
ஷேர் போர்ட்ஃபோலியோ - 9
பொதுவாகவே, புது ஆண்டு தொடங்கியதும் முதல் மாதமான ஜனவரியில் பங்குச் சந்தைகள் இறக்கத்தின் போக்கில்தான் இருந்துவருகிறது. கடந்த 20 வருடங்களில் ஜனவரி மாதத்தில் சந்தை ஏற்றத்தின் போக்கில் இருப்பதைப் பார்ப்பது மிகவும் அரிதாகவே இருந்திருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக, ஜனவரி மாதத்தில் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக வெளியேறுவது வழக்கம்.

சந்தை சார்ந்து பல்வேறு விஷயங்கள் இந்தச் சமயத்தில் ஸ்பெகுலேட் செய்யப்படுகிறது. சந்தை சார்ந்தும் பொருளாதாரம் சார்ந்தும் பல்வேறு கணிப்புகள் எதிர்பார்ப்புகள் வெளி யிடப்படுகின்றன. அதேபோல, பணவீக்கம், வேலைவாய்ப்பு போன்றவற்றின் புள்ளி விவரங்களும் வெளியாகின்றன. இவை அனைத்துமே முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. முதலீட்டாளர்கள் சந்தையை எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் புரிந்துகொள் கிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே அவர்களுடைய முதலீட்டு முடிவுகள் இருக்கின்றன.
மேலும், இந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வான பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் வரவுள்ளது. பட்ஜெட்டை யொட்டியும் பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இவற்றோடு கூடவே நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும் வெளிவந்துகொண்டிருக் கின்றன. நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில் அது சந்தைக்கும் அந்தக் குறிப்பிட்ட பங்குக்கும் சாதகமாக அமைவதாக இருக்கும். அப்படி சந்தையின் எதிர்பார்ப்பு களைப் பூர்த்தி செய்யாமல் ஏமாற்றமளிக்கும் நிறுவனங்கள், சந்தையில் அந்த நிறுவனப் பங்கு கொண்டிருக்கும் வெயிட்டேஜைப் பொறுத்து தாக்கம் செலுத்துவதாக இருக்கும்.
எனவே, நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தும் சந்தை நகர்வுகள் இருக்கும். இது போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது பங்குச் சந்தைகளின் போக்கு அதிக ஏற்ற இறக்கமான சூழலில் இருக்கிறது.
இத்தகைய சூழலில் முதலீட்டாளர்களின் கவனம் குறிப்பிட்ட பங்குகள் சார்ந்ததாகவும், துறை சார்ந்ததாகவும் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது. கடந்த வாரம் கூறியதுபோல, பட்ஜெட் எந்தப் பாதையில் செல்கிறது, எந்தெந்தத் துறைகளில் கவனம் செலுத்துகிறது, பட்ஜெட்டால் எந்தெந்தத் துறைகள் வளர்ச்சிக்கான வாய்ப்பைப் பெறும் என்பதையெல்லாம் பொறுத்து சந்தையின் செயல்பாடுகள் இருக்கும்.
எனவே, பட்ஜெட்டுக்குமுன் நம்முடைய போர்ட் ஃபோலியோ சார்ந்து எந்த முடிவும் எடுக்க வேண்டாம். சிறிய இடைவெளி கொடுப்போம் என்று கூறியிருந்தோம். அதன்படியே போர்ட்ஃபோலியோவை நிதானமாகக் கொண்டு செல்லலாம். எனவே, இந்த வாரமும் நாம் எந்தப் பங்கையும் வாங்கப்போவதில்லை.
நம்முடைய போர்ட் ஃபோலியோவில் இதுவரை வாங்கியிருக்கும் பங்குகளின் நகர்வுகளைத் தொடர்ந்து கவனித்து வருவோம். அவற்றுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கு விலையையும், சராசரி செய்ய வேண்டிய பங்கு களுக்கான விலையையும் பங்குகள் எட்டுகிறதா என்பதைப் பார்த்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஐ.டி துறையில் நெருக்கடியை உண்டாக்கலாம் என்ற கவலை இருந்துவருகிறது. ஐ.டி துறை நிறுவனங்களின் தொழில் பரிவர்த்தனைகள் தாமதம் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை வந்திருக்கும் ஐ.டி துறை நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளைப் பார்க்கும்போது, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் என அனைத்துமே பாசிட்டிவ் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. டி.சி.எஸ் நிகர லாபம் 11 சதவிகிதமும், இன்ஃபோசிஸ் நிகர லாபம் 13 சதவிகிதமும், ஹெச்.சி.எல் நிகர லாபம் 19 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது.
