பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கடந்த வாரத்தில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் உண்டானது. இதில் அமெரிக்காவின் தலையீடும் இருந்ததால், சர்வதேச சந்தைகள் அச்சுறுத்தும் வகையிலேயே வர்த்தகத்தைத் தொடங்கின. முந்தைய வார இறுதியில் ஏற்கெனவே டவ் ஜோன்ஸ் பங்குச் சந்தை வெகுவாக இறக்கம் கண்டிருந்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

இந்த நிலையில், திங்கள்கிழமை எல்லா ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் தொடங்கின. அந்த இறக்கத்திலிருந்து மீண்டுவருவதும் கடினமானதாகக் காணப்பட்டது. இந்தியப் சந்தையில் கடந்த சில நாள்களாகவே சென்டி மென்ட் சற்றுக் கணிக்க முடிந்ததாகவே இருந்தது. இந்த நிலையில், போர் பதற்றச் சூழல் என்ன மாதிரியான நகர்வை எட்டும் என்பது தெரியாததால், சந்தையில் உடனடி ரிஸ்க்கை குறைக்கும் நடவடிக்கைகள் காணப்பட்டன.

மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ரூபாய் மதிப்பு வலுவிழந்து வந்தது. ஆனாலும், இந்தியப் பங்குச் சந்தை மேலும் கடும் இறக்கத்துக்கு உள்ளாகாமல், அடுத்த மூன்று நாள்களும் தன்னைப் பாதுகாத்துக்கொண்டது. இப்படிச் சொல்ல காரணம், அடுத்தகட்ட ஏற்றத்தை நோக்கியும் சந்தை நகரவில்லை.

விலைநகர்வுகள் இன்னும் நிஃப்டி 16,600 - 16,800 என்ற முந்தைய ஸ்விங் இறக்க வரம்புகளிலேயே சிக்கிக்கொண்டிருக் கிறது. சர்வதேச அளவில் புவிஅரசியல் சார்ந்து பாசிட்டிவ்வான செய்திகள் வரும்பட்சத்தில், சந்தை அதை வரவேற்று நகர்வில் தன்னுடைய போக்கை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். ஆனால், அதற்காகக் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

போர்பதற்ற சூழல் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திய நிலையில் நல்ல நிதிநிலை முடிவுகளுடன் வந்த நிறுவனங் களின் பங்குகள்கூட ஏற்றம் அடைய முடியவில்லை. நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இல்லாத பங்குகள் மேலும் அழுத்தத்துக்கு உள்ளாயின. இவை தற்போதுள்ள சென்டி மென்டைப் பிரதிபலிப்பதாக இருந்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சார்ட்களில் ட்ரெய்லிங் ஸ்டாப் நிலையைச் சேர்த் துள்ளோம். இது இடைக்கால வர்த்தகர்களுக்கு பயன்படும். இந்த ட்ரெய்லிங் ஸ்டாப்நிலை ஏடிஆர் உதவியின் மூலம் கண்டுகொள்ளலாம் இது நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில் இது தற்போதைய மதிப்பான நிஃப்டி 16680 என்ற நிலையை உடைக்குமானால் மேலும் இறக்கத்தை நோக்கிய அழுத்தத்துக்கு உள்ளாகலாம். ஆனால், அதுவரை இந்த நிலையை புதிய லாங் பொசிஷன்களுக்கான ஸ்டாப் நிலையாக வைத்துக்கொள்ளலாம்.

சந்தையில் நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகளும் இந்த ட்ரெய்லிங் ஸ்டாப் நிலைக்கு இறங்கியிருக்கிறது. எனவே, இந்த சப்போர்ட் நிலைகள் மீறி நகரும்போது அது தீவிரமான நிகழ்வாகக் கருதி, தற்போதுள்ள போர்ட்ஃபோலி யோக்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலை உண்டாகலாம். எனவே, அனைத்து வர்த்தகர்களும் முதலீட் டாளர்களும் கவனமாக நகர்வுகளைக் கண்காணிக்க வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜி.என்.எஃப்.சி (GNFC)

தற்போதைய விலை ரூ.552.35

வாங்கலாம்

வரலாற்று உச்சங்களை எட்டிய சிறந்த கவனிக்கதக்க பங்குகளில் ஒன்றாக இது உள்ளது. சமீபத்திய 3-ம் காலாண்டு நிதிநிலை முடிவும் நன்றாக உள்ளது. இது பங்கை ஏற்றத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது. பங்கு 500 என்ற நிலையில் அதிக இடைவெளி வரம்புடன் காணப்படுகிறது. இனிவரும் நாள்களில் இறக்கங் கள் உண்டானால், இந்த நிலையின் அருகில் சப்போர்ட் -ஆக எடுத்துக் கொள்ளும். எனவே, 550 - 500 என்ற வரம்பில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 480-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும். நீண்ட கால அடிப்படையில் 625 - 675 வரை உயர வாய்ப்புள்ளது.

வி.ஐ.பி இண்டஸ்ட்ரீஸ் (VIPIND)

தற்போதைய விலை ரூ.657.50

வாங்கலாம்

இந்தப் பங்கும் நடப்பு மாதத்தில் வரலாற்று உச்சத்தை எட்டிய பங்காகும். இதன் சிறப்பான நிதிநிலை முடிவு பங்கின் நகர்வு ஏற்றத்தின் போக்கில் இருக்க காரணமாக உள்ளது. 2020-ல் கண்ட இறக்கத் திலிருந்து ஏற்றம் கண்ட இதன் நகர்வு சிறப்பாகத் தொடர்கிறது. அடுத்த சில மாதங்களில் 730 வரை இந்தப் பங்கின் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பங்கை தற்போதைய விலையிலும் 600 வரை இறக்கத் திலும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 590-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

சுந்தரம் பாசனர்ஸ் (SUNDRMFAST)

தற்போதைய விலை ரூ.872.00

வாங்கலாம்

இது எக்காலத்துக்குமான புளூசிப் பங்குகளில் ஒன்று. மேலும், இந்த நிறுவனம் தென் இந்தியாவின் வெகு சில சிறந்த உதிரிபாக நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், இது மிக தீவிரமாக டிரெண்டான பங்கு. ஏனெனில், 2020 இறக்கத்தில் இருந்து மீண்டதுடன் அடுத்து வந்த எந்தப் பெரிய இறக்கத்திலும் பாதிக்கவில்லை. 2020 இறக்கத்திலிருந்து மீண்டு புதிய வரலாற்று உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது மேலும் ஏற்றத்துக்கான போக்கு ஆரம்பித்துள்ளது. இது பங்கின் விலையை 960 வரை கொண்டு செல்லலாம். எனவே, இப்பங்கை வாங்க லாம். ஸ்டாப்லாஸ் ரூ.800-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்