
`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்
வேலை செய்யும் இடத்தில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லையா... வேலையிலிருந்து தூக்கிவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறதா... இரவு 2:30 மணிக்குத் திடீரென்று விழித்து வருங்காலத்தை நினைத்து பயப்படு கிறீர்களா? கவலை வேண்டாம்... இது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மிகச் சிறந்த நிகழ்வாகும்!

உண்மைதான்... இது மிகவும் நல்லது. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்... உங்களுக்கு வேறுவழியே இல்லை என்கிற சூழலில் என்ன செய்வீர்கள்? சூழலுக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிவிடும். புதிய சூழ்நிலையை விரும்பவில்லையென்றாலும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்? அதற்கு நீங்கள் தயாராகிவிடுவீர்கள். இப்போது சொல்லுங்கள்... அந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பது உண்மைதானே?
தொழில்முனைவோராக எளிய வழி!
நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்கள் யோசனை தொடர்ச்சியாக நிராகரிக்கப்படும்போது வேலையைத் தூக்கியெறி யுங்கள். இதுதான் தொழில் முனை வோராக உருவாக எளிய வழி.
காலமெல்லாம் போராடிக் கொண்டே, உங்களை இழந்து கொண்டே இருக்க முடியாது. சரியான இடத்தில், சிறப்பாக இருந்தீர்களேயானால் உங்கள் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அந்தக் கடிதம் ஏற்கப்படவில்லையெனில், உங்கள் வேலையை, உங்களுக்கேற்ற விதிமுறைக்கேற்ப தொடர்வீர்கள்.
உங்கள் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டால், நீங்கள் சரியான இடத்தில் இல்லை எனப் புரிந்துகொள்ளுங்கள். சரியில்லாத இடத்தில் இருப்பதைவிட, அந்த இடத்திலிருந்து வெளியேறுவது மிகவும் சிறந்தது.
எது மோசமான ஸ்டார்ட்அப் யோசனை?
புதிய ஸ்டார்ட்அப் தொழில் யோசனையை முதன்முதலில் ஒருவருக்குச் சொல்லும்போது அவர் உற்சாகம் அடையவில்லையா? அதே யோசனையைப் பத்துக்கும் மேற்பட்ட பல தரப்பட்ட நபர்களிடம் ஆலோசிக்கும்போதும் உற்சாசம் பிறக்கவில்லையா? அப்படியானால், அதை ஒரு சிறந்த யோசனையாகக் கருத முடியாது.
எது உற்சாகத்தைக் கொடுக்கவில்லையோ (Excitement), அது ஒரு சிறந்த ஸ்டார்ட்அப் தொழிலாக உருவாக வாய்ப்பு குறைவே.
எது சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியா (Good Idea)
எந்த ஒரு ஸ்டார்ட்அப் தொழில் யோசனையும் ஒரு வகையான ரசனையின் (Taste) வெளிப்பாடே.
ஒரு சிறந்த யோசனை என்பது ஒரு பிரச்னைக்குப் (Problem) புத்திசாலித்தனமான தீர்வாக (Clever Solution) இருக்க வேண்டும். பயன்படுத்தாத சிறந்த யோசனை என்பது மதிப்பில்லாததாகக் (No Value) கருதப்படும், பேப்பரில் டைப் செய்யப்பட்டு கிடப்பது உபயோகமில்லாததுதானே? எந்தவொரு புதிய எண்ணமும் முதலில் பயன்படுத்தப்பட வேண்டும்... அதையொரு சிறந்த விஷயமாக உலகம் அறிய வேண்டும்.
எல்லா வளர்ச்சியும் நல்ல வளர்ச்சியல்ல. புற்றுநோய்க் கட்டி வளர்கிறது என்றால் அதை நாம் நல்ல வளர்ச்சியாகக் கருதுவதில்லை.
