
ஃபெடரல் வட்டி விகித முடிவுகள் உள்ளிட்ட பல டேட்டாக்கள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
திங்களன்று 17707-ல் ஆரம்பித்த நிஃப்டி, 17931 மற்றும் 17612 என்ற என்கிற அளவுக்குச் சென்றுவிட்டு, வியாழனன்று 17915-ல் முடிவடைந்தது.
வாராந்தர அளவீட்டில் 17708 மற்றும் 17501 என்ற லெவலில் வாராந்தர ரீதியிலான சப்போர்ட்டையும், 18027 மற்றும் 18139 என்ற லெவல்களில் வாராந்தர ரீதியிலான ரெசிஸ்டென்ஸையும் கொண்டு, வரும் வாரத்தில் நிஃப்டி செயல்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

எஸ்&பி குளோபல் மேனுஃபாக்சரிங் பி.எம்.ஐ / காம்ப்போசைட் பி.எம்.ஐ / சர்வீசஸ் பி.எம்.ஐ உள்ளிட்ட சில இந்திய டேட்டாக்களும், ஐ.எஸ்.எம் மேனுஃபாக்சரிங் பி.எம்.ஐ, ஜே.ஓ.எல்.டி’ஸ் ஜாப் ஓப்பனிங்ஸ், ஐ.எஸ்.எம் சர்வீசஸ், ஃபெடரல் வட்டி விகித முடிவுகள், பேலன்ஸ் ஆஃப் டிரேட், அன்–எம்ப்ளாய் மென்ட் ரேட் உள்ளிட்ட பல அமெரிக்க டேட்டாக்கள் / முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
அமெரிக்க வட்டி விகித முடிவுகளின் தாக்கம் ஒரளவுக்கு இந்திய சந்தையில் பிரதிபலிக்க வாய்ப்பிருப்பதால், அதனால் உருவாக வாய்ப்பிருக்கும் வாலட்டைலிட்டியை மனதில் வைத்தே டிரேடர்கள் எச்சரிக்கையுடன் (குறைந்த எண்ணிக்கை மற்றும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன்) வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

Tata Consumer Products Limited (NSE Symbol: TATACONSUM)
27.04.2023 விலை: ரூ.754.00
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 4.34 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, CL) 69.19 என்ற அளவிலும், இருக்கிறது. 697 என்ற லெவலில் சப்போர்ட் ஏற ஆரம்பித்துள்ள இந்தப் பங்கு, தற்சமயம் 754 என்ற லெவலில் இருக்கிறது. 746 என்ற லெவலுக்குக்கீழே போகாமல் 754 என்ற இந்த லெவலைத் தாண்டி. ஐந்து நாள் சராசரி வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமைவிட அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் நடந்து 759 என்ற எல்லையையும் தாண்டினால், 771 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
இறங்கினால் வாராந்தர ரீதியாக மிகவும் குறைவான லெவல்களான 722 மற்றும் 689 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.
Motherson Sumi Wiring India Limited (NSE Symbol: MSUMI)
27.04.2023 விலை: ரூ.52.65
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.29 என்ற அளவிலும் செய்கின் மணி ப்ளோ (21) 0.10 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் 50 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்துள்ள இந்தப் பங்கு சராசரியாக ஐந்து நாள் அளவில் நடக்கும் வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமைவிட அதிகமாக நடந்து சமீபத்திய ரெசிஸ்டென்ஸான 54-க்கு மேல் இரண்டு நாள் பாசிட்டிவ் குளோஸானால் மட்டும் 57 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
இறக்கம் வந்தால், 48 மற்றும் 47 என்ற லெவலிலேயே சப்போர்ட் இருப்பதால், இந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கை டிரேட் செய்வதற்காக டிராக் செய்யலாம்.
HDFC Asset Management Company Limited (NSE Symbol: HDFCAMC)
27.04.2023 விலை: ரூ.1,733.60
வாங்கலாம்
வியாழன் இறுதியில் இந்தப் பங்கின் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.60 என்ற அளவிலும் கமாடிட்டி சேனல் இண்டெக்ஸ் (14) -129.67 என்ற அளவிலும் இருந்தது. சமீபத்தில் 1633 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்த இந்தப் பங்கு, 1821 என்ற முந்தைய ரெசிஸ்டென்ஸ் லெவலைத் தாண்ட முடியாமல் இறங்க ஆரம்பித்து, தற்சமயம் 1733 என்ற லெவலில் உள்ளது. 1713 என்ற லெவலுக்குக்கீழே போகாமல் வால்யூமுடன் (சராசரியாக ஐந்து நாள் வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூம் என்ற இரண்டு அளவீட்டிலும்) ஏற ஆரம்பித்து, 1749 என்ற லெவலைத் தாண்டி இரண்டு நாள்களுக்கு மேல் குளோஸானால் 1771 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
இறக்கம் வந்தால், வாராந்தர ரீதியாக 1691 என்ற லெவலில் ஒரு சப்போர்ட்டும் 1668-ல் ஒரு சப்போர்ட்டும் இருக்கிறது என்பதால், இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் டிரேடிங் செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.

IndusInd Bank Limited (NSE Symbol: INDUSINDBK)
27.04.2023 விலை: ரூ.1,144.75
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 6.01 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, CL) 61.32 என்ற அளவிலும் இருக்கிறது. 1092-ல் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்து, தற்சமயம் 1144-ல் இருக்கிறது. 1128-க்குக்கீழ் இறங்காமலும், பத்து நாள் சராசரி அடிப்படையில் வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூம் அதிகரிப்புடனும் விலை ஏறினால் 1164 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
மாறாக இறங்கினால், வாராந்தர ரீதியாக 1071 மற்றும் 1050 என்ற லெவல்களிலேயே சப்போர்ட்கள் இருப்பதால், இந்த அளவுக்கு அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் டிரேட் செய்வதற்காக டிராக் செய்யலாம்.
எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட விஷயமாகும்.
வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்குமுன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்- ஆன ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.