தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 17830-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17774 மற்றும் 18229 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு வியாழனன்று 18191-ல் குளோஸானது. வாராந்தர அளவீட்டில் 17900 மற்றும் 17610 என்ற லெவலில் சப்போர்ட்டையும் 18356 மற்றும் 18520 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு வரும் வாரத்தில் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

மேனுஃபாக்சரிங் பி.எம்.ஐ, சர்வீசஸ் பி.எம்.ஐ உள்ளிட்ட சில டேட்டாக்கள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சந்தையின் போக்கை திடீரென்று மாற்றிவிட வாய்ப்பிருப்பதால் செய்திகளின் மீது டிரேடர்கள் அதிக கவனம் வைத்தும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே வரும் வாரம் முழுவதும் டிரேடர்கள் டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும்.

Greaves Cotton Limited (NSE Symbol: GREAVESCOT)

29.12.2022 விலை: ரூ.139.10

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.10 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 49.09 என்ற அளவிலும் இருக்கிறது. 124 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏறிக்கொண்டிருக்கும் இந்தப் பங்கு 143 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் ஏறினால் மட்டும் 150 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 129 மற்றும் 119 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் இருக்கிறது என்பதால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடிய டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிப்பதற்காக டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

VRL Logistics Limited (NSE Symbol: VRLLOG)

29.12.2022 விலை: ரூ.531.50

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -2.36 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) -7.47 என்ற அளவிலும் இருக்கிறது. 513 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது 543 என்ற ரெசிஸ்டன்ஸைத் தாண்ட முடியாமல் இறங்கி தற்போது 531 என்ற லெவலில் வியாபாரமாகிக்கொண்டிருக்கிறது. 540 என்ற லெவலைத்தாண்டி சராசரியாக (5 நாள் அளவீட்டில்) நடக்கும் வால்யூமைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான வால்யூமுடன்கூடிய ஏற்றத்தை சந்திக்கிறபட்சத்தில் 547 என்ற லெவல்வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.

516 மற்றும் 499 என்ற லெவலில் மட்டுமே வாராந்தர ரீதியான டெக்னிக்கல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பி ருப்பதால் இந்த அளவுக்கான ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கும் நோக்கத்துடன் டிராக் செய்யலாம்.

Deepak Nitrite Limited (NSE Symbol: DEEPAKNTR)

29.12.2022 விலை: ரூ.1,976.25

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -16.34 என்ற அளவிலும், செய்கின் மணி ப்ளோ(21) -0.06 என்ற அளவிலும் இருக்கிறது. 1877 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்துள்ள இந்தப் பங்கு 2027 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் ஏறுகிறபட்சத்தில் 2079 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. 1954-க்குக் கீழே போனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏனென்றால், 1903 மற்றும் 1829 என்ற லெவல் களிலேயே வாராந்தர ரீதியான டெக்னிக்கல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் இந்த பங்கில் டிரேடிங் செய்ய டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Can Fin Homes Limited (NSE Symbol: CANFINHOME)

29.12.2022 விலை: ரூ.530.55

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -1.99 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 49.31 என்ற அளவிலும் இருக்கிறது. 538 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலைத்தாண்டி வால்யூமுடன் ஏறுகிற பட்சத்தில் 548 என்ற லெவல்வரை சென்று திரும்பலாம். இறங்க ஆரம்பித்தால் 502 மற்றும் 474 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியிலான டெக்னிக்கல் சப்போர்ட்கள் இருப்பதால் மிக அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேடிங் செய்வதற்கு பரிசீலிப்பதற்காக டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன்னால் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வெண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.