மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் போர்ட்ஃபோலியோ: இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு என்ன..? - தொடர் 14

ஷேர் போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் போர்ட்ஃபோலியோ

டெக் மஹிந்திரா பல துறைகளில் ஈடுபட்டுவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் தனது மொத்த வருவாயில் 40 சதவிகிதத்தை டெலிகாம் பிரிவிலிருந்து ஈட்டுகிறது...

போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளில் முக்கியமான நிறுவனமான பாரத் ஃபோர்ஜ், சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஏரோ இந்தியா கண்காட்சியில் பங்கெடுத்துக் கொண்டது. ஆரம்பத்தில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனம், ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனமாகவே அறியப்பட்டது. நாளடைவில் இந்த நிறுவனம் பல துறைகளுக்கும் தன்னுடைய தொழில்களை விரிவுபடுத்தி வந்திருக்கிறது. தற்போது ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத்துறை ஆகிய வற்றுக்கும் தயாரிப்பு களை உற்பத்தி செய்து வருகிறது.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, 
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.

மேலும், இந்த நிறுவனம் பாராமவுன்ட் குழுமத்துடன் மீடியம் லிஃப்ட் ஹெலிகாப்டர் களுக்கான காம்போசைட் ரோட்டர் பிளேடுகள், மிஷன் சிஸ்டம் மற்றும் ஸ்டோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக பாரத் ஃபோர்ஜ் நிறுவனத் தின் ஏரோஸ்பேஸ் பிரிவின் தலைமை செயல் அதிகாரி குரு பிஸ்வால், “நாட்டின் ‘ஆத்ம நிர்பார்’ இலக்கை எட்டுவதற்கு பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்களிப்பில் இது ஒரு முக்கியமான முயற்சியாகும். இந்தியாவுக்கும் அதே சமயம், வெளிநாடுகளுக்கும் தேவையான தயாரிப்புகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, ஹெலிகாப்டர் ரோட்டர் பிளேடுகள், மிஷன் சிஸ்டம் மற்றும் ஸ்டோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற வற்றுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்குத் தனித்துவமான தொழில்நுட்ப மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். பாரமவுன்ட் குழுமத்துடனான தொழில் கூட்டு மூலம் ஏரோஸ்பேஸ், பாதுகாப்புத் துறையில் பல ஆக்கபூர்வமான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.எனவே, பாரத் ஃபோர்ஜ் நிறுவனம் இதன்மூலம் சிறப்பான வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

ஷேர் போர்ட்ஃபோலியோ:
இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு என்ன..? - தொடர் 14

தற்போது நம் போர்ட்ஃபோலியோவுக்கு வருவோம். பொறுத்தார் பூமியாள்வார் என்பது போல, மிகப் பொறுமையாகவே நம்முடைய போர்ட் ஃபோலியோவை உருவாக்கி வருகிறோம். தரமான பங்குகளைத் தேர்வு செய்து வாங்கி வருகிறோம். நாம் வாங்குகிற பங்குகளுக்கு இலக்கு விலையையும் தந்து வருகிறோம். பங்குகள் அவற்றின் இலக்கு விலைகளை எப்போது எட்டும் என்று உறுதி யாகச் சொல்ல முடியாது. ஆனால், நாம் வாங்குகிற பங்குகள் தர மானவை என்பதால், அவை இலக்கு விலையை எட்ட வாய்ப்புகள் அதிகம்.

இதுவரை நம்முடைய போர்ட் ஃபோலியோவில் மொத்தம் 9 பங்குகளை வாங்கியிருக்கிறோம். அவற்றில் இலக்கு விலையை எட்டும் என எதிர்பார்த்த பங்குகள் பல இன்னும் இலக்கு விலையை எட்டாவிட்டாலும், இவ்வளவு விரைவில் இலக்கு விலையை எட்டும் என எதிர்பார்க்காத சென்சார் டெக் பங்கு, அதற்குக் கொடுக்கப்பட்ட இலக்கு விலையை கடந்த வாரத்தில் எட்டியிருக்கிறது.

