ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“தோல்விக்கு பயந்து பிசினஸை விட்டுவிடாதீர்கள்!” - ஹோட்டல் பிசினஸில் கலக்கும் சிரிஷா மாதவி

சிரிஷா மாதவி
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிஷா மாதவி

ரெஸ்டாரண்ட் தொடங்குவது பெரிய விஷயமில்லை. அதைத் தனித்துவ மாகக் காட்ட என்ன செய்யப் போகி றோம் என்பதுதான் சவால்.

ஹோட்டல் இண்டஸ்ட்ரியில் பெண்களால் சாதிக்க முடியாது என் றொரு பொதுக்கருத்து இருக்கிறது. அதை உடைத்துக் காட்டிய பெண்களில் சென்னையைச் சேர்ந்த சிரிஷா மாதவியும் ஒருவர். உணவின்மீதான காதலால் ஹோட்டல் இண்டஸ்ட்ரியை தேர்ந்தெடுத்த சிரிஷா மாதவி, ஆரம்பத்தில் அந்த பிசினஸில் பல தோல்விகளைச் சந்தித்தவர். எல்லா வற்றிலிருந்தும் மீண்டவர், இன்று நான்கு உணவகங்களின் உரிமையாளர். ‘மேஃபிளவர் ரெஸ்டாரன்ட்’ என்ற இவரது ரெஸ்டாரன்ட் டுகள் குளோபல் குசின் எனப்படும் உலக ளாவிய உணவுகளுக்குப் பிரபலம்.

“கல்லூரிப் படிப்பை முடித்ததிலிருந்தே உணவகம் தொடங்க வேண்டும் என்ற கன வோடுதான் இருந்தேன். ஆனால் உடனடியாக அதைச் செயல்படுத்த முடியவில்லை. 2013-ம் ஆண்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸ் தொடங்கியபோது நண்பராக எனக்கு அறிமுகமானவர்தான் என் கணவர் தேஜஸ்வி. பிசினஸ் பார்ட்னர்ஸான நாங்கள் பிறகு லைஃப் பார்ட்னர்ஸாகவும் இணைந்தது தனிக்கதை. நன்றாகப் போய்க்கொண்டிருந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸில், ஐந் தாண்டுகளுக்குப் பிறகு திடீரென சறுக்கல்... அலுவலக வாடகை, பணியாளர்கள் சம்பளம் போன்றவற்றைச் சமாளிப்பதற்காக ‘வொர்க் அண்ட் கனெக்ட்’ என்ற பெயரில் கோவொர்க் கிங் ஸ்பேஸ் பிசினஸை ஆரம்பித்தோம்.

அதாவது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஃபர்னிச்சர், இன்டர்நெட், ஏசி, ஹவுஸ்கீப்பிங், டீ, காபி என அனைத்து வசதிகளோடு இடத்தையும் கொடுக்கும் பிசினஸ் அது. பிசினஸ் சூடுபிடிக்கவே, தி.நகரில் இன் னொரு கிளையையும் திறந்தோம். அப்போதுதான் பலநாள் கனவான ரெஸ்டாரன்ட் பிசினஸை ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது. ஏற்கெனவே இயங்கி வந்த நிறுவனத்தில் தரைத்தளத்தில் ‘மேஃபிளவர்’ ரெஸ்டாரன்ட்டையும், முதல் தளத்தில் கோ வொர்க்கிங் ஸ்பே ஸையும் அமைத்தோம்...’’ கனவு நன வான தருணம் பகிரும் சிரிஷா, ரெஸ்டா ரன்ட் பிசினஸை வளர்த்ததில் தங்கள் புதுமை முயற்சிகள் குறித்தும் பேசுகிறார்.