எனவே, ஐ.டி துறையில் நெருக்கடி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐ.டி நிறுவனங்களின் தொழில் ஒப்பந்தங்கள் சிறப்பாகவே இருக்கின்றன. ஐ.டி துறையின் தேய்மான (Attrition) விகிதமும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதனால் அவற்றின் வருவாய் வளர்ச்சியும் நன்றாகவே இருக்கும் என்றே கருதுகிறோம். குறிப்பாக, கவனிக்க வேண்டிய நிறுவனமாக சயன்ட் லிமிடெட் இருக்கிறது.
கடந்த வருடத்தில் முன்னணி நிறுவனங்களைக் கையகப்படுத்தியதன் விளைவாக, இதன் வருவாய் 37% வளர்ச்சி கண்டிருக்கிறது. மேலும், இதன் குழும நிறுவனங்களில் ஒன்றான சயன்ட் டி.எல்.எம் ஐ.பி.ஓ வருவதற்காக விண்ணப்பித்துள்ளது. மிகவும் பாசிட்டிவ்வான கணிப் பைக் கொண்டிருப்பதால், சயன்ட் பங்கு விலை 15% வரை ஏற்றம் காண வாய்ப்புள்ளது. ‘BFSI’ எனப்படும் பேங்கிங், ஃபைனான் ஷியல் சர்வீசஸ் மற்றும் இன்ஷூ ரன்ஸ் துறையிலும் பெரிய பிரச்னை எதுவும் இல்லை.
நம் போர்ட்ஃபோலியோவில் இதுவரை வாங்கியிருக்கும் நிறுவனப் பங்குகளில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிதிநிலை முடிவு வந்திருக்கிறது. மூன்றாம் காலாண்டில் இதன் வருவாய் கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 78% உயர்ந்திருக்கிறது. ஆனால், நிகர லாபம் 29% குறைந்திருக்கிறது.
நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருமானம் 4.3% உயர்ந்திருக்கிறது. 2022 டிசம்பர் 31 வரையிலான நிலவரப்படி, இந்த நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.2.52 லட்சம் கோடியாக இருக்கிறது. மேலும், மற்ற லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் இதன் பாலிசித் திட்டங்களின் விநியோகக் கலவை மிக நன்றாகவே இருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூலமாக 21%, ஏஜென்சிகள் மூலமாக 32%, பிற வங்கிகள் / நிதி நிறுவனங்களுடனான பார்ட்னர் ஷிப் மூலம் 14%, நேரடியாக 16% என நிறுவனத்தின் டிஸ்ட்ரிபியூஷன் வலுவாக இருக்கிறது.
நிறுவனத்தின் செயல்பாட்டு செலவினங்கள் ஒதுக்கீடுகள் 18.5% உயர்ந்ததன் காரணமாகவே நிகர லாபம் குறைந்திருக்கிறது. இந்த செலவினங்கள் ஏஜென்சிகளின் உருவாக்கத்துக்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ஆறு மாதங்களில் தெரியவரும். எனவே, இப்பங்கு நாம் குறிப்பிட்டுள்ள இலக்கு விலையைத் தாண்டி ஏற்றம் அடையும் வாய்ப்புடன் இருக்கிறது.
ஷேர் போர்ட்ஃபோலியோ விதி முறைகள்
1. பங்குப் பரிந்துரைகள், அவற் றின் விலை நகர்வுகள் ஆகியவை திங்கள் முதல் புதன் வரையிலான மூன்று வர்த்தக தினங்களுக்கான தாக மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும். 2. பரிந்துரைக்கப்படும் பங்குகள் திங்கள் முதல் புதன் வரையிலான வர்த்தக நாள்களில் குறிப்பிடப்படும் விலை வரம்புக்குள் வந்தால் மட்டுமே அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். 3. குறிப்பிட்ட விலை வரம்புக்குள் வராத பங்குகளை வாங்கக் கூடாது.
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.
(போர்ட்ஃபோலியோ தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்