மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

ஷேர் போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் போர்ட்ஃபோலியோ

ஷேர் போர்ட்ஃபோலியோ - 7

புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம் போர்ட் ஃபோலியோ உருவாக்கத்தில் நாம் திட்டமிட்டுள்ள முதலீட்டுத் தொகை ரூ.3 லட்சம். இதுவரை நாம் ரூ.1,12,083.50 மட்டுமே முதலீடு செய்திருக்கிறோம்.

விலை அதிகமான பங்கு களில் மட்டுமே ரூ.20,000 முதலீடு செய்கிறோம். மற்றபடி தரமான பங்குகளில் நிதானமாக ரூ.10,000 அளவி லேயே முதலீடு செய்து வருகிறோம்.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, 
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.

நாம் வாங்கியிருக்கும் பங்கு கள் அனைத்துமே ஏற்றத்திலேயோ, வாங்கிய விலைக்கு அருகிலேயோதான் இருக் கிறது. தரமான பங்குகள் தான் வாங்குகிறோம் என்ப தால், தொடர்ந்து போர்ட் ஃபோலியோவைத் திட்ட மிட்டு நிதானமாகக் கொண்டு செல்லலாம்.

அனைவரும் ஆவலாக எதிர்பார்க்கும் முக்கியமான நிகழ்வு, பட்ஜெட். காரணம், பட்ஜெட் எதிர்பார்ப்புகளை யொட்டி பங்குச் சந்தையின் நகர்வுகளும் இருக்கும். 2024-ல் பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், இந்த ஆண்டு பட்ஜெட் அரசின் முழு பட்ஜெட்டாக இருக்கும். எனவே, பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் பலமாகவே உள்ளன.

இன்னொரு முக்கியமான விஷயம், இந்தியாவில் மின்சாரத் தேவை அதிகரித்து வருகிறது. 2023-ம் நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங் களில் மின்சாரத் தேவை 11% உயர்ந்திருக்கிறது. மேலும், ஏப்ரல் முதல் நவம்பர் வரை யிலான காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை 0.6% அதிகரித்து உள்ளது. மின்சாரத் தேவை அதிகரித்திருப்பதன் மூலம் இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் நன்றாக இருப்பது உறுதியாகிறது.

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

வட்டி விகித உயர்வு காரணமாக மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகள் லார்ஜ்கேப் பங்குகளைக் காட்டிலும் விலை இறக்கம் கண்டுள்ளன. மேலும், மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயர்ந் திருக்கும் நிலையில் சிறு, குறு நிறுவனங்கள் அந்த சுமையை வாடிக்கையாளர்கள் மேல் சுமத்த முடியாத சூழலில் இருக்கின்றன. மிட் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களுக்கு இது சவாலான காலகட்டம். ஆனால், முதலீட்டாளர் பார்வையில் பார்க்கும்போது, மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பு கவர்ச்சி கரமானதாக இருக்கிறது. 2022-ல் மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவு அழுத்தத்தில் இருந்தாலும், 2023-ன் இரண்டாம் பாதியில் இவற்றின் செயல் பாடு சிறப்பாக இருக்கும்.

இப்போது நம் போர்ட் ஃபோலியோவுக்கு வருவோம். கடந்த வாரம் மஹிந்திரா ஹாலிடேஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனப் பங்கைப் பரிந்துரைத்தோம். ரூ.260-க்குக்கீழ் வந்தால் வாங்கலாம் என்று கூறியிருந்த நிலையில், கடந்த திங்கள் முதல் புதன் வரையிலான வர்த்தக தினங்களில் அந்த விலைக்கு வரவில்லை. எனவே, நாம் அந்தப் பங்கை வாங்கவில்லை.

நாம் ஏற்கெனவே வாங்கிய பங்குகள் பலவும் ஏற்றத்தின் போக்கில் இருக்கின்றன. அனைத்துக்கும் இலக்கு விலை தந்திருக்கிறோம். இலக்கு விலையை எட்டும்போது, அவற்றை விற்று வெளியேறலாம். பேங்க் ஆஃப் பரோடா, பாரத் ஃபோர்ஜ், அமி ஆர்கானிக்ஸ் ஆகிய பங்குகளில் ஒவ்வொன்றிலும் அடுத்த ரூ.10,000-த்தை முதலீடு செய்யும் விலையையும் தந்திருக்கிறோம். அந்த விலைக்கு வரும்போது முதலீடு செய்து சராசரி செய்ய வேண்டும்.

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

இந்த வாரம் வாங்க வேண்டிய பங்கு:

பார்தி ஏர்டெல் (BHARTIARTL)

வாங்க வேண்டிய விலை: ரூ.820-க்குக் கீழ்

இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனம் இது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் டெலிகாம் சேவையை வழங்கி வருகிறது. சராசரி பயனாளர் வருவாய் விஷயத்தில் ஏர்டெல் சிறப்பான இடத்தை வகிக்கிறது. 2021 நவம்பரில் கட்டணங்கள் 25% உயர்த்தப்பட்டது. இதனால் டெலிகாம் நிறுவனங் களின் வருவாய் உயர்ந்தது.

ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி பயனாளர் வருவாய் ரூ.153-லிருந்து ரூ.190 வரை உயர்ந்தது. மாதம் ரூ.300 எனும் அளவுக்கு சராசரி பயனாளர் வருவாயை உயர்த்த ஏர்டெல் இலக்கு வைத்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது 35.4 கோடி பயனாளர்கள் உள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோவைவிட ஏர்டெல் நிறுவனத் துக்கு 2ஜி, 3ஜி பயனாளர்கள் அதிகமாக உள்ளனர். இது ஒரு சாதகமான அம்சம். 4ஜி, 5ஜி அலைக்கற்றை சேவைக்கு மாறும்போது ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரிக்கும். மேலும், ஜியோவின் செயல்பாட்டு வருவாய் ரூ.29,822 கோடி. ஆனால், ஏர்டெல் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.55,017 கோடியாக இருக்கிறது. இன்னும் பல அம்சங்களில் சிறப்பான இடத்தில் உள்ளது.

ஷேர் போர்ட்ஃபோலியோ விதிமுறைகள்...

1. பங்குப் பரிந்துரைகள், அவற்றின் விலைநகர்வுகள் திங்கள் முதல் புதன் வரையிலான மூன்று வர்த்தக தினங்களுக்கான தாக மட்டுமே வழங்கப்படுகின்றன. 2. பரிந்துரைக்கப்படும் பங்குகள் திங்கள் முதல் புதன் வரையிலான வர்த்தக நாள்களில் குறிப்பிடப்படும் விலை வரம்புக்குள் வந்தால் மட்டுமே அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். 3. குறிப்பிட்ட விலை வரம்புக்குள் வராத பங்குகளை வாங்கக் கூடாது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர்வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறு வனத்தார் வசமோ இருக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்