தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘‘இணைப்புக்குப் பிறகு ஶ்ரீராம் ஃபைனான்ஸின் சொத்து மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது..!’’

உமேஷ் ரெவங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
உமேஷ் ரெவங்கர்

இணைப்பு

ஶ்ரீராம் குழுமத்தின் ஶ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி, ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ், ஶ்ரீராம் கேப்பிடல் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களையும் இணைத்து ஶ்ரீராம் ஃபைனான்ஸ் என்ற ஒரே நிறுவனமாக உருவாக்கும் திட்டம் சமீபத்தில் செயல் படுத்தப்பட்டது. இந்த இணைப்புக்குப் பிறகு ஶ்ரீராம் ஃபைனான்ஸ் திட்டங்கள் என்ன, இலக்கு கள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஶ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் உமேஷ் ரெவங்கரிடம் பேசினோம்.

இணைப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது ஶ்ரீராம் ஃபைனான்ஸ்?

‘‘இந்த இணைப்புக்குப் பிறகு நல்ல மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. வணிக ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல விஷயங்கள் மேம் படுத்தப்பட்டிருக்கின்றன. இணைப்புக்குப் பிறகு இந்தியாவின் மிகப் பெரிய ரீடெய்ல் என்.பி.எஃப்.சி என்ற இடத்தை ஶ்ரீராம் ஃபைனான்ஸ் எட்டியிருக் கிறது.

இந்த இணைப்பின்போது நிறுவனத்தின் மொத்த சொத்து நிர்வகிப்பு ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் 67 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் 52% கிராமப்புறங்களில் உள்ளன. நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.29,700 கோடி என்ற நிலை யிலிருந்து ரூ.37,500 கோடியாக உயர்ந்திருக்கிறது. இணைப்பு அறிவிப்பின்போது நிறுவனத் தின் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் உள்ள விகிதம் 28 சதவிகிதமாக இருந்தது, இணைப்புக்குப் பிறகு, இது 26 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது.’’

உமேஷ் ரெவங்கர்
உமேஷ் ரெவங்கர்

நிறுவனங்கள் இணைக்கப் படும்போது பல்வேறு முரண்கள் உருவாகும், சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

‘‘நிறுவனங்கள் இணைக்கப்படும்போது இரு வேறு நிர்வாகம், இருவேறு பணி யாளர்கள் குழு, இரு வேறு பணிக் கலாசாரம் இணைக்கப்படுகிறது. எனவே, சவால்கள், பிரச்னைகள் கட்டாயம் இருக்கவே செய்யும். ஆனால், நிர்வாகத்திலும், பணி யாளர்களுக்கும் இடையே எந்தவித பிரச்னையும் வராமல் இணைப்பின் அவசியத்தையும், அது ஏற்படுத்தப்போகும் மாற்றத் தையும், மாற்றத்தில் அவர் களுக்கான பலன் என்ன என்பதையும் அவர்களிடத் தில் புரியவைப்பதன் மூலம்தான் சுமுகமாக இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம்.’’

புதிய திட்டங்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள்?

‘‘நிறுவனத்தின் கிரெடிட் ரேட்டிங் தரத்தை உயர்த்த இலக்கு வைத்திருக்கிறோம். இப்போது AA+ தரத்துடன் இருக்கும் ராம் ஃபைனான்ஸ் கிரெடிட் ரேட்டிங்கை AAA+ ஆக மேம்படுத்த தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். சுயதொழில் செய்பவர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்களை வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக் கிறோம். தனிநபர் கடன்கள் பிரிவிலும் தீவிர கவனம் செலுத்திவருகிறோம்.

ஆனால், இந்தக் கடன்களை முதல்கட்டமாக ஏற்கெனவே ஶ்ரீராம் குழும நிறுவனத்தில் நல்ல டிராக் ரெக்கார்டு உள்ள, கடன்களைச் சரியாகத் திரும்பச் செலுத்தியிருக்கிற வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளோம். எங்களுடைய கடன்களின் பெரும்பான்மை பாதுகாப்பற்ற உத்தரவாதமில்லாத கடன்கள்தான். ஆனாலும், மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 15% ஆண்டு கூட்டு வளர்ச்சியை எட்டுவதற்கான இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

இது ஃபின்டெக் யுகம். இந்த உங்கள் நிறுவனத்தை எப்படி நிலைநிறுத்திக்கொள்ளப் போகிறீர்கள்?

‘‘ஃபின்டெக் நிறுவனங்களின் வருகை ஒருபக்கம் போட்டிச் சூழலை தீவிரப்படுத்தினாலும் எங்கள் நோக்கத்திலிருந்தும், வணிக உத்திகளிலிருந்தும் நாங்கள் விலகப்போவதில்லை. யாரையும் போட்டி யாகப் பார்க்க நினைக்கவில்லை. எல்லோருடனும் இணைந்து இயங்கவே விரும்புகிறோம். ஶ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதிச் சேவைகள் அனைத்தையும் பெறும் வகையில் MyShriram என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.’’

தமிழகத்தில் ஶ்ரீராம் ஃபைனான்ஸ் வணிகம் எப்படி?

‘‘ஒட்டுமொத்த ஶ்ரீராம் ஃபைனான்ஸ் சொத்து நிர்வகிப்பில் தமிழகம் மட்டுமே ரூ.30,000 கோடிக்கும் மேல் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் ஶ்ரீராம் ஃபைனான்ஸ் வலுவான இடத்தை எப்போதுமே தக்கவைத்திருக்கிறது. எப்போதுமே தமிழகம் ஶ்ரீராம் குழும நிறுவனங்களின் வணிக மையமாக இருக்கும்.’’