிறுவனத்தைத் தனி நிறுவனமாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட இருப்பதாகப் பேச்சு நிலவுகிறது. அவ்வாறு நடக்கும்பட்சத்தில், அது இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான விஷயமாக இருக்கும் என்கிறார்கள். மேலும், இந்த நிறுவனத்தைச் சார்ந்த ரீடெய்ல், பெட்ரோ கெமிக்கல் போன்ற அனைத்துத் துறை களும் சிறப்பான வளர்ச்சியைக் கடந்த காலாண்டில் அடைந்துள்ளன. இந்தக் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக உயரும் எனப் பல பங்குத் தரகு நிறுவனங்கள் இந்த நிறுவனப் பங்கை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

டாடா காபி (Tata Coffee)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 20% அதிகரித்து, ரூ.49 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 10.17% அதிகரித்து, ரூ.723 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.3 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது.

ஹெச்.சி.எல் (HCL)

முன்னணி தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த இந்த நிறுவனத் தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10.8% அதிகரித்து, ரூ.3,983 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 17.7% அதிகரித்து, ரூ.26,060 கோடியாக உள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகள், சந்தை எதிர்பார்ப்புக்கு மாறாகக் குறைவாக வந்த காரணத்தால் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனப் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வந்தன. ஆனால், சந்தை எதிர்பார்ப்பைவிட சிறப்பான வருமானத்தை இந்த நிறுவனம் தந்துள்ளதால், இந்த நிறுவனப் பங்குகள் காலாண்டு முடிவு களுக்குப் பிறகு 3% வரை ஏற்றம் அடைந்தன. மேலும், இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.18 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. இதையும் சேர்த்து இந்த ஆண்டில் மொத்தமாக இந்த நிறுவனம் ரூ.48 டிவிடெண்ட் வழங்குகிறது.

ஹிந்த் ஜிங்க் (Hind Zinc)

மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 12% குறைந்து, ரூ.2,383 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 4% குறைந்து, ரூ.8,281 கோடியாக உள்ளது. ஜிங்க் மற்றும் சில்வர் விலை குறைந்ததால், லாப விகிதத்தை சற்றுக் குறைத்துள்ளது. அதற்கு மாறாக, இந்த ஆண்டில் இந்த நிறுவனம் மிக அதிகபட்சமாக ஒரு மில்லியன் டன் உலோகத்தை உற்பத்தி செய்துள்ளது. இந்த முக்கியமான மைல்கல்லை இந்த நிறுவனம் முதல் முறையாக இந்த ஆண்டு அடைந்துள்ளது. சென்ற நிதியாண்டில் இந்த நிறுவனம் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகபட்ச மாக மொத்தமாக ரூ.10,511 கோடி லாபத்தை ஈட்டியிருந்தது.

காலாண்டு முடிவுகள்
காலாண்டு முடிவுகள்

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டிஸ் (ICICI Securities)

பங்குத் தரகு நிறுவனமான இதன் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 23% குறைந்து, ரூ.263 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 5% அதிகரித்து, ரூ.778 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.9.25 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது. இதையும் சேர்த்து இந்த ஆண்டில் இந்த நிறுவனம் மொத்தமாக பங்கு ஒன்றுக்கு ரூ.19 டிவிடெண்ட் வழங்கி இருக்கிறது.

சென்ற நிதி ஆண்டில் மொத்தமாக 3.7 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதையும் சேர்த்து இந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் நிறுவனம் கையாளும் மொத்த சொத்துகளின் அளவு ரூ.5.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank)

இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக 50% அதிகரித்து, ரூ.2,040 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 17% அதிகரித்து, ரூ 4,669 கோடியாக உள்ளது. மேலும், இந்த வங்கி பங்கு ஒன்றுக்கு ரூ.14 டிவி டெண்ட வழங்க இருக்கிறது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank)

தூத்துக்குடியைத் தலைமை யிடமாகக் கொண்ட இந்த வங்கியின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11% அதிகரித்து, ரூ.253 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 18% அதிகரித்து, ரூ.527 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் செலவினங்கள் 10% வரை அதிகரித்துள்ளது லாப விகிதத்தைக் குறைத்து உள்ளது. மேலும், இந்த வங்கி ரூ.5 டிவிடெண்ட் வழங்க உள்ளது.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக வந்துள்ளது. சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 2.5% குறைந்து, ரூ.1,433 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 12% அதிகரித்து, ரூ.8,904.7 கோடியாக உள்ளது. இந்தக் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட வண்டிகளின் அளவு கணிசமாகக் குறைந்து உள்ளது. ஏற்றுமதி வருவாய் இழப்பை உள்நாட்டில் அதிக வாகனங்களை விற்றதன் மூலமும், அதிகரித்த அமெரிக்க டாலர் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலமும் ஈடு செய்யப்பட்டதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த நிறுவனம் பங்கு ஒன்றுக்கு ரூ.140 டிவிடெண்ட் வழங்கு கிறது.

நெஸ்ட்லே இந்தியா (Nestle India)

முன்னணி எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த இந்த நிறுவனத் தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந் தர அடிப்படையில் 25% அதிகரித்து, ரூ.737 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 21.3% அதிகரித்து, ரூ.4,808 கோடி யாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச வருமானத்தை சென்ற காலாண்டில் அடைந்துள்ள தாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்கு ஒன்றுக்கு ரூ.27 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (HDFC Asset Management Company)

ஹெச்.டி.எஃப்.சி குழுமத் தின் மியூச்சுவல் ஃபண்ட் சேவைகள் வழங்கும் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10% அதிகரித்து, ரூ.376 கோடி யாக உள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 5% அதிகரித்து, ரூ.541 கோடி யாக உள்ளது. சென்ற மாதத் தில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு மத்திய அரசு வரி விதித்தது. அதன் காரண மாக இந்த நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாகச் சரிந்து, அதன் 52 வார குறைந்தபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இந்த இறக்கம் முதலீடு செய்ய ஏற்றது என்று இந்த நிறுவனப் பங்குகளை வாங்க பல பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் (ICICI Prudential)

ஆயுள் காப்பீடு வழங்கும் முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் இது ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 26% அதிகரித்து, ரூ.235 கோடியாக உள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பை ‘எம்படெட் வேல்யூ’ என்று அழைப்பார்கள். இந்த நிறுவனத்தின் ‘எம்படெட் வேல்யூ’ கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும், புதிய காப்பீட்டு வருமானம் சென்ற நிதியாண்டில் 28% அதிகரித்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுள் காப்பீட்டு நிறுவனப் பங்குகள் பெரும்பாலும் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை வழங்கி இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் தற்போதைய காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு இந்த நிறுவனப் பங்கின் விலை 30% வரை விலை ஏறும் என்று கணித்துள்ள பங்குத் தரகு நிறுவனங்கள் சில, பங்கை வாங்கவும் பரிந்துரை செய்துள்ளன.

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Tata Consumer Products)

சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக சென்ற மார்ச் காலாண்டில் முடிவுகள் வந்துள்ளன. அதாவது, வருடாந்தர அடிப்படையில் 23.5% அதிகரித்து, ரூ.268.6 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,175 கோடியாக இருந்தது. அதுவும் தற்போது இரட்டை இலக்கத்தில் உயர்ந்து, ரூ.3,618.7 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் பொருள்களின் விற்பனை அளவும் கணிசமாக உயர்ந்துள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் அங்கமான டாடா ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தின் விற்பனையும் சிறப்பாக இருப்பதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்