தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 18719-ல் ஆரம்பித்த நிஃப்டி, 18728 மற்றும் 18528 என்ற எல்லை களைத் தொட்டுவிட்டு 18609 என்ற அளவில் வியாழ னன்று குளோஸானது.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

வாராந்தர அளவீட்டில் 18516 மற்றும் 18422 என்ற லெவலில் சப்போர்ட்டையும் 18716 மற்றும் 18822 என்ற லெவல்களில் ரெசிஸ்டன் ஸையும் கொண்டு வரும் வாரத்தில் செயல்படுவதற் கான வாய்ப்புகள் இருக் கின்றன.

அக்டோபர் மாத இண் டஸ்ட்ரீயல் புரொடக்‌ஷன், மேனுஃபேக்சரிங் புரொடக்‌ ஷன், நவம்பர் மாதத்திய இன்ஃப்ளேஷன், டபிள்யூ.பி.ஐ இன்ஃப்ளேஷன், பேலன்ஸ் ஆஃப் டிரேட் முதலிய டேட்டாக்கள் வெளிவர இருக்கிற வாரம் இது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

POLYCAB INDIA LIMITED (NSE Symbol: POLYCAB)

08.12.2022 விலை: ரூ.2,732.45

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 19.75 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 8.45 என்கிற அளவிலும் இருக் கிறது.

2506-ல் சப்போர்ட் எடுத்து ஏறிவருகிற இந்தப் பங்கானது சராசரி வால்யூம் அதிகரிப் புடன் தொடர்ந்து ஏறினால் மட்டும் 2,800 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

2672 மற்றும் 2612 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த சப் போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், இந்த அளவுக் கான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸ்களை வைத்துக் கொண்டு டிரேட் செய்ய இப் பங்கை டிராக் செய்யலாம்.

ABB INDIA LIMITED (NSE Symbol: ABB)

08.12.2022 விலை:ரூ.2,988.35

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -8.44 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 42.83 என்ற அளவிலும் இருக்கிறது.

2920-க்குக் கீழே போகாமல் தொடர்ந்து வால்யூமுடன் கூடிய ஏற்றத்தைச் சந்திக்கும் பட்சத்தில், 3020 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப் புள்ளது.

2939 மற்றும் 2890 என்ற லெவலிலேயே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் மட்டுமே டிரேட் செய்ய ஹைரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் டிராக் செய்யலாம்.

GUJARAT STATE PETRONET LIMITED (NSE Symbol: GSPL)

08.12.2022 விலை: ரூ.267.30

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.45 என்ற அளவிலும் செய்கின் மணி ப்ளோ (21) 0.09 என்ற அளவிலும் இருக்கிறது. 257 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்துள்ள இந்தப் பங்கு 271 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை சந்திக்கிற பட்சத்தில் மட்டும் 277 என்ற லெவல்வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 259 மற்றும் 249 என்ற லெவல்களில் மட்டுமே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்த அளவு ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டிருக்கும் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வர்த்தகம் செய் வதற்கு இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

MAHINDRA LIFESPACE DEVELOPERS LIMITED (NSE Symbol: MAHLIFE)

08.12.2022 விலை: ரூ.373.80

வாங்கலாம்

ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 37.57 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 1.70 என்ற அளவிலும் இருக்கிறது. 359 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 395 என்ற லெவலத் தொட்டுவிட்டு மீண்டும் இறங்கிக் கொண்டிருக்கிறது.

மீண்டும் ஏற ஆரம்பித்து 380 என்ற ரெசிஸ்டன்ஸைத் தாண்டி தொடர்ந்து வால்யூமுடன் ஏற்றத்தை சந்தித்தால், 392 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

364 மற்றும் 355 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் இருக்கிறது என்பதை டிரேடர்கள் மனதில்கொண்டு அதற்கேற்ற ஸ்டாப்லாஸ்களுடன் வர்த்தகம் செய்ய இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனா லிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்டதாகும்.

வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வை ஸரிடம் கலந்தாலோசித்த பின் வர்த்தகம் செய்ய வேண்டும்.

சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.