எனவே, அந்தப் பங்குகளை 293 என்ற விலையில் விற்று வெளி யேறி இருக்கிறோம். நாம் வாங்கிய விலையைவிட கிட்டத்தட்ட 28% வளர்ச்சியில் இந்தப் பங்கை விற்று லாபம் எடுத்திருக்கிறோம்.

போர்ட்ஃபோலியோவில் இருந்த ஒரு பங்கை விற்று வெளி யேறி இருப்பதால், இந்த வாரம் டெக் மஹிந்திரா பங்கை நாம் வாங்கி, நம்முடைய போர்ட் ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு: டெக் மஹிந்திரா

வாங்க வேண்டிய விலை: ரூ.1,140

இந்தப் பங்கை நாம் ஏன் வாங்கு கிறோம் என்பதற்குப் பல காரணங் கள் உள்ளன. டெக் மஹிந்திரா பல துறைகளில் ஈடுபட்டுவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் தனது மொத்த வருவாயில் 40 சதவிகிதத்தை டெலிகாம் பிரிவிலிருந்து ஈட்டு கிறது. 5ஜி அலைக்கற்றை செயல் படுத்தலில் பயன் அடையும் முன்னணி நிறுவனமாகவும் டெக் மஹிந்திரா விளங்குகிறது.

தொழில்களை டிஜிட்டல் மய மாக்குவதில் 5ஜி தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த நிலையில் 5ஜி, கிளவுட், மென் பொருளாக்கம் உள்ளிட்டவை தகவல்தொடர்பு சார்ந்த வருவாயை அதிகப்படுத்தும். நீண்ட காலத்தில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். மேலும், இந்த நிறுவனத்தின் தொழில் ஒப்பந்தங்களும் சிறப்பாக உள்ளன. 700 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை இதன் தொழில் ஒப்பந்தங்களின் மதிப்பு உள்ளது.

ஷேர் போர்ட்ஃபோலியோ:
இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு என்ன..? - தொடர் 14

இந்த நிலையில், டெக் மஹிந்திரா நிறுவனம் குறுகிய காலத்தில் 14% - 15% சதவிகிதம் வரை லாபம் ஈட்ட இலக்கு வைத்திருக்கிறது. இதற்காக குறைவான லாபம் உள்ள போர்ட்ஃபோலியோக்களைத் தவிர்த்துவிட்டு, நிலையான விலை நிர்ணயம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், ஆஃப் ஷோரிங் மற்றும் பிரமிட் ஆகியவற்றின் மூலம் தொழில் நடவடிக்கைகளை வழிநடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை, 2025-ம் நிதி ஆண்டின் இ.பி.எஸ் கணிப்பில் 14X-ஆக உள்ளது. இது 5 ஆண்டு சராசரி பி.இ விகிதத்தில் 16X மதிப்பைவிடவும் குறைவு என்பதால், இந்தப் பங்கின் விலை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

முக்கியமாக, இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் குறுகிய காலத்தில் நிறுவனத்துக்குச் சாதகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

நம் போர்ட்ஃபோலியோவில் சமீபத்தில் வாங்கிய டி.சி.பி.எல் பங்கை ரூ.1,440-ல் வாங்கியிருந்தோம். இந்தப் பங்குக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் 10,000 ரூபாயை முதலீடு செய்து சராசரி செய்வதற்கான விலையை அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். பங்குகளுக்கான இலக்கு விலையை யும், சராசரி செய்வதற்கான விலையையும் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். போர்ட்ஃபோலியோவில் அடுத்த வாரம் செய்ய வேண்டிய மாற்றங்களுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்.

ஷேர் போர்ட்ஃபோலியோ விதிமுறைகள்...

1. பங்குப் பரிந்துரைகள், அவற்றின் விலை நகர்வுகள் ஆகியவை திங்கள் முதல் புதன் வரையிலான மூன்று வர்த்தக தினங்களுக்கானதாக மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவும். 2. பரிந்துரைக்கப்படும் பங்குகள் திங்கள் முதல் புதன் வரையிலான வர்த்தக நாள்களில் குறிப்பிடப்படும் விலை வரம்புக்குள் வந்தால் மட்டுமே அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். 3. குறிப்பிட்ட விலை வரம்புக்குள் வராத பங்குகளை வாங்கக் கூடாது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்