மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

ஷேர் போர்ட்ஃபோலியோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர் போர்ட்ஃபோலியோ

ஷேர் போர்ட்ஃபோலியோ - 10

வரும் வாரத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 1) அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதற்கிடையில் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளில் ஏற்கெனவே ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் பற்றிப் பார்த்தோம்.

ஏ.கே.பிரபாகர் 
தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, 
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
ஏ.கே.பிரபாகர் தலைவர் - ஆராய்ச்சிப் பிரிவு, ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.

தற்போது சென்சார் டெக் நிறுவனத்தின் நிதிநிலை முடிவு வந்திருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஓ-வாக மணிஷ் டண் டன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சி.எஸ்.எஸ் கார்ப் என்ற ஐ.டி நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருந்தவர். அவருடைய தலைமையில் சி.எஸ்.எஸ் கார்ப் நிறுவனம் குறிப்பிடத் தக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. அது போல, சென்சார் டெக் நிறுவனத்திலும் நல்ல வளர்ச்சியைக் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சென்சார் டெக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி வருடாந் தர அடிப்படையில் 3.6 சத விகிதமாகவும், எபிட்டா மார்ஜின் வளர்ச்சி 11.3 சத விகிதமாகவும் இருக்கிறது. இந்த நிலையில், நிறுவனத்தின் எபிட்டா மார்ஜினை 2023-24-ம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 15% - 16% வரை உயர்த்த இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

நம் போர்ட்ஃபோலியோ வில் உள்ள பிற பங்குகளின் நிதிநிலை முடிவுகளும் அடுத் தடுத்து வரவிருக்கின்றன. அனைத்தும் பாசிட்டிவ்வான முடிவுகளைத் தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

போர்ட்ஃபோலியோவில் உள்ள நிறுவனங்கள் தொடர் பாக சில செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. பேங்க் ஆஃப் பரோடா எம்.எஸ்.சி.ஐ இண்டெக்ஸில் இடம்பிடிக்க உள்ளது. எம்.எஸ்.சி.ஐ இண்டெக்ஸின் பிப்ரவரி மாத மறுசீரமைப்பில் பயோகான் நிறுவனம் இண்டெக்ஸிலிருந்து வெளி யேறலாம் என்று தெரிகிறது. அதே சமயம், பேங்க் ஆஃப் பரோடா, சி.ஜி பவர் நிறுவனங்கள் இண்டெக்ஸில் இணையவிருக்கிறது. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 10-ம் தேதி அறிவிக்கப்படும்.

அதே போல, பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை ரூ.99-லிருந்து ரூ.155-ஆக உயர்த்தி இருக் கிறது. நாட்டின் ஒன்பது மண்டலங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்தக் கட்டணம், விரைவில் நாடு முழுக்க நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் 1.3 - 1.5 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது.

நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் துறை சார்ந்த நிறுவனமான புளூடார்ட் எக்ஸ்பிரஸ் பாரம்பர்யமான லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களிலிருந்து சற்று மாறுபட்டது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும், பண்டிகைக் காலம் முடிந்துவிட்டதாலும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் தேவை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சில பகுதிகளில் ட்ரக் யூனியன்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, தேவை பெரிய அளவில் குறையவில்லை. வால்யூம் வளர்ச்சி மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக புளூடார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சி.எஃப்.ஓ கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் இ-காமர்ஸ் பிரிவின் வருவாய் பங்களிப்பு நான்கில் ஒரு பங்காக இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு மொத்தம் 700 புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. மேலும், 100 அலுவலகங்களை நிறுவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது புளூ டார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் வான்வழி சரக்குப் போக்குவரத்தில் முதல் இடத்திலும், தரைவழி சரக்குப் போக்குவரத்தில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. லாஜிஸ்டிக்ஸ் துறையில் புதிய நிறுவனங்களின் வருகை இருந்தாலும் புளூடார்ட் நிறுவனம் வலுவான சந்தை கட்டமைப்பையும், தரமான, விரைவான சேவையை வழங்கிவருவதாலும் தொடர்ந்து போட்டி யைத் தாண்டி வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் சாத்தியங்களுடன் இருக்கிறது.

ஷேர் போர்ட்ஃபோலியோ..! பங்கு முதலீட்டின் வழிகாட்டி

ஐ.பி.எல் வரவுள்ள நிலையில், ஐ.பி.எல் டிஜிட்டல் உரிமையை 2023 முதல் 2027 வரை ரூ.20,500 கோடிக்குக் கைப்பற்றியுள்ள வயாகாம் 18 நிறுவனம், தன்னுடைய ஓ.டி.டி தளமான வூட் தளத்தை ஜியோ சினிமா ஓ.டி.டி-யுடன் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஓ.டி.டி தளங்கள் இணைந்து ஐ.பி.எல் போட்டிகளை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்ப உள்ளன. இந்த இணைப்பு மூலம் ஜியோ சினிமாவின் பயனாளர்கள் எண்ணிக்கை 30 மில்லியன் அதிகரித்து, 100 மில்லியனைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல, தற்போது ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்ப வூட் மற்றும் ஜியோ சினிமா இணைவதால், இரண்டு ஓ.டி.டி தளங்களின் இணைப்பு இவற்றின் வளர்ச்சியை மேலும் ஏற்றத்தில் கொண்டுசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம்முடைய போர்ட்ஃபோலியோவில் சராசரி செய்வதற் காகத் தரப்பட்ட பங்குகளில் அமி ஆர்கானிக்ஸ் ரூ.880 என்ற விலைக்கு கடந்த வாரம் வந்தது. அதற்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் 10,000 ரூபாயை முதலீடு செய்து 12 பங்குகளை வாங்கி போர்ட்ஃபோலியோவில் சேர்த்திருக்கிறோம். பட்ஜெட் வரும் வாரம் தாக்கல் செய்யப்பட்டதும் பட்ஜெட்டால் பலன் அடையப்போகும் துறைகள், நிறுவனங்கள் எவையெவை என்பது தெரிந்துவிடும். அதன் பிறகு, நம் போர்ட்ஃபோலி யோவில் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் கட்டுரையாளர் வசமோ, அவரின் குடும்பத்தினர், நிறுவனத்தார் வசமோ இருக்கலாம்.

(போர்ட்ஃபோலியோ தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்