நடப்பு
Published:Updated:

சிம்சன் பைபேக் ஆஃபர்... என்ன சிக்கல்? - பங்குதாரர்களின் நிலைப்பாடு என்ன..?

சிம்சன் 
பைபேக் ஆஃபர்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்சன் பைபேக் ஆஃபர்

சொத்து மதிப்பீடு செய்யும்போது இரு வேறு கருத்துகள் உருவாவது என்பது இயற்கையான விஷயமே!

ங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்குக் கொடுத்த பங்குகளை ‘பைபேக்’ செய்வது போல, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனமும் ‘பைபேக்’ மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிம்சன் அண்டு கம்பெனி, தன் பங்குதாரர்களிடம் இருக்கும் பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

சிறுபான்மைப் பங்குதாரர்கள்

தற்போதைய நிலையில், சிம்சன் நிறுவனத்தின் வசம் 99.34% பங்குகள் இருக்கின்றன. மீதமுள்ள 0.66% பங்குகள் சிறுபான்மை பங்குதாரர்களிடம் உள்ளன. சில மாதங்களுக்கு முன், பங்குகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் சிறுபான்மை (minority) பங்குதாரர்களில் சிலர் தங்களின் பங்குகளை நிறுவனத்துக்கே தந்துவிட்டார்கள். ஆனால், சிறுபான்மை பங்குதாரர்கள் சிலர் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு நிறுவனம் நியாயமான விலை தந்தால் மட்டுமே திரும்பக் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

நிறுவனத்தின் விலை ரூ.14,860

தன் பங்குதாரர்களிடம் இருக்கும் 0.66% பங்குகளுக்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.14,860 கொடுப்பதாக நிறுவனத்தின் தரப்பில் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், சிறுபான்மை பங்குதாரர்கள், இந்த விலை நியாயமான விலை கிடையாது எனவும், அவர்கள் எதிர்பார்க்கும் விலையில் மூன்றில் ஒரு பங்குதான் இது என்றும் வாதிடுகிறார்கள்.

சிம்சன் பைபேக் ஆஃபர்... என்ன சிக்கல்? - பங்குதாரர்களின் நிலைப்பாடு என்ன..?

இதுகுறித்து, சிறுபான்மை பங்குதாரர்களில் ஒருவரான அண்ணாமலையிடம் பேசினோம். “சிம்சன் நிறுவனம் நிர்வகித்துவரும் சொத்துகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அந்தச் சொத்துகளின் மதிப்பைக் குறைவாகக் காட்டி, தன் பங்குதாரர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலையையும் குறைத்துக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். இந்தச் சொத்துகளை எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்தார்கள் அல்லது மதிப்பீட்டாளரால் எப்படி மதிப்பீடு செய்யப்பட்டது என்பது குறித்து எங்களுக்கு சொல்லவில்லை. அதனால் பங்குக்கான இந்த விலையை எங்களால் ஏற்க முடியாத நிலை. ஒரு பங்கின் நியாயமான மதிப்பு ரூ.50,000 ஆக இருக்க வேண்டும் என்பது எங்கள் மதிப்பீடு’’ என்றார் அவர்.

சொத்தை மதிப்பீடு செய்யும்போது இருவேறு கருத்துகள் உருவாவது என்பது இயற்கையான விஷயமே. சிம்சன் நிறுவனம் இந்த விஷயத்தில் என்ன முடிவை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே இந்த ‘பைபேக்’ இருக்கிறது!