எந்த எண்ணமாக இருந்தாலும், செயல்படுத்திப் பார்க்கப்படும்போது மட்டுமே அது புதிய வடிவம் பெறுகிறது. அந்த யோசனை அதிக நாள்கள் பயன்பாட்டில் இருக்கும்போது சிறந்த ஐடியாவாக உருப்பெறுகிறது. அதனால்தான் சக்கரத்தின் கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் மிகச் சிறந்த எண்ணமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது.
எளிமையான (Simplicity) ஐடியா எளிதில் சென்றடையும்!
இங்கிலாந்திலுள்ள ஒரு பூங்காவில் பார்வையற்ற ஒருவர் தொப்பியைக் கவிழ்த்து வைத்துக்கொண்டு, பூங்காவுக்கு வரும் நபர்களிடம் பணம் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஓர் அட்டையில் `நான் பார்வை இல்லாதவன்' என எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது தொப்பியில் அதிக அளவு நாணயங்கள் விழுவதில்லை. ஒவ்வொரு நாளும் அவருக்கு சோகமாகவே கழிந்தது.

இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் அவருக்கு உதவ நினைத்தார். அவரது கையில் வைத்திருந்த அட்டையை வாங்கி `நான் பார்வை இல்லாதவன்' என்ற வாக்கியத்துக்கு முன் `இது வசந்த காலம்' என்ற வார்த்தையை எழுதினார்.
அதன்பிறகு அவரது தொப்பியில் நிறைய நாணயங்கள் விழ ஆரம்பித்தன. ஒரு சிறிய வார்த்தைச் சேர்ப்பு அந்தப் பார்வையற்றவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஸ்டார்ட்அப் தொழிலும் எளிய சிந்தனையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஸ்டார்ட்அப் பெண்களே... பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள் (Take Charge)!
உங்களுக்கு நீங்களே விமர்சகராக மாறிவிடுங்கள் (Own Worst Critic). இதுவே என்றும் சிறந்தது.
உங்கள் வேலையில் தவறுகள் ஏற்படும்போது பழியை மற்றவர்மேல் போட வேண்டாம். அந்தத் தவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்கள் மனப்பக்குவத்தைப் பாராட்டுவார்கள். அதன் மூலம் உங்கள் தகுதியை (Capable) நீங்கள் எளிதாக உணரலாம்.
எல்லா வளர்ச்சியும் வளர்ச்சியல்ல... எல்லா வருமானமும் நல்ல வருமானம் அல்ல!
பெரும்பாலான தொழில்முனைவோர் தரமான வருமானத்தை நோக்கிய வளர்ச்சியில் கவனம்கொள்வதில்லை. ஒரு வாடிக்கையாளர் (Customer) நிறுவனத்துக்குக் கொடுக்கும் வருமானமானது ஒரு சராசரி பரிவர்த்தனை (Transactional) வருமானமாக இல்லாமல், ஓர் ஆர்வமுள்ள ரசிகர் கூட்டம் (Raving Fan) போன்ற உணர்வுடன் இருக்க வேண்டும். அப்படியொரு விருப்பத்துடன் உங்கள் சேவையையோ, பொருளையோ வாங்க வேண்டும்.
சராசரியான வருமானம் தொழிலுக்கு ஒரு காலகட்டத்தில் ஆபத்தானதாக அமையும். எல்லா வளர்ச்சியும் நல்ல வளர்ச்சியல்ல. புற்றுநோய்க் கட்டி வளர்கிறது என்றால் அதை நாம் நல்ல வளர்ச்சியாகக் கருதுவதில்லை. ஒரு தொழிலுக்கு வருமானம் என்பது உடலுக்குத் தேவையான காற்று மற்றும் தண்ணீர் போல மிக அவசியம்தான்.
அந்த வருமானமானது ஆர்வமுள்ளவரிட மிருந்து பெறப்பட வேண்டும். ஏனோ தானோ என்று சராசரிப் பரிவர்த்தனை மூலம் பெறப்படும் ஒரு ரூபாயும், பொருள் அல்லது சேவையின் மீது தீராத ஆர்வமுள்ளவரிடமிருந்து பெறப்படும் ஒரு ரூபாயும் நிச்சயமாக வேறுபட்டதாகும்.
சராசரி ஒரு ரூபாய் வருமானத்தை மாசுபட்ட வருமானம் (Polluted Revenue) என்று சொல்லலாம். இது தரமில்லாத காற்றைச் சுவாசிப்பது போன்றது. தொழிலை நோய்வாய்ப்படவைக்கும். அந்தக் காற்றை ரொம்ப நாள் சுவாசித்து உயிர்வாழ முடியாது. வாடிக்கையாளர் எந்த நேரத்திலும் வேறு பொருளையோ, சேவையையோ நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.
ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் வாடிக்கையாளர் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உங்கள் தொழிலின் ஒவ்வொரு நடவடிக்கையும் வாடிக்கையாளரைப் பரவசப்படுத்த வேண்டும். அவர்கள் இதை உணர்ந்து ரசிக்க வேண்டும். இந்த நிலையை எட்டிய நிறுவனங்கள் என்றும் செழிப்பாக இருக்கும். போட்டியாளர்களின் பிரமிப்புக்கு இடையே மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
10% அதிகப்படியான முயற்சி...
289% பயன்கள்!
ஸ்டார்ட்அப் தொழில்களில் மார்க்கெட்டிங் யுத்திகளே விளைவுகளைத் தீர்மானிக்கின்றன. ஓர் ஆன்லைன் ஸ்டார்ட்அப் தொழிலை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

நிஷா, பெண்களுக்கான டிசைனர் உடைகளுக்கான இணையதள ஸ்டோர் வைத்துள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களி லிருந்து பெறப்பட்ட டிசைனர் கலெக்ஷனை 50 சதவிகித லாபத்தில் விற்று வருகிறார். அவருடைய ஆன்லைன் மார்க்கெட்டிங் முறையில் அதிக பலன்கள் பெறுவதற்கான வழிமுறையைப் பார்ப்போம்.
அவருடைய ஸ்டார்ட்அப் பின்வருவது போல செயல்படுகிறது.
பொருள் வாங்குவதற்கான காரணங் களை வலிமைப்படுத்தி (Compelling Reason) இணையதளத்துக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 10 சதவிகித அளவுக்கு அதிகப்படுத்தினால், பின்வருவதுபோன்ற அபரிமிதமான பலன்களைப் பெற முடியும்.

இந்த மாதிரி 10% மாற்றத்தை ஏற்படுத்தி 289% அதிக லாபத்தைப் பெறலாம். மார்க்கெட்டிங் முறையில் கவனம் செலுத்தினால் ஸ்டார்ட்அப் தொழில்கள் பெரிய வெற்றியை அடைய முடியும்!
ஸ்டார்ட்அப் தொடங்க விரும்புவோர்
மேலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அடுத்தடுத்த இதழ்களில்...
ஸ்டார்ட்அப்... சக்சஸ்!
எது சிறந்த ஸ்டார்ட்அப் (Good Idea) ஐடியா?
எல்லா வளர்ச்சியும் வளர்ச்சியல்ல! எல்லா வருமானமும் நல்ல வருமானம் அல்ல!
வேலையை ராஜினாமா செய்வது சிறந்ததே!
எளிமையான சிந்தனை (Simplicity) எளிதில் சென்றடையும்.
எது மோசமான (Bad Idea) ஸ்டார்ட்அப் யோசனை?
10% எக்ஸ்ட்ரா முயற்சி! 289% பயன்கள்!
வேலையிலிருந்து தூக்கிவிட்டார்களா...
மிகவும் நல்லது!
ஸ்டார்ட்அப் பெண்களே... பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்! (Take Charge)