பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தை உச்ச நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ளத் தெரியாமல் திணறுகிறது. கடந்த வார பங்குச் சந்தை வர்த்தகம் முந்தைய வாரத்தை விடவும் கடினமானதாக இருந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அந்தளவுக்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாகக் காணப்பட்டன. சந்தையின் நகர்வுகள் முந்தைய இறக்க நிலைகளை நெருங்கினாலும், அடுத்தடுத்த வர்த்தகத் தினங்களில் அந்த இறக்க நிலைகளில் போதுமான டிமாண்டை உருவாக்கியதன் மூலம் காளையின் போக்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்தது. இதனால் விலை நகர்வுகளும் ஏற்றத்தின் போக்கில் காணப்பட்டது.

பேங்க் நிஃப்டியில் நகர்வுகள் சிறப்பாக இருந்தபோதிலும் நகர்வின் போக்கு நிஃப்டியைக் காட்டிலும் அதிக சேதாரத்துக்கு உள்ளானது. இதனால் பேங்க் நிஃப்டி மீண்டுவருவது கடினமானதாக இருந்தது.

மேலும் தனியார் வங்கிகள் முந்தைய காலத்தில் செயல்பட்டதுபோல் சிறப்பான நகர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக பேங்க் நிஃப்டியில் இருந்திருக்க வேண்டிய ஏற்றத்தின் போக்கு காணப்படவில்லை.

எஸ்.பி.ஐ பங்கில் காணப்பட்ட வலுவான ஏற்றத்தின் நகர்வும் விரைவாகவே காணாமல் போனது. இதுவும் குறியீட்டின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சார்ட் பேட்டர்ன்களில் காணப்படும் தொடர் சரிவு சந்தையின் போக்கு பலவீனமானதாக இருப்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டியால் நகர்வின் போக்கை 18000-க்கு மேல் வலுவாக நிலைநிறுத்த முடியவில்லை. மேலும் உயர் மட்ட நிலைகளில் தொடர்ச்சியாக சப்ளை இருந்துவருகிறது. தற்போது நிஃப்டியின் அதிகபட்ச சேதார நிலையாக 18000 புள்ளிகள் என்ற நிலையே உள்ளது.

சார்ட்டுகளில் சந்தையின் போக்கு குழப்பமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதனால் குறிப்பிட்ட பங்குகள் சார்ந்த நகர்வுகளில் சந்தை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

சார்ட்டில் காணப்படும் மேல்நோக்கிச் செல்லும் மஞ்சள் நிறக் கோடு சில சப்போர்ட் நிலைகளைக் காட்டுகிறது. எனவே, மொமன்டம் போக்கு கீழ்நோக்கி காணப்படுவதால் தனிப்பட்ட விருப்பமான அணுகுறை சார்ந்து நம்முடைய முடிவுகளைத் திட்டமிடுவது சிறந்தது.

பேங்க் நிஃப்டி கடந்த வர்த்தக தினங்களில் கடுமையான சரிவுகளைச் சந்தித்துவருகிறது. மற்றும் நகர்வுகள் நீடித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படும் 38300 என்ற நிலையைப் பரிசோதிக்கத் தயாராக இருக்கிறது.

வரும் வாரத்தைப் பொறுத்தவரை லாங் பொசிஷன்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும் வாராந்தர அடிப்படை யிலான இறக்கங்களில் கூடுதலாக பொசிஷன்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜே.கே லஷ்மி (JKLAKSHMI)

தற்போதைய விலை ரூ.670.80

வாங்கலாம்

சந்தை இறக்கங்களின்போது ஏற்றத்தின் போக்கிலான சராசரி நிலைகளில் தொடர்ச்சியாக சப்போர்ட் நிலைகளைக் கொண்டிருக்கும் போக்கு நல்ல ஏற்றத்துக்கான அறிகுறியாக இருக்கும்.

இத்தகைய அறிகுறி ஜே.கே லஷ்மி சிமென்ட்ஸ் பங்கின் சார்ட்டில் தெரிகிறது. இதில் அக்டோபர் இடையிலிருந்து காணப்படும் நகர்வுகளில் இறக்கங்கள் அனைத்துமே அதன் சராசரி ஏற்ற நகர்வின் நிலைகளில் நிலைகொண்டு உள்ளதைப் பார்க்க முடிகிறது.

தற்போதும் அதில் இதே மாதிரியான இறக்கம் ஏற்பட்டு சராசரி ஏற்ற நிலையில் நிலை கொண்டிருக்கிறது. எனவே, வரும் வாரத்தில் ஏற்றத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க் கலாம்.

எனவே, ரூ.660 ஸ்டாப் லாஸுடன் தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.695 வரை உயர வாய்ப்புள்ளது.

ட்ரென்ட் (TRENT)

தற்போதைய விலை ரூ.1,147.05

வாங்கலாம்

இந்தப் பங்கு சிறப்பான நகர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது. சந்தையில் இந்தப் பங்கு மீதான பார்வை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கடந்த சில வர்த்தக தினங்களில் விலை நகர்வுகளில் நல்ல மீட்சி யைப் பார்க்க முடிகிறது.

சில காலமாகவே ஏற்றத்தின் போக்கும் நிலையாகக் காணப் படுகிறது. வரும் வாரங்களில் ஏற்றத்தை நோக்கி மேலும் நகர்வுகள் காணப்படும் என எதிர்பார்க்கலாம்.

எனவே, தற்போதைய விலையிலும் ரூ.1,100 வரை இறக்கத்திலும் வாங்கலாம். 1,200 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ.1080-க்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் (MAHLOG)

தற்போதைய விலை ரூ.719.10

வாங்கலாம்

லாஜிஸ்டிக்ஸ் துறை தொடர்ந்து நல்ல டிமாண்டில் இருந்துவருகிறது. இந்தத் துறையில் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் பங்கு தொடர்ந்து நல்ல ஏற்றத்தின் போக்குடன் காணப்படுகிறது.

இந்தப் பங்கு சமீபத்தில் எட்டிய உச்ச நிலையில் கடந்த 5 வாரங்களாக நிலைகொண்டிருந்த நிலையில் தற்போது ஏற்றமடைய தயாராக இருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம்.

குறுகிய காலத்தில் ரூ.820 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.700-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா