
ஓய்வூதியம்
மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், பென்ஷன் பெறுபவர்களுக்குப் பயனளிக்கும் பிரத்யேக இணையதளமான ‘பவுசியா 9.0’ (https://bhavishya.nic.in/) என்ற சேவையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த இணையதளத்தைப் பாரத ஸ்டேட் வங்கி (SBI) வடிவமைத்துள்ளது.
இந்த இணையதளம் மத்திய அரசு ஊழி யர்கள் அனைவருக்கும் பென்ஷன் குறித்த அனைத்துச் சேவைகளையும் வழங்கும் ஒரே இணையதளமாக இனி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் எந்த வங்கி மூலம் பென்ஷன் பெற்றாலும் அது பற்றிய அனைத்து விவரங்களையும் ‘பவுசியா’ இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள லாம். அரசு ஊழியர்கள், எந்த வங்கி மூலம் பென்ஷன் பெற்றுக்கொள்வது என்பதை இந்த இணையதளத்தின்மூலம் தேர்வு செய்யலாம்.

ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு சேவைகளை மாற்றிக்கொள்ள விரும்பினாலும் இந்த இணையதளத்தின் மூலம் அதை மாற்றி அமைத்திட முடியும். பென்ஷன் தொடர்பான ஸ்டேட்மென்ட் விவரங்கள், வருமான வரி தொடர்பான விவரங்கள், நாமினியை மாற்றி அமைப்பது, வாடிக்கையாளர்களின் விவரங் களை மாற்றி அமைத்துக்கொள்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் இந்த இணைய தளத்தின் மூலம் செய்துகொள்ளலாம். மேலும், பென்ஷன் தொடர்பான புகார்களை இந்த இணையதளத்தின் மூலம் பதிவு செய்யவும் முடியும்.
16 வங்கிகளையும் ஒன்றிணைத்து ஒரே இடத்தில் பென்ஷன் தொடர்பான அனைத்து சேவைகளை வழங்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே சாளரத்தின் கீழ் அனைத்து விவரங்களும் கிடைப்பதால், இந்த நடவடிக்கை அனைத்து பென்ஷன் பெறும் அரசு ஊழியர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பென்ஷன் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் இனி ‘பவுசியா’ இணையதளத்தைப் பயன்படுத்தி பயன் அடையலாமே!