தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

“வருமானத்தில் 10% மற்றவர்களுக்காக..!” - அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்

வைகைச் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகைச் செல்வன்

பணம் என் சாய்ஸ்!

“சிறுவயதிலிருந்தே பணத்தின் முக்கியத் துவத்தை உணர்ந்தவன் நான். வாழ்க்கைக் குப் பணம் அவசியமான ஒன்று. எளிமையான வாழ்க்கை வாழ்ந்து, நம்முடைய தேவைகளை சுருக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் நான்.

அடிப்படைத் தேவைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பேன். அவை பூர்த்தி யான பிறகு, ஆடம்பர டைரியைத் திறப்பேன். அந்த டைரியில் எழுதப்பட்டிருப்பது உடனடித் தேவையா என்பதை சிந்தித்து, தேவை எனில் மட்டும் அதை வாங்குவது என் வழக்கம்.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்

பணத்தை சம்பாதிப்பதைப் போன்றே அதை சேமிப்பதும் முக்கியம். நான் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் என் சம்பளம் ரூ.20,000. நான் வாங்கிய முதல் ஊதியமும் அதுவே. அந்தத் தொகையை சரியாகத் திட்டமிட்டு குடும்ப செலவுக்கும் சேமிப்புக்கும் ஒதுக்குவேன். குடும்ப செலவுகள் போக, நான் சேமித்த தொகையில்தான் என் முனைவர் பட்டத்தை பூர்த்தி செய்தேன். எனக்கென்று சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்கினேன்.

மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் என வெவ்வேறு வகையில் திட்டமிட்டு சேமித்தாலும், நான் முக்கியத்துவம் தருவது நிலத்தில் முதலீடு செய்வதைத்தான். அதுதான் எனக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது.

என் சம்பாத்தியத்தில் மற்றவர்களுக்கு உதவ ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவது என் வழக்கம். ஆரம்ப காலத்திலிருந்து இப்போது வரை என்னுடைய மாத ஊதியத்தில் இருந்து குறைந்தது 10 சதவிகித நிதியை உதவி களுக்காகச் செலவிடுகிறேன். மற்றவர்களுக்கு உதவுவதிலும் ஒரு பெரும் இன்பம் இருக்கிறது.

ஆக மொத்தத்தில், பணம் என்பது தேவைக்கு இருந்தால் போதுமானது. ஆடம்பரத்தை தவிர்த்தால், வாழ்க்கை இனிமையாக இருக்கும்.”