
அடுத்த வியாழக்கிழமை எஃப்&ஓ எக்ஸ்பைரி வருவ தால், அதை ஒட்டியே சந்தையின் போக்கு இருக்கும்!
திங்களன்று 18339-ல் ஆரம்பித்த நிஃப்டி 18104 மற்றும் 18458 என்ற என்கிற அளவுக்குச் சென்றுவிட்டு, வியாழனன்று 18129-ல் முடிவடைந்தது.

18004 மற்றும் 17877 என்ற லெவலில் வாராந்தர ரீதியிலான சப்போர்ட்டையும், 18358 மற்றும் 18585 என்ற லெவல்களில் வாராந்தர ரீதியிலான ரெசிஸ்டென்ஸையும் கொண்டு, வரும் வாரத்தில் நிஃப்டி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எஸ்&பி குளோபல் சர்வீசஸ், காம்ப்போசைட் மற்றும் மேனுஃபேக்சரிங் பி.எம்.ஐ, டியூரபிள் கூட்ஸ் ஆர்டர்ஸ், பர்சனல் ஸ்பெண்டிங்/இன்கம் உள்ளிட்ட பல அமெரிக்கப் பொருளா தார டேட்டாக்களும், வாராந்தர வெளியீடான ஃபாரெக்ஸ் ரிசர்வ் உள்ளிட்ட சில இந்திய பொருளாதார டேட்டாக்களும் வெளிவர இருக்கின்றன.

மேலும், அடுத்த வியாழக்கிழமை எஃப் & ஓ எக்ஸ்பைரி நடைபெற உள்ளதால், அதை யொட்டியே சந்தையின் போக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தவிர, உலகச் செய்திகளை சார்ந்து சந்தையின் வாலட்டை லிட்டி தொடர வாய்ப்பிருப்பதால், கட்டாயம் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப் லாஸுடன் மட்டுமே டிரேடர்கள் வியாபாரம் செய்ய வேண்டும்.
DCB Bank Limited (NSE Symbol: DCBBANK)
18.05.2023 விலை: ரூ.114.20
வாங்கலாம்
வியாழன் இறுதி நிலவரப்படி, எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.67 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 4.01 என்ற அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் 105 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்த இந்தப் பங்கானது, 118 என்ற லெவலைத் தாண்ட முடியாமல் (இதற்குமுன் இரண்டு முறை கண்ட ரெசிஸ்டென்ஸ்) தற்போது 114 என்ற லெவலை எட்டியுள்ளது.
112-க்குக் கீழே இறங்காமல் அதிக வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூம் நடந்து (ஐந்துநாள் சராசரியைவிட அதிக அளவில்) இரண்டுக்கும் மேற்பட்ட பாசிட்டிவ் குளோஸிங் வந்தால் 119 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
இறக்கம் வந்தால் 111 மற்றும் 109 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் இருப்பதால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.

Berger Paints (I) Limited (NSE Symbol: BERGEPAINT)
18.05.2023 விலை: ரூ.622.75
வாங்கலாம்
வியாழன் இறுதியில் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) -0.44 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 1.48 என்ற அளவிலும் இருக்கிறது.
சமீபத்தில் வந்த வேகமான இறக்கத்தில் 610 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது, தற்சமயம் 622-ல் டிரேடாகிக்கொண்டிருக்கிறது. ஐந்து நாள் சராசரி வால்யூம் மற்றும் டெலிவரி வால்யூமை விட அதிகமாக நடந்து, தொடர்ந்து இரண்டு நாள்கள் பாசிட்டிவ் குளோஸிங் வந்தால் 631 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.
இறக்கம் வந்தால் 611 மற்றும் 597 என்ற லெவல்களிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், இந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் டிரேட் செய்வதற்காக டிராக் செய்யலாம். சராசரியாக அன்றாடம் குறைவான எண்ணிக்கையில் வியாபாரமாகும் பங்கு இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

PCBL (NSE Symbol: PCBL LIMITED)
18.05.2023 விலை: ரூ.130.70
வாங்கலாம்
வியாழன் இறுதியில் இந்தப் பங்கின் எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.12 என்ற அளவிலும் ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) 3.08 என்ற அளவிலும் இருந்தது.
சமீபத்தில் 126 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்து ஏற ஆரம்பித்த இந்தப் பங்கு, தற்சமயம் 130-ல் இருக்கிறது. 127-க்குக் கீழே போகா மல் ஐந்து நாள் சராசரி வால்யும் மற்றும் டெலிவரி வால்யூமைவிட வர்த்தகம் அதிகமாக நடந்து விலை ஏற்றமும் தொடர்ந்தால், 136 என்ற லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்பு உள்ளது. இறக்கம் வந்தால் 124 மற்றும் 122 என்ற லெவல் களிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடிந்த டிரேடர்கள் மட்டுமே இந்தப் பங்கில் டிரேடிங் செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம்.
எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர் களுக்கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது மிக அதிக அளவிலான பணரீதியான ரிஸ்க்கைக் கொண்ட விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வை ஸரிடம் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.அடுத்த வியாழக்கிழமை எஃப்&ஓ எக்ஸ்பைரி வருவ தால், அதை ஒட்டியே சந்தையின் போக்கு இருக்கும்!
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters and the data is compiled by S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analyst’). S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analysts) Regulations, 2014 with registration number INH200001384, Address: 750/1, Poonga Nagar, Civil Aerodrome (P.O.), Coimbatore -641 014. Name of the Compliance & Grievance Officer: S Karthikeyan, e-mail id: prof.kkn@gmail.com Phone No.0422-2594600.
Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exist no conflict of interest that can bias his views in this report. The Analyst do not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)