பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

திங்களன்று 18131-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17892 மற்றும் 18251 என்ற எல்லை களைத் தொட்டுவிட்டு வியாழனன்று 17992-ல் குளோஸானது. வாராந்தர அளவீட்டில் 17839 மற்றும் 17686 என்ற லெவலில் சப்போர்ட்டையும் 18199 மற்றும் 18405 என்ற லெவல் களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு வரும் வாரத்தில் செயல்படுவதற்கான வாய்ப்பு கள் இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

இண்டஸ்ட்ரீயல் புரொ டக்‌ஷன், மேனுஃபாக்சரிங் புரொடக்‌ஷன், இன்ஃப்ளே ஷன் ரேட் உள்ளிட்ட சில டேட்டாக்கள் வரும் வாரத் தில் வெளி வர இருக்கின்றன. மீண்டும் செய்திகள் மற்றும் நிகழ்வுகள் சந்தையின் போக்கை திடீரென்று மாற்றிவிட வாய்ப்பிருக்கக் கூடிய சூழ்நிலை இருக்கும் நிலைமையிலேயே சந்தை இருக்கிறது என்பதால் செய்தி களின் மீது அதிக கவனம் வைத்தும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் மட்டுமே வரும் வாரம் டிரேடர்கள் டிரேடிங் செய்ய வேண்டி யிருக்கும்.

PRESTIGE ESTATES PROJECTS LIMITED (NSE Symbol: PRESTIGE)

5.1.2023 விலை: ரூ.473

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.95 என்ற அளவிலும், கமாடிட்டி சேனல் இண்டெக்ஸ் (14) 88.54 என்ற அளவிலும் இருக்கிறது. 431 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது 474 என்ற ரெசிஸ்டென்ஸை தாண்ட முடியாமல் இறங்கி தற்போது 473 என்ற லெவலில் வியாபாரமாகிக்கொண்டிருக் கிறது.

சராசரியாக 5 நாள் அளவீட்டில் நடக்கும் வால்யூமைவிட அதிகமான வால்யூம் இந்தப் பங்கில் நடந்து, அத்துடன் 476 என்ற லெவலைத்தாண்டி ஏற்றத் தையும் சந்திக்கிற பட்சத்தில் 484 என்ற லெவல் வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. 462 மற்றும் 452 என்ற லெவலில் மட்டுமே வாராந்தர ரீதியான டெக்னிக்கல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால் இந்த அளவுக்கான ஹைரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கை வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கும் நோக்கத் துடன் டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

JINDAL STEEL & POWER LIMITED (NSE Symbol: JINDALSTEL)

5.1.2023 விலை: ரூ.593.55

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 2.18 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண் டெக்ஸ் (14, CL) 63.79 என்ற அளவிலும் இருக்கிறது. 522 லெவலில் சப்போர்ட் எடுத்து ஏறிக்கொண்டிருக்கும் இந்தப் பங்கு 604 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் ஏறினால்தான் 618 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 581 மற்றும் 568 என்ற லெவல் களிலேயே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் இருக்கிறது என்பதால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கக் கூடிய திறன்கொண்ட ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிப்பதற்காக டிராக் செய்யலாம்.

NCC Limited (NSE Symbol: NCC)

5.1.2023 விலை: ரூ.93.25

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.66 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 65.50 என்ற அளவிலும் இருக்கிறது. 82 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 97 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலைத்தாண்டி வால்யூமுடன் ஏறுகிறபட்சத்தில் 101 என்ற லெவல்வரை சென்று திரும்பலாம்.

இறங்க ஆரம்பித்தால் 87 மற்றும் 80 என்ற லெவல் களிலேயே வாராந்தர ரீதியிலான டெக்னிக்கல் சப்போர்ட்கள் இருப்பதால் மிக அதிக ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கை டிரேடிங் செய்ய பரிசீலிப்பதற்காக டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

KPIT TECHNOLOGIES LIMITED (NSE Symbol: KPITTECH)

5.1.2023 விலை: ரூ.682.70

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -1.54 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 45.15 என்ற அளவிலும் இருக்கிறது. 622 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்துள்ள இந்தப் பங்கு 702 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் ஏறுகிற பட்சத்தில் 722 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. 669-க்கு கீழே போனால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏனென்றால், 656 மற்றும் 643 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான டெக்னிக்கல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்த பங்கை டிரேடிங் செய்வதற்கு டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட விஷயமாகும்.

வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன்னால் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே, வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்பு களுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ் களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.