
ஷேர் மார்க்கெட் ஸ்ட்ராட்டஜி! - 8
பீட்டர் தியல் (Peter Thiel) எழுதிய ‘ஜீரோ டு ஒன்’ என்னும் புத்தகத்தில் தொழில் ரீதியாக ஏகபோக (Monopoly) நிலையை அடையும் அளவுக்கான ஒரு நிறுவனத்தை உருவாக்குவது எப்படி என்று விளக்கியுள்ளார். புதிய தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனத்தை ஏகபோக நிலைக்குக் கொண்டு செல்வது எப்படி என்பதற்கான ஆலோசனை களை இந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார் பீட்டர் தியல்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்...
இந்த விஷயத்தில் அவர் முக்கியமாக சொல்வது, போட்டி குறைவாக இருக்கும் தொழிலில் பயன்படுத்தப்படாத வாய்ப்பு களைக் கண்டறிந்து அதில் உள்ள பிரத்யேக மான (niche) தேவைகளைப் பூர்த்தி செய்வதற் கான முயற்சிகளை சிறிய அளவில் எடுக்க வேண்டும் என்பதைத்தான்.
இதற்கு அடுத்தபடியாக, பங்களிப்பை செய்துவரும் சந்தையை ஏகபோக நிலைக்கு சென்று அத்துடன் நின்றுவிடாமல் அந்தத் தயாரிப்பு அல்லது சேவையுடன் இணைந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் தொழிலில் ஈடுபட வேண்டும்.
இந்த ஏகபோக நிலைக்கு செல்ல (1) சொந்த மான தொழில்நுட்பம், (2) நெட்வொர்க் எஃபெக்ட், (3) எகனாமீஸ் ஆஃப் ஸ்கேல் (குறைந்தபட்ச பொருள் செலவில் அதிக அளவு உற்பத்தி செய்யும் நிலை), (4) பிராண்ட் ஆகிய நான்கு முக்கியமான குணாதிசியங்கள் இருப்பது மிக மிக அவசியம் என்று சொல்கிறார் தியல்.
ஏகபோகத்தை உருவாக்கும் ஃப்ளோசார்ட்...
இந்தப் புத்தகத்தின் மூலம் தியல் சொல்லும் இந்த ஆலோசனைகள் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கானது என்றபோதிலும் இந்தியாவில் பழம்பெரும் தொழில்களில் இது போன்ற ஏகபோக நிலையில் செயல்படும் நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. இந்த நிலையை அடைய சில நடைமுறைகளையே அந்த நிறுவனங்கள் கடைப்பிடித்தன (பார்க்க கீழே உள்ள ஃப்ளோசார்ட் பிரேக் வொர்க்). இந்த ப்ரேம் வொர்க்கை உபயோகித்து பி-டு-சி (BtoC) துறையில் சிறப்பாகச் செயல்படுகிற நிறுவனங்கள் குறித்து பார்ப்போம்.

பி-டு-சி-யில் இருக்கிற சவால்கள்...
இந்தியாவைப் போன்ற பெரிய நிலப்பரப்பில் இருக்கும் நாட்டில் விநியோகத்துக்கான நெட்வொர்க்கை உருவாக்கு வதில் பல்வேறு இடைஞ்சல்கள் இருக்கவே செய்கின்றன. ஏனெனில், குறைந்த அளவிலான பொருள்களைக் கொண்டு சேர்க்கும் போக்குவரத்து வசதிகள், பல்வேறு வகையில் மாறுபடும் டிமாண்ட் கொண்ட பகுதிகள், குடும்பங்களின் மாறுபடும் வருமான அளவுகள் போன்றவை இது போன்ற இடைஞ்சலுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
இது தவிர, வாடிக்கையாளரை சென்றடைய எக்கச்சக்கமான கடைகள் வாயிலாகவே பொருள்கள் விற்கப்பட வேண்டி உள்ளது. கிட்டத்தட்ட 90 பொருள்கள் இதுபோன்ற சிறு கடைகள் வாயிலாகவே விநியோகம் செய்யப்படுகிறது. இதைச் சுலபமாக கையாள மூன்றாம் நபர் டிஸ்ட்ரிப்யூட்டர்கள், ஹோல்சேலர்கள், ஸ்டாக்கிஸ்ட்டுகள் போன்ற பல அடுக்குகள் வாயிலாக தகுந்த லாப விகிதத்தைத் தரும் அளவில் நெட் வொர்க் ஒன்றை அமைக்க வேண்டியுள்ளது.
தடைகளை உடைத்த ஏசியன் பெயின்ட்ஸ், பிடிலைட்...
ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் பிடிலைட் போன்ற நிறுவ னங்கள் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடும் வழிகளைக் கண்டு பிடித்து பின்பற்றி லாபம் கண்டன. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் இதுபோன்ற இடை நிற்றல்களை அறவே ஒழித்துக் கட்டி நேரடியாக தன்னுடைய பொருள்களை டீலர்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் தன்னுடைய லாபத்தில் கணிசமான பகுதியை நிலை நிறுத்தியது. ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறைகூட பொருள்களை டெலிவரி தரும் திறனைப் பெற்றதன் மூலம் கணிசமான அளவில் லாபம் பார்த்தது ஏசியன் பெயின்ட் நிறுவனம். இந்த அளவிலான திறனைப் பெற எதிர்காலத்தில் வரக்கூடிய டிமாண்ட் குறித்த கணிப்புகளைச்செய்வதற்கான கட்டமைப்பில் தேவையான அளவிலான முதலீடுகளைச் செய்தது இந்த நிறுவனம்.
