
வாலட்டைலிட்டி இருந்துவருவதால், ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் சந்தையை டிராக் செய்யலாம்...
திங்களன்று 17859-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17719 மற்றும் 18134 என்றெல்லாம் சென்றுவிட்டு, வியாழனன்று 18035-ல் முடிவடைந்தது.
வாராந்தர அளவீட்டில் 17792 மற்றும் 17548 என்ற லெவலில் சப்போர்ட்டையும், 18207 மற்றும் 18378 என்ற லெவல்களில் வாராந்தர ரீதியிலான ரெசிஸ்டன்ஸை யும் கொண்டு, வரும் வாரத்தில் நிஃப்டி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

பெரிய அளவிலான முக்கிய டேட்டாக்கள் வெளியீடு ஏதும் இல்லாத வாரத்தை நாம் எதிர்கொள்ள விருக்கிறோம். வாலட்டை லிட்டி தொடர்ந்து சந்தையில் இருந்துவருவதால், ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் குறைவான எண்ணிக்கையில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே வர்த்தகம் செய்வதற்காக சந்தையை டிராக் செய்யலாம்.
Borosil Renewables Limited (NSE Symbol: Bororenew)
16.02.2023 விலை: ரூ.481.45
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப் படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -0.61 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, CL) 48.75 என்ற அளவிலும் இருக்கிறது.
436 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்து ஏற ஆரம்பித்துள்ள இந்தப் பங்கு, டிரேடிங் மற்றும் டெலிவரி வால்யூம் அதிகரிப்புடன் கூடிய (ஐந்து நாள் சராசரி அடிப்படையில்) ஏற்றத்தைத் தொடர்ந்து சந்தித்தால், 500 என்கிற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
இறங்க ஆரம்பித்தால் 450 மற்றும் 418 என்ற லெவல்கள் வரை வரலாம். இந்த லெவல் களிலேயே வாராந்தர ரீதியிலான டெக்னிக்கல் சப்போர்ட்டுகள் இருப்பதால், இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கை டிரேட் செய்ய பரிசீலிக்கலாம்.

JK Lakshmi Cement Limited (NSE Symbol: JKLAKSHMI)
16.02.2023 விலை: ரூ.752.40
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப் படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 1.64 என்ற அளவிலும், கமாடிட்டி சேனல் இண் டெக்ஸ் (14) 7.47 என்ற அளவிலும் இருக்கிறது. 760 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன்கூடிய ஏற்றம் தொடர்ந்தால் 772 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
737 மற்றும் 722 என்ற லெவலில் மட்டுமே வாராந்தர ரீதியான டெக்னிக்கல் சப்போர்ட் கிடைக்க வாய்பிருப்பதால், இந்த அளவுக்கான ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கை வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். சராசரியாக அன்றாடம் வர்த்தகம் நடக்கும் அளவு குறைவான பங்கு இது என்பதையும் டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

Bharat Forge Limited (NSE Symbol: BHARATFORG)
16.02.2023 விலை: ரூ.855.95
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -1.85 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, CL) 45.91 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் திடீர் இறக்கத்தைச் சந்தித்த இந்தப் பங்கு 810 லெவலில் சப்போர்ட் எடுத்து ஏறிக்கொண்டிருக்கிறது. 860 என்ற லெவலைத் தாண்டி டிரேடிங் மற்றும் டெலிவரி வால்யூம் அதிகமாக (சராசரியாக ஐந்து நாள்கள் அளவீட்டில்) நடக்கும்பட்சத்தில் 894 என்ற லெவல்வரை சென்று திரும்பலாம்.
இறக்கம் வந்தால் 808 மற்றும் 761 என்ற லெவல் களிலேயே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் இருக்கிறது என்பதால், இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடிய திறன்கொண்ட ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வியாபாரம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.
Prestige Estates Projects Limited (NSE Symbol: PRESTIGE)
16.02.2023 விலை: ரூ.419.95
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 1.69 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 0.45 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் இரண்டு முறை 394 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்த இந்தப் பங்கு தொடர்ந்து வால்யூமுடன்கூடிய ஏற்றத்தைச் சந்தித் தால் 439 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
இறக்கம் வந்தால் 399 மற்றும் 376 என்ற லெவல் களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்த அளவுக்கு அதிகப்படியான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கை டிரேட் செய்ய டிராக் செய்யலாம்.
எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும்.
சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.