
ஷேர் போர்ட்ஃபோலியோ 4
இந்தியாவில் அண்மைக் காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. உதாரணத்துக்கு, பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் (BSE) கடந்த சுமார் 150 நாள்களில் 1 கோடி கணக்குகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பங்கு முதலீட்டாளர்கள்...
அந்த வகையில், பி.எஸ்.இ தளத்தில் முதலீடு செய்பவர் களின் எண்ணிக்கை 12 கோடியைத் தொட்டுள்ளது. சி.டி.எஸ்.எல்-ல் 7.5 கோடி டீமேட் கணக்குகளும், என்.எஸ்.டி.எல்-ல் 3 கோடி டீமே ட் கணக்குகள் ஆக மொத்தம் கிட்டத்தட்ட 10.5 கோடி டீமேட் கணக்குகள் இருக்கின்றன. இதில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்ளும் இருக்கிறார்கள்.
பி.எஸ்.இ-யில் மொத்தமாக உள்ள 12 கோடி முதலீட்டாளர் களில் 42% பேர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், 23% பேர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள், 11% பேர் 40 முதல் 50 வயதுக் குட்பட்டவர்கள் ஆவார்கள். 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் பஙளிப்பு 65 சதவிகிதமாகும்.
பி.எஸ்.இ பங்குச் சந்தை யில் அதிக எண்ணிக்கையில் முதலீடு செய்யும் மாநிலங் களின் பட்டியலில் மகா ராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. 12 கோடி முதலீட் டாளர்களில் 20% பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வர்கள். 2-வது இடத்தில் குஜராத் (10%), 3-வது இடத் தில் உத்தரப்பிரதேசம் (9%) உள்ளது. 6% முதலீட்டாளர் களைக் கொண்டு தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் 4-ம் இடத்தில் உள்ளன.

ஷேர் போர்ட்ஃபோலியோ
இப்போது நம் ஷேர் போர்ட்ஃபோலியோவுக்கு வருவோம். கடந்த வார ஷேர் போர்ட்ஃபோலியோவில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப், சென்சார்டெக்ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகள் பரிந்துரை செய்திருந்தோம். அவற்றை எந்த விலையில் வந்தால் வாங்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப் ரூ.465-க்குக் கீழ் வந்தால் வாங்கலாம்; சென்சார்டெக் ரூ.232-க்குக் கீழ் வந்தால் வாங்கலாம்; இரு பங்குகளிலும் தலா 20,000 ரூபாயை முதலீடு செய்யலாம் எனக் குறிப் பிட்டிருந்தோம். அவ்வாறு குறிப்பிட்டிருந்த விலைக்கு இரண்டு பங்குகளும் வந்துள்ளன.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையே இரு பங்குகளையும் வாங்கியிருப்போம். அந்த வகையில் ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக முதலீடு செய்யப்பட்டுவிட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப் 457 ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும், சென்சார் டெக் பங்கை 228 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். இரு பங்குகளையும் திங்கள்கிழமையின் அதிகபட்ச விலையில்தான் வாங்கியிருப்பதாக எடுத்திருக்கிறோம்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப் பங்குக்கு இலக்கு விலை 540 ரூபாய் எனவும் சென்சார்டெக் பங்கின் இலக்கு விலை ரூ.278 என வைத்துக்கொள்வோம். இவை நீண்ட கால இலக்கு விலை ஆகும். ஓராண்டுக்கு சராசரியாக 15 சதவிகித வருமானத்தை எதிர்பார்த்து இந்த போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளோம். குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலை ஏறினால், அதே போல் மற்ற பங்குகளின் விலையும் ஏறும் என எதிர்பார்க்கக் கூடாது.
மிக நீண்ட முதலீடு என்பதால் புளூ டார்ட் எக்ஸ்பிரஸ் பங்குக்கு இலக்கு விலை கொடுக்கவில்லை. ஐந்தாண்டுக் காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்குக்கு மேல் விலை ஏற வாய்ப்பிருக்கிறது.
பேங்க் ஆஃப் பரோடா பங்கு இறக்கம் காண்பதற் கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, அதற்கு இலக்கு விலையை நிர்ணயித்திருக்கிறோம். பாரத் ஃபோர்ஜுக்கும் இலக்கு விலை தந்திருக்கிறோம். அந்த இலக்கு விலையை எட்டியதும் விற்றுவிட்டு வெளியேறலாம்.
டிசம்பர் 14 நிலவரப்படி நம் முதலீட்டுக் கலவை ஒட்டுமொத்தமாக்க 82,327 ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

டாடா பவர்
இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு டாடா பவர் ஆகும். இதன் பங்குச் சந்தை மதிப்பு ரூ.70,500 கோடியாகும். 107 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த
மின்சார நிறுவனமாகும். மின் உற்பத்தி, பகிர்வு, விநியோகம் ஆகியவற்றில் பரந்து விரிந்துள்ளது. மின்சார வாகன உள்கட்டமைப்பு உருவாக்கம், சோலார் மின் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தல் ஆகியவற்றையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
டாடா பவர் மற்றும் துணை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உற்பத்தித்திறன், 13,735 MW-ஆக உள்ளது. குஜராத் மாநிலம் முந்த்ரா மின்சார ஆலையானது குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு லாபகரமாக மின் விநியோகம் மேற்கொண்டு வருகிறது. டாடா பவர் நிறுவனத்தின் வருவாய் 2026-27-ம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் நிகர லாபம் நான்கு மடங்கு அதிகரிக்கும் எனலாம்.
சோலார் இ.பி.சி வருமானம், தற்போதைய ரூ.6,000 கோடியிலிருந்து 2026-27-க்குள் ரூ.20,000 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டாடா பவர் நிறுவனம், சுமார் 15,000 கோடி மதிப்புள்ள 3,800 மெகா வாட்ஸ் பணி ஆணையைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம், அதன் கடன்களைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
ஷேர் போர்ட்ஃபோலியோ விதிமுறைகள்
1. பங்குப் பரிந்துரைகள், அவற்றின் விலை நகர்வுகள் ஆகியவை திங்கள் முதல் புதன் வரையிலான மூன்று வர்த்தக தினங்களுக்கானதாக மட்டுமே வழங்கப்படுகின்றன.
2. பரிந்துரைக்கப்படும் பங்குகள் திங்கள் முதல் புதன் வரையிலான வர்த்தக நாள் களில் குறிப்பிடப்படும் விலை வரம்புக்குள் வந்தால் மட்டுமே அந்தப் பங்குகளை வாங்க வேண்டும்.
3. குறிப்பிட்ட விலை வரம்புக்குள் வராத பங்குகளை வாங்கக் கூடாது.
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.
(போர்ட்ஃபோலியோ தொடரும்)
தமிழில்: சி.சரவணன்