நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

உலக சந்தைகளின் போக்கு தொடர்ந்து வாலட்டைலாக இருப்பதால், இந்திய சந்தையிலும் ஏற்ற, இறக்கம் நீடிக்கிறது.

திங்களன்று 17421-ல் ஆரம்பித்த நிஃப்டி 16850 மற்றும் 17529 என்றெல்லாம் சென்றுவிட்டு, வியாழனன்று 16985-ல் முடிவடைந்தது.
வாராந்தர அளவீட்டில் 16714 மற்றும் 16442 என்ற லெவலில் வாராந்தர ரீதியிலான சப்போர்ட்டையும் 17394 மற்றும் 17892 என்ற லெவல் களில் வாராந்தர ரீதியிலான ரெசிஸ்டென்ஸையும் கொண்டுவரும் வாரத்தில் நிஃப்டி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

பெரிய அளவிலான முக்கிய டேட்டா வெளியீடுகள் ஏதும் இல்லாத வாரத்தை எதிர் கொள்ளப்போகிறோம். உலக சந்தைகளின் போக்கு தொடர்ந்து வாலட்டைலாக இருப்பதால், இந்திய சந்தை யிலும் ஏற்ற, இறக்கம் நீடிக் கிறது. இது வரும் வாரத்திலும் தொடரும் என்று எதிர்பார்க் கலாம். எனவே, மிக மிக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்ய மட்டுமே சந்தையை டிராக் செய்யலாம்.

Tata Motors Limited (NSE Symbol: TATAMOTORS)

16.03.2023 விலை: ரூ.415.70

வாங்கலாம்

வியாழன் இறுதி நிலவரப் படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -2.27 என்ற அளவிலும், கமாடிட்டி சேனல் இண் டெக்ஸ் (14) -128.21 என்ற அளவிலும் இருக்கிறது.

405 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்துள்ள இந்தப் பங்கு, தற்சமயம் 415 என்ற லெவலில் உள்ளது. சராசரி வால்யூமைவிட அதிகமான அளவில் (10 நாள் சராசரி டிரேடிங் – ஐந்து நாள் சராசரி டெலிவரி என்ற அளவீட்டில்) நடந்து இரண் டுக்கும் மேற்பட்ட பாசிட்டிவ் குளோஸிங் வந்தால், 433 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 401 மற்றும் 387 என்ற லெவல்களி லேயே வாராந்தர ரீதியிலான சப்போர்ட் இருக்கிறது என்ப தால், இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடிய திறன்கொண்ட ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வியா பாரம் செய்வது குறித்து பரிசீலிக்க டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Greaves Cotton Limited (NSE Symbol: GREAVESCOT)

16.03.2023 விலை: ரூ.122.95

வாங்கலாம்

வியாழன் இறுதி நிலவரப் படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -0.40 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, CL) 35.86 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் நல்லதொரு விலை இறக்கத்தைச் சந்தித்த இந்தப் பங்கு, 118 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து தற்சமயம் 122 என்ற லெவலில் இருக்கிறது. தொடர்ந்து வால்யூமுடன்கூடிய (ஐந்து நாள் சராசரி வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமை விட அதிகமாக நடந்தால்) வாராந்தர ரீதியாக 130 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 119 மற்றும் 115 என்ற லெவல் களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்த அளவுக்கு அதிகப் படியான ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்த பங்கை டிரேடிங் செய்ய டிராக் செய்யலாம்.

CCL Products (India) Limited (NSE Symbol: CCL)

16.03.2023 விலை: ரூ.566.80

வாங்கலாம்

வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.35 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 5.68 என்ற அளவிலும் இருக்கிறது. 550 என்ற லெவலில் சப்போர்ட்டை எடுத்துள்ள இந்தப் பங்கு வால்யூமுடன்கூடிய ஏற்றத்தைச் சந்தித்தால் 582 என்ற லெவல்வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 551 மற்றும் 535 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், இந்த அளவுக்கு அதிகப்படியான ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்த பங்கில் டிரேடிங் செய்ய டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Gujarat Gas Limited (NSE Symbol: GUJGASLTD)

16.03.2023 விலை: ரூ.496.80

வாங்கலாம்

வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர் ஜன்ஸ் (9) -2.40 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட் ரென்த் இண்டெக்ஸ் (12, CL) 48.24 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் 472-ல் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது, 526 என்ற லெவலைத் தாண்ட முடியாமல் இறங்க ஆரம்பித்து, தற்போது 496 என்ற லெவலில் இருக்கிறது. மீண்டும் வால்யூமுடன் ஏற ஆரம்பித்தால் (டெலிவரி மற்றும் டிரேடிங் வால்யும் ஐந்து நாள்கள் அடிப்படையில்), 511 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புகள் இருக்கிறது.

சந்தையின் சூழ்நிலை காரணமாக இறங்க ஆரம்பித்தால் 482 மற்றும் 468 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியிலான டெக்னிக்கல் சப்போர்ட்டுகள் இருப்பதால், இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் டிரேடிங் செய்ய பரிசீலிப்பதற்காக டிராக் செய்யலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலி சிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக் கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த் தகம் செய்யும்முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட் மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோ சித்தபின் வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்பு களுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.