Published:Updated:

முன்னணியில் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... 'சாஸ்' துறையில் சாதனை!

ஸ்டார்ட்அப்
News
ஸ்டார்ட்அப்

இன்றைக்கு சாஸ் துறையைச் சார்ந்த நான்கு நிறுவனங்கள் தலா 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.700 கோடி) வருமானம் ஈட்டுபவையாக வளர்ச்சி கண்டிருக்கின்றன

Published:Updated:

முன்னணியில் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... 'சாஸ்' துறையில் சாதனை!

இன்றைக்கு சாஸ் துறையைச் சார்ந்த நான்கு நிறுவனங்கள் தலா 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.700 கோடி) வருமானம் ஈட்டுபவையாக வளர்ச்சி கண்டிருக்கின்றன

ஸ்டார்ட்அப்
News
ஸ்டார்ட்அப்

ஏறக்குறைய மகாபலிபுரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் அந்த ஹோட்டலில் இந்தியா முழுக்க மென்பொருள்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் தொழில் நடத்துபவர்கள் கூடியிருந்தார்கள். ஜீன்ஸ், டிசர்ட் சகிதமாக இருந்த அவர்கள், 'நாளைய இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நடத்தப் போகிறவர்கள் நாங்கள்தான்' என்ற பெருமிதத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் வாயிலிருந்து வந்துவிழும் வார்த்தைகள் 'மில்லியன்', 'பில்லியன் டாலர்' போன்றவையாகத்தான் இருந்தன. யார் இவர்கள்..?

இன்று இணையத்தில் நம் தேவைகள் அதிகம். ஆம்பூர் பிரியாணி வாங்குவது முதல் அமெரிக்காவுக்குப் பணம் அனுப்புவது வரை அத்தனை வேலைகளையும் இணையதளம் மூலம் செய்து முடிக்க நமக்குப் பலவிதமான மென்பொருள்கள் (Softwares) தேவைப்படுகின்றன. நம் தேவைகளுக்கேற்ப 1700-க்கும் மேற்பட்ட பிரிவுகளில், ஆயிரக்கணக்கான மென்பொருள்களை தினம் தினம் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனர்கள்.

ஒரு நிறுவனம் இந்த மென்பொருள்களை தன் பயன்பாட்டுக்கு வாங்க வேண்டுமென்றால், பல லட்ச ரூபாயைச் செலவு செய்ய வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனமே அதை உருவாக்க வேண்டும். இரண்டுமே நடக்கிற காரியமில்லை எனும்போது, 'மாதத்துக்கு இவ்வளவு கட்டணம் கட்டுங்கள்; உங்களுக்கான மென்பொருள்களை நாங்கள் தந்துவிடுகிறோம்' என்று சேவை அடிப்படையில் மென்பொருள்களைப் பயன்படுத்தத் தருவதுதான் 'சாஸ்' (SaaS - Software as a Service).

இந்த சாஸ் துறையில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பைக் கண்டு உலகமே வியக்கிறது. குறிப்பாக, சென்னையிலிருந்து செயல்படும் ஜோஹோ (Zoho), ஃப்ரெஷ்வொர்க் (Freshwork), கிஸ்ஃப்ளோ (KissFlow), சார்ஜ்பீ (Chargebee) நிறுவனங்களின் பங்களிப்பு உலக அளவிலும், இந்திய அளவிலும் வியக்க வைப்பது.

இன்றைக்கு சாஸ் துறையைச் சார்ந்த நான்கு நிறுவனங்கள் தலா 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.700 கோடி) வருமானம் ஈட்டுபவையாக வளர்ச்சி கண்டிருக்கின்றன. இரண்டு நிறுவனங்கள் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) வருமானத்தையும், 37 நிறுவனங்கள் 5 மில்லியன் டாலர் (ரூ.35 கோடி) முதல் 50 மில்லியன் டாலர் வரையிலான வருமானத்தையும் கொண்டிருப்பதை உலகம் முழுக்க உள்ள சாஸ் நிறுவனங்கள் வியப்புடன் பார்த்துவருகின்றன.

முன்னணியில் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... 'சாஸ்' துறையில் சாதனை!

இந்த சாஸ் துறையைச் சார்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் கூடி, தங்கள் துறையில் நடக்கும் நல்ல, கெட்ட விஷயங்களை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் பகிர்ந்துகொள்ள 'சாஸ்பூமி' (SaaSBoomi) என்ற இரண்டு நாள் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் நடக்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வில், இந்த ஆண்டு இந்தியா முழுக்க 450-க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனர்கள் கலந்துகொண்டனர்.

சாஸ் துறையில் நம் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கலக்கப்போகின்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் முன்னணியில் இருப்பது நமக்குப் பெருமையே! இன்றைய இளைஞர்கள் சாஸ் துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்!

- சாஸ் துறையில் இருப்பவர்கள் தங்களது அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர். புதியவர்களுக்கு மிக முக்கியமான கைடன்ஸாக இருக்கக் கூடிய இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை முழுமையாக நாணயம் விகடன் இதழில் தெரிந்துகொள்ள > ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடுத்த மைல்கல்! - சாதித்த சாஸ் https://www.vikatan.com/business/tech-news/startup-meet-roundup-happened-in-mahabalipuram

கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்!

'படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை' என்று இளைஞர்கள் பலர் வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நவீன தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தி சாதனை படைத்துவருகிறார்கள் கரூரைச் சேர்ந்த வெங்கட் ரத்னம், பிரதீஷ்குமார், சபரிநாதன், கார்த்திக் ஆகியோர்.

சென்னை, மும்பை எனப் பெருநகரங்களில் ஸ்டார்ட்அப்களை உருவாக்கிச் சாதிப்பது பெரிய விஷயமல்ல... கரூர் போன்ற வளரும் நகரங்களிலும் ஸ்டார்ட்அப்பில் கால்பதித்து இந்த இளைஞர்கள் கலக்கிவருகிறார்கள்.

முன்னணியில் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... 'சாஸ்' துறையில் சாதனை!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், 'டெலிவரி ஸ்டார்' என்ற ஆப்பின்மூலம் கரூரில் உணவு டெலிவரி செய்யும் தொழிலில் அசத்திவருகிறார்கள். 25 ஊழியர்கள், 80 ஹோட்டல்கள், 15,000 வாடிக்கையாளர்கள் என இவர்களின் வெற்றிப்பாதை வெகு அசத்தலானது. இந்த வெற்றிப் பயணத்தை முழுமையாக நாணயம் விகடன் இதழில் அறிய > 4 இளைஞர்கள்... 80 ஹோட்டல்கள்... 25 ஊழியர்கள்! - கலக்கும் கரூர் ஸ்டார்ட்அப்! https://www.vikatan.com/business/tech-news/know-about-this-karur-startup-started-by-4-youngsters

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9