நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

சந்தையில் அடிக்கடி ஏற்ற, இறக்கம் வருவதால், குறைந்த எண்ணிக்கையில் வியாபாரம் செய்ய வேண்டும்.

திங்களன்று 18120-ல் ஆரம்பித்த நிஃப்டி, 18100 மற்றும் 18389 என்ற என்கிற அளவுக்குச் சென்றுவிட்டு, வியாழனன்று 18297-ல் முடிவடைந்தது.

வாராந்தர அளவீட்டில் 18135 மற்றும் 17973 என்ற லெவலில் வாராந்தர ரீதியிலான சப்போர்ட்டையும், 18424 மற்றும் 18552 என்ற லெவல்களில் வாராந்தர ரீதியிலான ரெசிஸ்டென்ஸையும் கொண்டு, வரும் வாரத்தில் நிஃப்டி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

ரீடெயில் சேல்ஸ், பிரிலிமினரி பில்டிங் பர்மிட்ஸ், இனிஷியல் ஜாப்லெஸ் க்ளெய்ம்ஸ் உள்ளிட்ட அமெரிக்கப் பொருளாதார டேட்டாக்களும் பேலன்ஸ் ஆஃப் டிரேட், டபிள்யு.பி.ஐ இன்ஃப்ளேஷன், டபிள்யு.பி.ஐ மேனுஃபாக்சரிங், ஃபாரெக்ஸ் ரிசர்வ் உள்ளிட்ட இந்தியப் பொருளாதார டேட்டா களும் வெளிவர இருக்கின்றன.

சந்தை ஏற்ற, இறக்கம் அடிக்கடி வந்து போவதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேடர்கள் வியாபாரம் செய்ய வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

TVS Motor Company Limited (NSE Symbol: TVSMOTOR)

11.05.2023 விலை: ரூ.1239.80

வாங்கலாம்

வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 8.77 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 12.30 என்ற அளவிலும் இருக்கிறது. 1084 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்துள்ள இந்தப் பங்கானது, தற்போது 1239 என்கிற லெவலை எட்டியுள்ளது.

1223-க்குக்கீழே இறங்காமல் அதிக வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமுடன் (ஐந்து நாள் சராசரியைவிட அதிக அளவில்) இரண்டுக்கும் மேற்பட்ட பாசிட்டிவ் குளோஸிங் வந்தால், 1260 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 1209 மற்றும் 1199 என்கிற லெவல்களிலேயே சப்போர்ட் இருப்பதால், இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.

VIP Industries Limited (NSE Symbol: VIPIND)

11.05.2023 விலை: ரூ.635.40

வாங்கலாம்

வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 4.30 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இண்டெக்ஸ் (14, CL) 68.30 என்ற அளவிலும், இருக்கிறது. 608 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு, 647 என்ற லெவலைத் தாண்ட முடியாமல் இறங்கி, தற்சமயம் 635-ல் இருக்கிறது.

630 என்கிற லெவலுக்குக் கீழே போகாமல், வால்யூமுடன் கூடிய (ஐந்து நாள் சராசரி வால்யூம் மற்றும் டெலிவரிவால்யூமை விட அதிக அளவில்) ஏற்றம் வந்தால் டெக்னிக்கலாக 652 என்ற எல்லை வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. மாறாக, இறக்கம் வந்தால் 614 மற்றும் 592-ல் மட்டுமே சப்போர்ட் இருப்பதால், இந்தளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்கும் திறன்கொண்ட டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்துப் பரிசீலிக்கலாம்.

சராசரியாக அன்றாடம் குறைவான எண்ணிக்கையில் வியாபாரமாகும் பங்கு இது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

KEI Industries Limited (Nse Symbol: KEI)

11.05.2023 விலை: ரூ. 2074.55

வாங்கலாம்

வியாழன் இறுதியில் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 17.32 என்ற அளவிலும் செய்கின் மணி ஃப்ளோ (21) 0.21 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் 1817 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது, தற்சமயம் 2074-ல் டிரேடாகிக்கொண்டிருக்கிறது.

2032 என்கிற லெவலுக்குக் கீழே போகாமல் பத்து நாள் சராசரி வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமைவிட அதிக மாக நடந்து ஒன்றுக்கும் மேற்பட்ட பாசிட்டிவ் குளோஸிங் வந்தால் 2139 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால், 1967 மற்றும் 1860 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், இந்தளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் டிரேட் செய்வதற்காக டிராக் செய்யலாம். சராசரியாக அன்றாடம் குறைவான எண்ணிக்கையில் வியாபாரமாகும் பங்கு இது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Greenpanel Industries Limited (NSE Symbol: GREENPANEL)

11.05.2023 விலை: ரூ.330.05

வாங்கலாம்

வியாழன் இறுதியில் இந்தப் பங்கின் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 2.48 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 8.24 என்ற அளவிலும் இருந்தது. சமீபத்தில் 291 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்த இந்தப் பங்கு, தற்சமயம் 330-ல் இருக்கிறது.

320-க்குக் கீழே செல்லாமல் விலை ஏற்றத்துடன் ஐந்து நாள் சராசரி வால்யும் மற்றும் டெலிவரி வால்யூமைவிட வர்த்தகம் அதிகமாக நடந்தால், 343 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால், 307 மற்றும் 283 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் டிரேடிங் செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது.

பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்குமுன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும்.

சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.