மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

ஷேர் போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் போர்ட்ஃபோலியோ

ஷேர் போர்ட்ஃபோலியோ - 8

கடந்த ஏழு வருடங் களாக இந்தியப் பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயலாற்றி பாசிட்டிவ் வருமானத்தை முதலீட்டாளர்களுக்குத் தந்து வருகிறது. ஆனால், 2023-ம் ஆண்டில் பங்குச் சந்தை பற்றிய இது வரையிலான கணிப்பின்படி, இண்டெக்ஸ் அடிப்படையில் பார்க்கும்போது பெரிய அளவில் வருமானம் தருமா என்பது சந்தேகம்தான் எனத் தெரிகிறது. என்றாலும் தரமான பங்குகள் எல்லாக் காலத்திலும் நல்ல லாபத்தைத் தந்துள்ளன.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, 
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.

தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகள் அனைத் துமே ஏற்ற இறக்கமான சூழலில் இருந்து வருகின்றன. எனவே, இந்தியப் பங்குச் சந்தைகளிலும் கொஞ்சம் இறக்கம் இருக்கவே செய்யும்.ஆனால், நம் போர்ட் ஃபோலியோ நீண்ட காலத்துக்கானது என்பதால், தற்போதைய இறக்கங்கள் குறித்து முதலீட்டாளர்கள் பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகள் அனைத்துமே நீண்ட காலத்தில் வளர்ச்சி அடையக்கூடிய பங்குகள்; எனவே, பதற்றம் வேண்டாம். பங்குச் சந்தை மீண்டுவரும் போது நம் போர்ட் ஃபோலி யோவில் உள்ள பங்குகளும் ஏற்றத்துக்கு வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

அதே சமயம், அதிக பிஇ மதிப்பு, விலைக்கும் புத்தக மதிப்புக்கும் இடையிலான விகிதம் அதிகமாக உள்ள வேல்யூ பங்குகள் விலை இறக்கம் கண்டு வருகின்றன. இந்த நேரத்தில், வேல்யூ பங்குகளை வாங்கி போர்ட் ஃபோலியோவில் சேர்ப்பது தான் முக்கியமான விஷயம். அந்த முறையைத்தான் நாம் தொடர்ச்சியாகக் கடைப் பிடித்து வருகிறோம். எந்தெந்த நிறுவனங்கள் நல்ல அட்வான் டேஜுடன் இருக்கிறதோ, வளர்ச்சிக்கு வாய்ப்பிருக் கிறதோ, அப்படியான நிறுவனப் பங்குகளைதான் தேர்வு செய்கிறோம்.

இப்போது போர்ட்ஃபோலி யோவுக்கு வருவோம். விரைவில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக் கிறது. நம் போர்ட்ஃபோலி யோவுக்கு 15 பங்குகள் வாங்கு வதாகத் திட்டமிட்டிருக் கிறோம். அதில் இதுவரை எட்டு பங்குகளை வாங்கி யிருக்கிறோம். வாங்கிய பங்குகளுக்கு இலக்கு விலை தந்திருக்கிறோம். தரப் பட்டுள்ள இலக்கு விலையை பங்குகள் எட்டும்போது அவற்றை விற்றுவிடலாம். அதே போல, சில பங்குகளுக்கு சராசரி செய்வதற்கான விலையைத் தந்திருக்கிறோம். அந்த விலைக்குப் பங்குகள் வரும்போது கூடுதல் முதலீட்டை மேற்கொண்டு சராசரி செய்யலாம்.

எனவே, வாங்கிய பங்குகளின் நகர்வுகளைக் கவனித்து வர வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகள் அனைத்துமே நல்ல ஃபண்டமென்டல் காரணிகளுடன் வலுவாக உள்ளன. தொடர்ந்து நம்முடைய போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகள் சார்ந்து பாசிட்டிவ்வான செய்திகளும் அறிக்கைகளும் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, சந்தைகளின் ஏற்ற இறக்கங்களின்போது வீண் கவலை வேண்டாம்.

இப்போது வரவுள்ள பட்ஜெட்டையும், நிதி நிலை முடிவுகளையும் பார்த்துவிட்டு போர்ட்ஃபோலி யோவில் என்னென்ன மாற்றங்களை மேற்கொள்ள லாம் என்பதையும் நாம் யோசிக்கலாம். எனவே, இந்த வாரம் நாம் எந்தப் பங்கையும் புதிதாக வாங்க வேண்டாம். பட்ஜெட்டின் போக்கு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாததால், நம்முடைய போர்ட்ஃபோலி யோவில் புதிய பங்குகளை வாங்கிச் சேர்ப்பதற்கு சிறு இடைவெளி கொடுக்கலாம். ஏனெனில், பட்ஜெட் எப்படி வரப்போகிறதோ, அதைப் பொறுத்து சந்தையில் பல மாற்றங்கள் வரலாம். அதையொட்டி பங்குகளின் நகர்வுகளிலும் மாற்றங்கள் இருக்கும்.

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

பட்ஜெட்டில் எதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது, எந்தத் துறைகளிலெல்லாம் மத்திய பட்ஜெட்டின் கவனம் இருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு, நம் போர்ட்ஃபோலியோவில் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கலாம். தற்போது பல்வேறு பங்கு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் வரத்தொடங்கியிருக்கின்றன. டி.சி.எஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு சிறப்பாக வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளும் பாசிட்டிவ்வாக இருக்கின்றன. விரைவில் வரும் பட்ஜெட்டுடன், நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளையும் ஆய்வு செய்துவிட்டு புதிய பங்குகளை வாங்கும் முடிவை மேற்கொள்ளலாம்.

கடந்த வாரம் பார்தி ஏர்டெல் பங்கை வாங்கலாம் எனக் கூறியிருந்தோம். பார்தி ஏர்டெல் பங்கு ரூ.820-க்குக் கீழ் வந்தால் வாங்கலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். திங்கள்கிழமையே அந்த விலைக்கு வந்தது. எனவே, குறிப்பிட்டிருந்த ரூ.10 ஆயிரத்துக்கு ரூ.820 விலையில் 12 பங்குகளை வாங்கியிருக்கிறோம். மீதமுள்ள 10,000 ரூபாயை இந்தப் பங்கு ரூ.740-க்கு வரும்போது முதலீடு செய்து சராசரி செய்யலாம். கடந்த புதன்கிழமையே பார்தி ஏர்டெல் பங்கின் விலை 760 ரூபாயை நெருங்கி வர்த்தகமானது.

வரும் வாரத்தில் இந்தப் பங்கை சராசரி செய்வதற்கான விலையில் வரும் என எதிர்பார்க்கலாம். எனவே, அடுத்த 10,000 ரூபாயை வைத்து பங்குகளை வாங்கி சராசரி செய்யத் தயாராக இருங்கள். தொடர்ந்து பங்குச் சந்தையின் நகர்வுகளுக்கேற்ப, பங்குகளின் செயல்பாடுகளுக்கேற்ப போர்ட்ஃபோலியோவை முன்னோக்கிக் கொண்டு செல்லலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்