நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘‘சினிமாவுல பெருசா சம்பாதிக்கல...’’ டிராட்ஸ்கி மருதுவின் பண அனுபவம்!

டிராட்ஸ்கி மருது
பிரீமியம் ஸ்டோரி
News
டிராட்ஸ்கி மருது

ஆயிரம் முதல் லட்சம் வரை... - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

"பணமா..? நான் இன்னும் அதைச் சம்பாதிக்கவே இல்லையே... பட், அதுக்கு காரணம் என் இயல்புதான்’’ - அதிர வைக்கிற மாதிரி சிரித்தபடி, தன்னுடைய பண அனுபவங்களை சுவாரஸ்யமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் 68 வயதான ஓவியர் டிராட்ஸ்கி மருது.

டிராட்ஸ்கி மருது
டிராட்ஸ்கி மருது

‘‘நான் பிறந்தது மதுரை கோரிப்பாளையத்தில். அதனால காந்தி மியூசியத்துக்கு அடிக்கடி போறது, ஞாயிற்றுக்கிழமை தோறும் இலவசமா கலைப்படங்களை ரசிக்கிறது, நிறைய அனிமேஷன் படங்கள் பார்க்கிறதுன்னுதான் என்னோட சிறு பிராயம் கழிஞ்சது. ஆனந்த விகடன்ல வந்த கோபுலுவின் படங்களும், திராவிட இயக்க பத்திரிகைகள்ல வந்த ஓவியங் களும் என்னை ரொம்பவே ஈர்த்துச்சு. ஓவியர் கே.மாதவனோட பொங்கல் வாழ்த்துகளை வாங்கி, அதை யாருக்கும் அனுப்பாம சேமிச்சு வெச்சுப்பேன். அந்தளவுக்கு அவர் ஓவியங்கள் மேல பித்து.

பள்ளிக்கூடத்துல ஓவியப் போட்டிகள்ல நான்தான் முதல் பரிசு வாங்குவேன். ஸோ, சின்ன வயசுலேயே ஓவிய ராகணும்னு முடிவு பண்ணிட்டேன். ஒன்பதாவது படிக்கிறப்ப, ‘உயிருள்ள படிப்பு இங்கே’ என்று ஓவியர் தனபால் எழுதிய கட்டு ரையைப் படிச்சேன். அந்த நொடியே ஓவியம் தான் என் எதிர்காலம்னு முடிவு செஞ்சுட்டேன்.

அந்தக் காலத்துல ஒன்பதாவது படிச்சாலே ஓவியக் கல்லூரியில் சேர்ந்துடலாம்னு அப்பா கிட்ட சொன்னப்ப, ‘பள்ளிப் படிப்பை முடிச்சே ஆகணும்’னு சொல்லிட்டார். அப்புறம் பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் என் சின்ன தாத்தா எனக்கும் என் ஓவிய ஆர்வத் துக்கும் ஆதரவா பேச, அவர் வீட்ல தங்கி சென்னை ஓவியக் கல்லூரியில் படிச்சேன்.

என் வாழ்க்கையில முக்கியமான வருடம் 1967. அப்ப நடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக 600 போர்டுகளுக்கு மேல நான் வரைஞ்சிருப் பேன். கட்சிக்காரங்க சுவர் சுவரா என்னைக் கூட்டிட்டுப் போய் வரையச் சொல்வாங்க. ஆனா, அந்த வயசுல இதை வெச்சு பணம் சம்பாதிக்கலாம்கிறது எனக்குத் தெரியலை.

சென்னை ஓவியக் கல்லூரியில் படிச்சிக் கிட்டிருந்தப்பவும் அப்பா அனுப்பின பணத்துலதான் வாழ்க்கை நடந்துகிட்டு இருந்துச்சு. ஏதாவது காமிக்ஸ்ல வரைஞ்சு 500 ரூபாய் கிடைச்சா, வீட்டுக்குத் தெரியாம நண்பர்களோட சேர்ந்து கொண்டாடித் தீர்த் திடுவோம். கூடவே, ஓவியக் கல்லூரி மாணவனா இந்தியா முழுக்க சுத்திப் பார்க்க அந்தப் பணம் உதவியா இருந்துச்சு.

