
பங்குச் சந்தை
திங்களன்று 17910-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17899 மற்றும் 18178 என்ற எல்லை களைத் தொட்டுவிட்டது என்ற அளவில் வியாழனன்று 18,052-ல் குளோஸானது.
வாராந்தர அளவீட்டில் 17909 மற்றும் 17765 என்ற அளவில் சப்போர்ட்டையும், 18188 மற்றும் 18323 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸை யும் கொண்டு வரும் வாரத்தில் நிஃப்டி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
வரும் வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான முக்கியமான டேட்டா வெளி யீடுகள் எதுவும் இல்லாத வாரத்தை எதிர்கொள்ள இருக்கிறோம்.

Bharti Airtel Limited (NSE Symbol: BHARTIARTL)
3.11.2022 விலை: ரூ.817.50
வாங்கலாம்
எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 2.47 என்ற அளவிலும், செய்கின் மணி ஃப்ளோ (21) ஆனது -0.06 என்ற அளவிலும் இருக்கின்றன. 816 என்ற லெவலில் ஏற்கெனவே ஒரு முறை ரெசிஸ்டன்ஸை சந்தித்த இந்தப் பங்கானது, மீண்டும் 841 வரை சென்று தற்போது 817 என்ற லெவலில் டிரேடாகிக் கொண்டிருக் கிறது.
821 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் கூடிய ஏற்றம் வரும்பட்சத்தில், 839 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்பு இருக்கிறது. 801 மற்றும் 784 என்ற லெவலிலேயே நல்ல தொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேட் செய்வதற்காக டிரேடர்கள் டிராக் செய்ய லாம்.
வாலட்டைலிட்டி அதிக மாக இருந்தால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் டிரேட் செய்வதற் காக மட்டுமே ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் டிரேடர்கள் இந்தப் பங்கைப் பரிசீலனை செய்ய லாம்.

UPL Limited (NSE Symbol: UPL)
3.11.2022 விலை: ரூ.725.50
வாங்கலாம்
எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 5.51 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14) 55.44 என்ற அளவிலும் இருக்கிறது.
730 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன்கூடிய ஏற்றம் வருகிறபட்சத்தில் 754 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால், 712 மற்றும் 697 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், மிக அதிக அளவு ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.
ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் அதிக எச்சரிக்கையுடன்மட்டுமே வர்த்தகம் செய்ய இந்தப் பங்கை ஹைரிஸ்க் டிரேடர்கள் டிராக் செய்யலாம்.
Tech Mahindra Limited (NSE Symbol: TECHM)
3.11.2022 அன்றைய விலை: ரூ.1,053.90
வாங்கலாம்
எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 6.34 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12) 6.09 என்ற அளவிலும் இருக்கிறது. 1055 என்ற என்ற ரெசிஸ்டன்ஸைத் தாண்ட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பங்கு, 1085 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் ஏறும் பட்சத்தில் 1118 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
1034 மற்றும் 1015 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் அவரவரர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ற அளவில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களை வைத்துக் கொண்டு டிரேட் செய்யும் பொருட்டு இந்தப் பங்க்கை டிராக் செய்யலாம்.

Varun Beverages Limited (NSE Symbol: VBL)
3.11.2022 விலை: ரூ.1,187.00
வாங்கலாம்
ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14) 64.25 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 9.84 என்ற அளவிலும் இருக்கிறது. 1038 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு, 1107 என்ற ரெசிஸ்டன்ஸைத் தாண்டி 1187 என்ற லெவலில் தற்போது இருக்கிறது.
வால்யூமுடன்கூடிய ஏற்றம் தொடர்ந்தால், 1271 என்ற லெவல்வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
1070 மற்றும் 950 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் இருப்பதால், மிக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.
எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது.
பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும்.
வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன்னால் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே, வர்த்தகம் செய்ய வேண்டும்.
சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸ் களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.