நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கடந்த வாரம் குறுகிய வர்த்தக வாரமாக அமைந்ததுடன், உற்சாகம் குறைந்ததாகவும் இருந்தது. முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை காணப்பட்ட அனைத்துவிதமான ஏற்றத்தின் நகர்வும் ஏமாற்றமளிக்கும் அளவுக்கு வலுவிழந்த தொடக்க மாகவே கடந்த வார வர்த்தகம் இருந்தது. தொடக்கம் சிறப்பாக இல்லாததுடன், அடுத்தடுத்த வர்த்தக நாள்களிலும் இறக்கமானது தொடர்ந்து காணப்பட்டது. இதனால் அச்சுறுத்தக்கூடிய வகையிலான வாராந்தர கேண்டில் பேட்டர்ன்கள் உருவானதுடன், விலைகளும் அக்டோபர் இறுதியில் காணப்பட்ட இறக்க நிலைக்கு வந்துள்ளது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இப்போது ஒரு சிக்கலான சூழலில் இருக்கிறோம். விலைநகர்வுகள் அக்டோபரில் காணப்பட்ட இறக்க ஸ்விங் நிலைக்கு வந்துள்ளதால், இதைத் தொடர்ந்து வாராந்தர நகர்வில் லோயர் டாப் பேட்டர்ன் உருவாகி உள்ளது. இந்த நிலையில், விலைநகர்வுகள் அக்டோபர் ஸ்விங் இறக்க நிலையை உடைத்து நகர்ந்தால், வாராந்தர சார்ட்டுகளில் கரடியின் போக்கு உருவாகும்.

இது நல்ல செய்தியாக இருக்காது. ஏனெனில், இது நிகழ்ந்தால் மேலும் இறக்கங்கள் உண்டாக வழிவகுக்கும். எனவே, அக்டோபர் இறக்க நிலையான 17659-ஐ வரும் வாரத்துக்கான நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்க்கான குறிப்பு நிலையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பேங்க் நிஃப்டியின் நகர்வும் பெரிய அளவில் உதவ வில்லை. பேங்க் நிஃப்டி குறியீடும் கடந்த வாரத்தின் நான்கு வர்த்தக நாள்களிலும் இறக்கத்தைச் சந்தித்தது. இந்த இறக்க மானது கடந்த அக்டோபரில் காணப்பட்ட உச்சத்துக்குப் பிறகு, காணப்படும் முதல் இறக்கமாகும். எனவே, இதன் சார்ட்டுகளில் பேட்டர்ன்கள் இன்னும் உருவாகவில்லை. ஆனால், இதிலும் நாம் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். ஏனெனில், தனியார் வங்கியின் பங்குகளும் தங்களுடைய செயல்பாட்டை நிறுத்தியுள்ளன.

வியாழன் அன்று சந்தையில் பேடிஎம் நிறுவனப் பங்கின் அறிமுகம் மிக மோசமானதாக அமைந்தது. இது அடுத்தடுத்த ஐ.பி.ஓ-கள் மீதான உற்சாகத்தையும் வரவேற்பையும் குறைக்கலாம். இது சந்தையில் மாறுபட்ட ஒரு போக்கை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், நிதிநிலை முடிவுகள் காலம் முடிவுக்கு வருவதால், செய்திகள் பாசிட்டிவாக இல்லாதபட்சத்தில், கரடியின் ஆதிக்கம் வலுப் பெறுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக உள்ளன. இதனால், வரும் வாரம் காளையின் போக்குக்கு கடும் சவாலானதாகவே இருக்கும். எனவே, எச்சரிக்கையுடன்தான் பொசிஷன்களை எடுக்க வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷிப்பிங் கார்ப்பரேஷன் (SCI)

தற்போதைய விலை ரூ.140.75

வாங்கலாம்

பொதுத் துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயலாற்றி வரும் நிலையில், கடந்த வாரத்தில் சந்தையின் போக்கு சிறப்பாக இல்லாத நிலையிலும் கவனம் ஈர்த்த பங்காக ஷிப்பிங் கார்ப்ப ரேஷன் உள்ளது. உண்மையில் இந்தப் பங்கு தற்போது பிரேக் அவுட்டாகி ஏற்றம் அடைய தயார் நிலையில் இருக்கிறது. எனவே, குறுகிய காலத்தில் விலை ரூ.170-ஐ எட்டும் என நம்பலாம். இதனால் ரூ.130 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் வாங்கலாம்.

பேயர் கிராப் சயின்ஸ் (BAYERCROP)

தற்போதைய விலை ரூ.4,720.00

வாங்கலாம்

சிறந்த பங்குகளை, இறக்கம் காணும்போது வாங்குவது லாபம் தரும். அத்தகைய பங்காக பேயர் கிராப் சயின்ஸ் விளங்கு கிறது. இதன் விலைநகர்வுகள் கடந்த செப்டம்பரில் எட்டிய 6600 என்ற உச்சத்திலிருந்து இறங்கி, கடந்த வாரம் 4575 ஸ்விங் இறக்கத்துக்கு சரிந்துள்ளது. இதனால் விலை யானது அதன் 50% ரீட்ரேஸ் மென்ட் நிலைக்கு இறக்கம் கண்டுள்ளது. மேலும், அதன் முந்தைய ஸ்விங் ஏற்ற நிலை யானது, அதன் சப்போர்ட் நிலை யாக உள்ளது. கடந்த வியாழன் அன்று பெரிய அளவில் வால்யூம் ரிவர்சல் கேண்டில் பேட்டர்ன் உண்டானது. எனவே, இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.5,500 வரை உயரும் சாத்தியங் களுடன் உள்ளது. ரூ.4,500-க்குக் கீழ் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிரீவ்ஸ் காட்டன் (GREAVESCOT)

தற்போதைய விலை ரூ.152.80

வாங்கலாம்

மின்சார வாகனங்களுடன் தொடர்புடைய பங்குகளுக்கு நல்ல டிமாண்ட் காணப்படுகிறது. காரணம், வரும்காலத்தில் இந்தப் பங்குகள் சந்தையில் வெற்றியுடன் இருக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இந்தத் துறையில் கவர்ச்சிகரமான பங்காக கிரீவ்ஸ் காட்டன் உள்ளது. கடந்த வாரத்தில் இப்பங்கு தனது இறக்கத்தின் போக்கை நிறைவு செய்துவிட்டு ஏற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.175 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.142க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

தமிழில்: திவ்யா