படிப்பு முடிஞ்சதும், மெரிட்டில் மத்திய அரசோட நெசவாளர் ஆராய்ச்சிப் பணி மையத்தில் டிசைனராக வேலை கிடைத்தது. ஒன்பது வருஷம் அங்க வேலை பார்த்தேன். அதுக்கப்புறம் ‘9 to 5 ஜாப்’ செய்ய முடியலை. 1989-ல வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன். அங்க நான் கடைசியா வாங்கின சம்பளம் கிட்டத்தட்ட 50,000 ரூபாய். அரசு வேலை பார்த்தப்பவே நான் வெகுஜன பத்திரிகைகள்லே ஓவியம் வரைவேன். இருந்தாலும் அரசாங்க வேலையை விடற அளவுக்கு சன்மானம் வரலை.

என்னை மாதிரி ஓவியர்களை அதிகம் பயன்படுத்தியவர் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி. அவர்தான் சேமிப்புப் பத்தி அடிக்கடி வலியுறுத்துவார். அவரை சந்திக்கலைன்னா, பண விஷயத்துல இப்ப இருக்கிற அளவுக்குக்கூட ஜாக் கிரதையா இருந்திருக்க மாட்டேன்’’ என்றவர், திரைத்துறை சன்மானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

‘`1990-களோட ஆரம்பத்துல சினிமாவுல அனிமேஷன் செய்ய வந்தேன். ‘அனிமேஷன்னா அனிமல் டிரெயினரா’ன்னு கேட்பாங்க. கொஞ்சம் சூழல் மாறி, ராம.நாராயணன் படங் கள்ல அனிமேஷன் செய்ற வாய்ப்பு கிடைச்சது. நாசரோட ‘தேவதை’ படத்துல அப்போதைய என் பெஸ்ட்டைக் கொடுத்தேன்.

‘‘சினிமாவுல பெருசா சம்பாதிக்கல...’’ டிராட்ஸ்கி மருதுவின் பண அனுபவம்!

சினிமாவைப் பொறுத்தவரை, பல நேரங்கள்ல என் கிரியேட்டி விட்டிக்கான சன்மானம் கிடைக் காதுதான். சில வாய்ப்புகளை நானே வேண்டாம்னு நிராகரிச் சிருக்கேன். செலக்ட்டிவான நபர்கள்கூட மட்டும்தான் வேலை பார்த்திருக்கேன்.

நான் கார்ட்டூன் வரைவேன். ஆனா, வெகுஜன பத்திரிகை களுக்கு வரையணும்னா, அந்தப் பத்திரிகையோட அபிப் ராயத்துக்குக் கட்டுப்பட்டு வரை யணும். காசுக்காக என்னால கட்டுப்பட முடியாது. அப்புறம், நண்பர்களுக்கு வரைஞ்சு கொடுத்த ஓவியங்களுக்கு ‘காசு கொடுங்க’ன்னு கேட்க வாய் வராது. அப்படிக் கேட்டிருந்தா, இன்னிக்கு நான் பெரிய பணக்காரனா இருந்திருப்பேன்.

மத்தபடி, உலகம் முழுக்க என் ஓவியங்களைக் கண்காட்சியில் வெச்சுக்கிட்டிருக்கேன். அவை லட்சங்களில் விற்பனையாகிக் கிட்டிருக்கு. பணம் முக்கியமில்ல, ஓர் ஓவியரா நான் உயிர்ப்போட இயங்கிக்கிட்டிருக்கேன். இது போதும்’’ என்றவர், மீண்டும் அறையே அதிரும்படி சிரிக்க மறுபடியும் தன் சிரிப்பால் அந்த அறையை நிறைத்தார். அதில் பணத்தைத் தாண்டிய நிறைவு தெரிந்தது!