
பங்குச் சந்தை
வாராந்தர அளவீட்டில் 18235 மற்றும் 17986 என்ற லெவலில் சப்போர்ட்டையும் 18631 மற்றும் 18779 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு வரும் வாரத்தில் செயல்பட வாய்ப்புள்ளது. ஜி.டி.பி குரோத் ரேட், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அவுட்புட், மேனுஃபேக்சரிங் பி.எம்.ஐ உள்ளிட்ட டேட் டாக்கள் வெளியிடப்படும் வாரம் இது.

வாலட்டைலிட்டி அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதால், டிரேடர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்வதே நல்லது.
STERLITE TECHNOLOGIES LIMITED (NSE Symbol: STLTECH)
24.11.2022 விலை: ரூ.177.50
வாங்கலாம்
எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 1.19 என்ற அளவிலும் செய்கின் மணி ப்ளோ (21) -0.08 என்ற அளவிலும் இருக்கிறது. 160 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்துள்ள இந்தப் பங்கு, 183 என்ற லெவலைத் தாண்டி வால்யூ முடன்கூடிய ஏற்றத்தை சந்திக்கிறபட்சத்தில் மட்டும் 191 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 171 மற்றும் 167 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், மிக அதிக அளவு ரிஸ்க் எடுக்கும் திறன்கொண் டிருக்கும் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் அதிக எச்சரிக்கை யுடன் மட்டுமே வர்த்தகம் செய்ய இந்தப் பங்கை ஹைரிஸ்க் டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

SIEMENS LIMITED (NSE Symbol: SIEMENS)
24.11.2022 விலை: ரூ.2816.65
வாங்கலாம்
எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -14,21 என்ற அளவிலும், செய்கின் மணி ப்ளோ (21) - 0.02 என்ற அளவிலும் இருக்கிறது. 2704 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது 2972 என்ற லெவலைத் தாண்ட முடியாமல் இறங்கியது. தற்போது 2771ல் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்துள்ளது. 2830 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன்கூடிய ஏற்றம் வரும்பட்சத்தில் 2942 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்பிருக்கிறது. 2723 மற்றும் 2629 என்ற லெவலிலேயே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேட் செய்ய ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே டிராக் செய்யலாம்.
BHARAT PETROLEUM CORPORATION LIMITED (NSE Symbol: BPCL)
24.11.2022 விலை: ரூ.321.00
வாங்கலாம்
எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 1.39 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 65.24 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் இறங்கி 302 என்ற லெவல் வரை சென்று அதன் பின்னர், ஏற ஆரம்பித்திருக்கும் இந்தப் பங்கு, தொடர்ந்து 326 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை சந்தித்தால் மட்டும் 333 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 310 மற்றும் 298 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதாலும் சராசரியாக வர்த்தகமாகும் பங்கு களின் எண்ணிக்கை குறைவான தாக இருப்பதாலும் மிக அதிக அளவிலான ஹைரிஸ்க் எடுப் பவர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் டிரேட் செய்ய இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

INOX LEISURE LIMITED (NSE Symbol: INOXLEISUR)
24.11.2022 விலை: ரூ.528.90
வாங்கலாம்
ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண் டெக்ஸ் (14, CL) 60.28 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி டைவர் ஜன்ஸ் (9) 0.35 என்ற அளவிலும் இருக்கிறது. 500 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு, 539 என்ற ரெசிஸ்டன்ஸைத் தாண்டி வால்யூமுடன் ஏற்றத்தைச் சந்தித்தால், 550 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. 511 & 492 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் இருப்பதால், மிக அதிக அளவிலான ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸுடன் வர்த்தகம் செய்ய இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.
எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனா லிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக் கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக்கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்யும்முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்தபின் வர்த்தகம் செய்ய வேண்டும்.