அதே போல, பிடிலைட் நிறுவனமும் தனது தயாரிப்பு களை உபயோகிக்கும் நபர் களுக்கு பயிற்சி அளித்து அவர் களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டதன் மூலம் வாடிக்கை யாளர்களை நேரடியாக சென்றடையும் முயற்சிகளில் வெற்றியும் பெற்றது.

ரீடெயில் கடன் வழங்குதலில் இருக்கும் சவால்கள்...
சிபில் ஸ்கோர் அதிகம் இருக்கும் நபர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கி வியா பாரத்தை விருத்தி செய்வது ஒரு சுலபமான வழி. இதில் லாபம் குறைவு. ஏனென்றால், சிபில் ஸ்கோர் அதிகம் இருந்தால் வட்டி விகிதத்தைக் குறைவாக நிர்ணயிக்க வேண்டியுள்ளது. இதில் ஒரு புதுமையான முயற்சி யாக (Innovation) ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஒரு வழியைக் கண்டு பிடித்தது. அதாவது, காசா (CASA) ரேஷியோவை அதிகரித்து (கரன்ட அக்கவுன்ட் – சேவிங்க்ஸ் அக்கவுன்ட்-என்னும் குறைந்த வட்டியில் வங்கிக்குப் பணம் கிடைக்கும் கணக்கு களை அதிகரித்து) அதன் மூலம் குறைந்த வட்டிக்குப் பணத்தை வாடிக்கையாளர்களிட மிருந்து பெற்று, அதிக தரம் கொண்ட ரீடெயில் கடன் களைக் குறைந்த வட்டியில் தந்தது.
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனமோ கடன் வாங்கும் வாடிக்கையாளர்களின் டேட்டாக்களில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கடன் வாங்குபவர்களின் தேவைகளையும் அவர்களு டைய திரும்பிச் செலுத்தும் திறனையும் கண்டறிந்து அதற் கேற்ப கடனை வழங்கியது. இதில் சிபில் ஸ்கோரை முற்றிலுமாக இந்த நிறுவனம் பயன்படுத்தவே இல்லை.
ரீடெயில் துறையில் கிளைகளை நிறுவுவதில் இருக்கும் சவால்கள்...
ரீடெயில் துறையில் ரியல் எஸ்டேட்டின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. வாடகை அதிகமாக இருப்ப தால், லாபத்தில் கணிசமான தொகை இதற்கென செல வாகிவிட வாய்ப்புள்ளது. எங்கே கடை வைப்பது, எந்த அளவு கடை வைப்பது, எந்தப் பொருள்களை எந்தக் கடையில் அதிகமாக வைத்து விற்பது போன்றவற்றைத் தெரிந்துகொண்டும், முறைப் படுத்தப்படாத போட்டி யாளர்கள் தரும் போட்டியைச் சமாளித்தும், அதிக அளவில் அடிக்கடி பணிமாறுகிற பணியாளர்களை சமாளித்தும் இந்தத் துறையில் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.
டாக்டர் லால்பாத் நிறுவனம்...
டாக்டர் லால்பாத் நிறுவனம் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியதன் மூலம் கலெக்ஷன் சென்டர்கள் மற்றும் லேப்புகளின் விரிவாக்கத்தை மெதுவாகச் செய்தும் வெற்றி பெற்றது. ஃப்ரான்சைஸ் வாயிலாக சேம்பிள்களை கலெக்ஷன் செய்தபோதும் டெக்னா லஜியின் வாயிலாக அவற்றைக் கவனமாகக் கையாண்டு வெற்றி பெற்றது. இதனாலேயே ரீடெயில் துறையில் செயல்பட்டபோதும் இந்த நிறுவனத்தினால் அதிக லாபத்தை ஈட்ட முடிந்தது. ஏனைய ரீடெயில் நிறுவனங்கள் வாடகை அதிகமாக இருப்பதால், செலவுகளை அதிகமாக செய்துவந்த வேளையில், இந்த நிறுவனம் முதலீட்டில் நல்ல லாபத்தை ஈட்டியது.
முதலீடு செய்வதில் இதன் தாக்கம் என்ன?
ஏகபோக நிறுவனங்கள் அதிகமான ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை உருவாக்குகின்றன. தொடர்ந்து வளர்ச்சி யையும் நல்லதொரு ROCE-யையும் தருவதாக உள்ளன. இந்த அதிக அளவிலான கேஷ்ஃப்ளோ உருவாக்க மானது தங்கள் தொழில் புதுமைகளைப் படைக்கவும், போட்டியாளர்களிடம் இருந்து அதிக தூரம் முன்னேறிச் செல்லவும் வைக்கிறது.
மேலும், இந்தப் புத்தகத் தில் பீட்டர் தியல் சொல்லி யுள்ள மற்றொரு விஷயத் தையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஏகபோக நிலையில் இருக்கும் நிறுவனங்கள் தாங்கள் கடுமையான போட்டியில் இருப்பது போல தங்களைக் காட்டிக்கொள்ளும். ஆனால், ஏகபோக நிலையில் இல்லாமல் இருக்கும் நிறுவனங்கள் தாங்கள் அந்த நிலையில் இருப்பதாக போலியாக காட்டிக்கொள்ள முயலும். ஏனென்றால், இதில் உள்ள வித்தியாசம் மிக மிக நுட்பமானதும் சிறிதாகவும் உள்ளது என்பதால், மேலே தரப்பட்டுள்ள பிசினஸ் ஃப்ரேம் வொர்க்கைக் கொண்டு எந்த நிறுவனம் ஏகபோக நிலையில் இருக்கிறது, எந்த நிறுவனம் அந்த நிலையில் இல்லை என்பதை நீங்களே கண்டு பிடித்துக்கொள்ள முடியும்.
(ஸ்ட்ராட்டஜி தொடரும்)