
ஷேர் போர்ட்ஃபோலியோ - 6
நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 29-க்குப் பதிலாக, டிசம்பர் 23-ம் தேதியே முடிந்துவிட்டது. 17 அமர்வு கள் திட்டமிடப்பட்ட நிலையில் 13 அமர்வுகள் மட்டுமே நடந்தன. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோ தாக்கள் நிறைவேற்றத் திட்டமிட்டப்பட்டு இருந் தன. ஆனால், மக்களவையில் 7 மசோதாக்களும் மாநிலங்கள் அவையில் 9 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தள வாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டு உள்ளது. ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல்படை ஆகிய வற்றுக்கு மொத்தமாக 24 தளவாடங்கள் ரூ.84,328 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தரைப்படை போர் வாகனங்கள், இலகுரக டேங்குகள் மற்றும் ஏவுகணை கட்டமைப்புகள் ஆகியவை அடங்கும். இவற்றில் 98% கொள்முதல் உள்நாட்டுத் தயாரிப்புகளாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இதன்மூலம் பயனடையும் நிறுவனங்களில் ஒன்றாக நம்முடைய போர்ட்ஃபோலி யோவில் உள்ள பாரத் ஃபோர்ஜ் (BHARAT FORGE) விளங்குகிறது. பாரத் ஃபோர்ஜ் அதிக செயல்திறன் மிக்க, புதுமையான பாது காப்பு சார்ந்த உபகரணங்கள், சிஸ்டம்களை வழங்கி வருகிறது. உலகின் ஐந்து நாடுகளில் இந்த நிறுவனம் தன்னுடைய பிசினஸை மேற்கொண்டு வருகிறது.கல்யாணி என்ற பிராண்டின் கீழ் கிரீன் ஸ்டீல் பயன்படுத்தி ஃபோர்ஜிங் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் ‘விஷன் 2030’ என்ற திட்டமிடலைக் கொண்டு உள்ளது. ஆண்டுக்கு 12% - 15% வருவாய் வளர்ச்சியை அடைய இலக்கு நிர்ணயித்து உள்ளது.
பாரத் ஃபோர்ஜ் பங்கில் ஏற்கெனவே ரூ.10,000 முதலீடு செய்திருக்கிறோம். அடுத்த 10,000 ரூபாயை முதலீடு செய்வதற்கு ‘வாங்கும் விலை’யைத் தந்திருக்கிறோம். அந்த விலைக்கு வந்ததும் அதில் முதலீடு செய்யலாம்.
கடந்த வாரம் நாம் பரிந் துரைத்த அமி ஆர்கானிக்ஸ் பங்கு ரூ.970-க்குக் கீழ் வந்தால் வாங்கலாம் என்று கூறி இருந்தோம். சொன்னபடியே இந்த விலையில் இப்பங்கு வர்த்தகமானது. எனவே, குறிப்பிட்டிருந்த ரூ.10,000-க்கும் பங்குகளை வாங்கியிருக்கிறோம். இந்தப் பங்கு ரூ.880-க்குக் கீழ் வரும் போது அடுத்த 10,000 ரூபாயை முதலீடு செய்து சராசரி செய்யலாம்.
பேங்க் ஆஃப் பரோடா விலை இன்னும் இறக்கத் துக்கு உள்ளாகவில்லை. ஏற்றத்தில்தான் இருக்கிறது. விலை இறங்கி சராசரி செய்ய வேண்டிய விலைக்கு வந்தால், மேலும் 10,000 ரூபாயை முதலீடு செய்யலாம். அதே போல், ஏற்றத்தின் போக்கில் குறிப்பிட்டுள்ள இலக்கு விலையை எட்டினால் பங்குகளை விற்று வெளியேறலாம்.

இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு
மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (MHRIL): வாங்க வேண்டிய விலை: ரூ.260-க்குக்கீழ்
ஷேர் போர்ட்ஃபோலியோ பகுதி 3-ல் வாங்கலாம் எனப் பரிந்துரைத்த பங்குகளில் மஹிந்திரா ஹாலிடேஸ் பங்கும் ஒன்று. அப்போது ரூ.275-க்குக் கீழ் வந்தால் வாங்கலாம் என்று கூறியிருந்தோம்.இந்தப் பங்கு அப்போது குறிப்பிட்டிருந்த விலைக்கு வராததால், அந்தப் பங்கை நாம் வாங்கவில்லை. ஆனால், கடந்த வாரம் ரூ.250 எனும் அளவுக்கு இறக்கம் கண்டு வர்த்தகமானது. இதற்கு முக்கியமான காரணம், மீண்டும் உருவெடுத் திருக்கும் கொரோனா பாதிப்பு. சீனாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட முடியாது என்றும் கூறியிருக்கிறது. மேலும், சீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஹாஸ்ட்பிட்டாலிட்டி, சுற்றுலா ஆகிய துறைகள் மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் அச்சம் உருவாகியிருக்கிறது. இந்த அச்சத்தின் பின்னணியை ஒட்டியே மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனப் பங்கும் சரிவைச் சந்தித்திருக்கிறது. இந்தச் சரிவு அந்தப் பங்கை நம் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்திருக் கிறது. எனவே, இந்த வாரம் வாங்க வேண்டிய பங்காக மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனப் பங்கை எடுத்துக்கொள்ளலாம். 86 ரிசார்ட்டுகள், 4,715 அறைகள் என மஹிந்திரா ஹாலிடேஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அறைகளின் எண்ணிக்கையை 2025-க்குள் 5,500-ஆக உயர்த்த திட்டம் வைத்துள்ளது. இப்பங்கில் ரூ.10,000 மட்டும் முதலீடு செய்யலாம்.

ஷேர் போர்ட்ஃபோலியோ விதிமுறைகள்:
1. பங்குப் பரிந்துரைகள், அவற்றின் விலை நகர்வுகள் ஆகியவை திங்கள் முதல் புதன் வரையிலான மூன்று வர்த்தக தினங்களுக்கானதாக மட்டுமே வழங்கப் படுகின்றன. 2. பரிந்துரைக்கப்படும் பங்குகள் திங்கள் முதல் புதன் வரையிலான வர்த்தக நாள்களில் குறிப்பிடப்படும் விலை வரம்புக்குள் வந்தால் மட்டுமே அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். 3. குறிப்பிட்ட விலை வரம்புக்குள் வராத பங்குகளை வாங்கக் கூடாது.
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.
(போர்ட்ஃபோலியோ தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்