மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள நிறுவனங்களின் லாப வளர்ச்சி எப்படி..? - ஷேர் போர்ட்ஃபோலியோ: 25

ஷேர் போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் போர்ட்ஃபோலியோ

வங்கித்துறை, ஐ.டி போன்ற சில துறைகள் நான்காம் காலாண்டை மிகச் சிறப்பாக நிறைவு செய்துள்ளன!

2022-23 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகி வருகின்றன. வங்கித்துறை, ஐ.டி போன்ற சில துறைகள் நான்காம் காலாண்டை மிகச் சிறப்பாக நிறைவு செய்திருக்கின்றன. நம் போர்ட் ஃபோலியோவில் உள்ள நிறுவனங்கள் சிலவற்றின் காலாண்டு முடிவுகளும் வெளி வந்துள்ளன. பங்குகளில் முதலீடு செய்யும் போது அவற்றின் தொடர்ச்சியான நிதிநிலை செயல்பாடுகளையும் கவனிப்பது அவசியம். எனவே, இந்தப் பகுதியில் இதுவரையில் நம்முடைய போர்ட்ஃபோலியோவில் வாங்கி இருக்கும் நிறுவனப் பங்குகளில் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ள நிறுவனங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஏ.கே.பிரபாகர்
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு,
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.

நம்முடைய போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளில் பாரத் ஃபோர்ஜ், புளூடார்ட் எக்ஸ்பிரஸ், டாடா பவர், ஐசிஐசிஐ புரூ லைஃப், டெக் மஹிந்திரா, டிவி18 பிராட்காஸ்ட், மஹிந்திரா சி.ஐ.இ ஆட்டோமோட்டிவ் ஆகியவற்றின் 2022-23 நிதி ஆண்டின் மார்ச் காலாண்டு முடிவுகள் வந்திருக்கின்றன.

பாரத் ஃபோர்ஜ் இந்தக் காலாண்டில் ரூ.3,629.05 கோடி அளவுக்கு நிகர விற்பனையைப் பதிவு செய்திருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் பதிவானதை விடவும் 1.57% அதிகமாகும். அதே போல, இதன் நிகர லாப வளர்ச்சியும் முந்தைய நிதி ஆண்டைவிடவும் 6.32% அதிகரித்து, ரூ.250.62 கோடியாக வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், எபிட்டா வளர்ச்சியைப் பார்க்கும்போது, 22.08% குறைந்து, ரூ.496.26 கோடியாக இருக்கிறது.

நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள
நிறுவனங்களின் லாப வளர்ச்சி எப்படி..? - ஷேர் போர்ட்ஃபோலியோ: 25

புளூடார்ட் எக்ஸ்பிரஸ் மார்ச் காலாண்டு முடிவைப் பார்க்கும்போது, நிகர விற்பனை வளர்ச்சி முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டைக் காட்டிலும் 4.34% அதிகரித்து, ரூ.1,216.55 கோடியாக இருக்கிறது. ஆனால், நிகர லாப வளர்ச்சி முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.136.97 கோடியாக இருந்தது கடந்த மார்ச் காலாண்டில் ரூ.69.44 கோடியாகக் குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 49.3% குறைவாகும். அதே போல, எபிட்டா வளர்ச்சி யும் 29.62% குறைந்து, ரூ.207.90 கோடியாக இருக்கிறது.

டாடா பவர் நிறுவனத்தின் நிகர விற்பனை வளர்ச்சி மார்ச் காலாண்டில் ரூ.12,453.76 கோடியாக இருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டைக்காட்டிலும் 4.13% அதிகம் ஆகும். நிகர லாப வளர்ச்சியைப் பார்க்கும்போது, 54.58% உயர்ந்து, ரூ. 777.73 கோடியாகப் பதிவாகி இருக்கிறது. எபிட்டா வளர்ச்சியும் 31.54% அதிகரித்து, ரூ.2,799.25 கோடியாக இருக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் மார்ச் காலாண்டில் முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26% அதிகரித்து, ரூ.235 கோடி நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் புதிய பிசினஸ் பிரீமியம் 18% அதிகரித்து, ரூ.5,635 கோடியாக இருக்கிறது.