“ரெஸ்டாரண்ட் தொடங்குவது பெரிய விஷயமில்லை. அதைத் தனித்துவ மாகக் காட்ட என்ன செய்யப் போகி றோம் என்பதுதான் சவால். வெளிநாடு களில் பிரபலமாக உள்ள சிறப்பு உணவு களை நம்மூர் மக்களுக்கும் கொடுக்க நினைத்தோம். உலகளாவிய உணவுகளை உள்ளடக்கிய குளோபல் குசினையே எங்கள் ரெஸ்டாரன்ட்டின் ஸ்பெஷலாக மாற்றினோம். அந்த வகையில் அமெ ரிக்கா, இந்தோனேசியா, அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் அத்தனை நாடுகளின் பிரபல உணவுகளையும் அறிமுகம் செய் தோம். குறிப்பாக அந்த உணவுகளின் பாரம்பர்ய சுவை மாறாமலிருக்க அவற் றில் சேர்க்கப்படும் பொருள்களை அந்தந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தோம். உணவுத்துறை ஆலோசகர் கள், நிபுணர்கள், சமையற்கலைஞர் களைக் கொண்ட குழுவை உருவாக்கி னோம்.

“தோல்விக்கு பயந்து பிசினஸை விட்டுவிடாதீர்கள்!” - ஹோட்டல் பிசினஸில் கலக்கும் சிரிஷா மாதவி

உலக நாடுகளின் உணவுகளுக்கு ஆரம்பத்தில் மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பலருக்கு அவற்றை எப்படிச் சாப்பிடுவது என்றே தெரியவில்லை. ருசி எப்படியிருக்கும் என்ற சந்தேகம் இருந்தது. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வோர் உணவின் தனித்துவத்தையும் சுவையை யும் சொல்லிப் புரியவைத்தோம். வாடிக்கை யாளர்களின் ஆதரவோடு இன்று மூன்று கிளைகளாக வளர்ந்திருக்கிறோம்...’’ பெரு மையாகச் சொல்பவரை கொரோனா கால சவால் விட்டுவைக்கவில்லை.

‘`கொரோனா காலகட்டத்தில் ரெஸ்டா ரன்ட்டை பல மாதங்களுக்கு மூட வேண்டி யிருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் திறக்கலாம் என காத்திருந்தோம். ஆனால் ஒருகட்டத்தில் ரெஸ்டாரன்ட்டை மட்டு மல்ல, கோ வொர்க்கிங் ஸ்பேஸையும் மூடும் அளவுக்கு நெருக்கடி வந்தது. வீட்டை அடமானம் வைத்துத் தொடங்கிய பிசினஸ் இது. இத்தனை கஷ்டங்களுடன் பிசினஸை தொடர வேண்டுமா என்ற கேள்வி எழும் போதெல்லாம் ‘இதை விட்டுவிட்டு வேறென்ன செய்வது’ என்ற எண்ணமும் வரும். லாக்டௌன் காலத்தில் சமையல் ஆட்களைத் தக்கவைத்துக்கொள்வது அடுத்த சவாலாக இருந்தது. உலக நாட்டு உணவுகளை சமைக்கத் தெரியாத சமையற் கலைஞர்களுக்கு அவற்றைக் கற்றுக்கொடுத்து, பயிற்சி அளித்தோம். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்ததால் அத்தனை சவால்களில் இருந்தும் மீண்டு எழுந்தோம்...’’ நம்பிக்கை பகிர்பவர், ரெஸ்டாரன்ட்டின் பெயரான ‘மேஃபிளவர்’ என்பதன் அர்த்த மும் சொன்னார்.

“மேஃபிளவர் என்பது ஒரு மலரின் பெயர். நாங்கள் முதன்முதலில் ரெஸ்டா ரன்ட் ஆரம்பித்த இடத்தில் அந்த மேஃபிள வர் மரம் இருந்தது. அந்த ஞாபகத்தில் வைத்ததுதான் இந்தப் பெயர்.’’ என்றவர், இளம் தொழிலதிபர்களுக்கு அனுபவத்தி லிருந்து மெசேஜ் சொல்கிறார்.

‘`தோல்விக்கு பயந்து உங்கள் பிசினஸை விட்டுவிடாதீர்கள். உங்களிடம் உள்ள ஐடியாக்களை வெளியில் பகிராதீர்கள். நிறைய பேரிடம் அட்வைஸ் கேட்காதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி ஒருநாள் வசப்படும்.’’