பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 18430-ல் ஆரம்பித்த நிஃப்டி, 18887 மற்றும் 18365 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு என்ற அளவில் வியாழனன்று 18812-ல் குளோஸானது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வாராந்தர அளவீட்டில் 18490 மற்றும் 18167 என்ற லெவலில் சப்போர்ட்டையும் 19012 மற்றும் 19211 என்ற லெவல்களில் ரெசிஸ்டென் ஸையும் கொண்டு, வரும் வாரத்தில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எஸ் & பி குளோபல் சர்வீசஸ் பி.எம்.ஐ, எஸ் & பி குளோபல் காம்ப்போசைட் பி.எம்.ஐ போன்ற டேட்டாக்களும் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகளும் வெளிவர இருக்கிற வாரம் இது.

SUMITOMO CHEMICAL INDIA LIMITED (NSE Symbol: SUMICHEM)

01.12.2022 விலை: ரூ.467.85

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 2.41 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 3.69 என்ற அளவிலும் இருக்கிறது. 443 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்துள்ள இந்தப் பங்கு 472 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் கூடிய ஏற்றத்தை சந்திக்கிறபட்சத்தில் மட்டும் 489 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 461 மற்றும் 455 என்ற லெவல்களில் மட்டுமே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்த அளவுக்கான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வர்த்தகம் செய்ய இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

INTELLECT DESIGN ARENA LIMITED (NSE Symbol: INTELLECT)

01.12.2022 விலை: ரூ.468.00

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 5.92 என்ற அளவிலும், செய்கின் மணி ப்ளோ (21) 0.04 என்ற அளவிலும் இருக்கிறது. 462-க்குக் கீழே போகாமல் தொடர்ந்து வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை சந்திக்கும்பட்சத்தில் 481 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

446 மற்றும் 427 என்ற லெவலிலேயே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேட் செய்ய ஹைரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டுமே டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ASTER DM HEALTHCARE LIMITED (NSE Symbol: ASTERDM)

01.12.2022 விலை: ரூ.232.20

வாங்கலாம்

ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 45.29 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.34 என்ற அளவிலும் இருக்கிறது. 213 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு, 227 என்ற ரெசிஸ்டென்ஸைத் தாண்டி வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து வால்யூமுடன் ஏற்றத்தை சந்தித்தால், 242 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப் புள்ளது.

228 மற்றும் 224 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் இருக்கிறது என்பதை டிரேடர்கள் மனதில் கொண்டு அதற்கேற்ற ஸ்டாப்லாஸ்களுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

THERMAX LIMITED (NSE Symbol: THERMAX)

01.12.2022 விலை: ரூ.2,051.55

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -15.54 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 36.56 என்ற அளவிலும் இருக்கிறது. 2009-ல் சப்போர்ட் எடுத்து சற்றே ஏற ஆரம்பித்திருக்கும் பங்கு, சராசரி வால்யூம் அதிகரிப்புடன் தொடர்ந்து ஏறினால் மட்டும் 2117 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

2014 மற்றும் 1977 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதாலும் சராசரி யாக வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை குறைவான தாக இருப்பதாலும் மிக அதிக அளவிலான ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களை வைத்துக் கொண்டு டிரேட் செய்யும் பொருட்டு இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலி சிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது.

பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்டதாகும்.

வாசகர்கள் வர்த்தகம் செய்யும் முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும்.

சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analys t’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analys ts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the

assis tance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular inves tment/trading needs, objectives and financial circumstances.

One year Price his tory of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)