டெக் மஹிந்திரா நிறுவனத் தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் முந்தைய நிதி ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 26% குறைந்து, ரூ.1,118 கோடியாக உள்ளது. ஆனால், நிறுவனத்தின் நிகர வருமானம் 13% அதிகரித்து, ரூ.13,718 கோடியாக உள்ளது.

டிவி18 பிராட்காஸ்ட் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகளைப் பார்க்கும் போது அதன் ஒருங்கிணைந்த நிகர லாப வளர்ச்சி வருடாந்தர அடிப்படையில் 91.09% குறைந்து ரூ.19.66 கோடியாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டின் மார்ச் காலாண்டில் ரூ.220.85 கோடி நிகர லாபம் ஈட்டியிருக்கிறது.

சென்ற மார்ச் காலாண்டில் இதன் நிகர லாபம் குறைந்ததற்கு இந்த நிறுவனத்தின் விளம்பரப் பிரிவு வருமானம் குறைந்ததே காரணம் எனத் தெரிகிறது. மேலும், செலவினங்களும் வருடாந்தர அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த மார்ச் காலாண்டில் 10.48% அதிகரித்து, ரூ.1,413.49 கோடியாக உள்ளது.

மஹிந்திரா சி.ஐ.இ ஆட்டோமோட்டிவ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.2,440.2 கோடி வருவாய் பதிவு செய் திருக்கிறது. அதே போல, ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.279 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் செலவினங்கள் பார்க்கும்போது ரூ.2,166 கோடியாக இருக்கிறது.

இதுவரை 14 பங்குகளில் ரூ.2,51,044 முதலீடு செய்திருக்கிறோம். கைவசம் ரூ.48,956 இருக்கிறது. இதுவரை வாங்கிய பங்குகளில் மூன்று பங்குகளில் தலா ரூ.10,000 முதலீடு செய்திருக்கிறோம். அந்த மூன்று பங்குகளிலும் மேலும் ரூ.10,000 முதலீடு செய்து சராசரி செய்ய வேண்டும். இதுவரை வாங்கிய பங்குகளில் சென்சார் டெக் பங்கு மட்டுமே இலக்கு விலையை எட்டியதால் விற்கப்பட்டிருக்கிறது. அந்தப் பங்கில் ரூ.5,720 லாபம் எடுத்திருக்கிறோம்.

நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள
நிறுவனங்களின் லாப வளர்ச்சி எப்படி..? - ஷேர் போர்ட்ஃபோலியோ: 25
நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள
நிறுவனங்களின் லாப வளர்ச்சி எப்படி..? - ஷேர் போர்ட்ஃபோலியோ: 25

கடந்த வாரம் நம்முடைய போர்ட்ஃபோலியோவில் வாங்கப் பரிந்துரை செய்த என்.சி.சி. லிமிடெட் பங்கு கடந்த திங்கள் (8.5.2023) அன்று நாம் குறிப்பிட்டிருந்த ரூ.124 என்ற விலைக்குக்கீழ் இறங்கி வர்த்தகமானது. எனவே, 10,000 ரூபாயை முதலீடு செய்து 80 பங்குகளை வாங்கி போர்ட் ஃபோலியோவில் சேர்த்திருக்கிறோம்.

இந்த வாரம் நாம் புதிதாக எந்தப் பங்கையும் வாங்கப் போவதில்லை. 14 பங்குகள் வாங்கிவிட்டோம். இன்னும் ஒரு பங்கு மட்டுமே வாங்க முடியும். எனவே, போர்ஃபோலியோவை நிதானமாகக் கொண்டுசெல்வோம்.

பங்குச் சந்தை தற்போது ஏற்றத்தின் போக்கில் உள்ளதால், பங்குகளுக்குத் தரப்பட்டு உள்ள இலக்கு விலையை சில பங்குகள் எட்ட வாய்ப்பு உள்ளதால், போர்ட்ஃபோலியோவைக் கவனமாகப் பின்பற்றுவது அவசியம். அத்துடன், சராசரி செய்ய வேண்டிய பங்குகளின் விலையையும் கவனித்துவர வேண்டும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்