Published:Updated:

வெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்! #DoubtOfCommonMan

Shine 125
News
Shine 125 ( HMSI India )

நீங்கள் பணிநிமித்தமாக சில காலத்துக்கு மட்டும் தமிழகத்தில் இருப்பீர்கள் என்றால், உங்கள் வாகனத்தை அதே பதிவு எண்ணில் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.

Published:Updated:

வெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்! #DoubtOfCommonMan

நீங்கள் பணிநிமித்தமாக சில காலத்துக்கு மட்டும் தமிழகத்தில் இருப்பீர்கள் என்றால், உங்கள் வாகனத்தை அதே பதிவு எண்ணில் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது.

Shine 125
News
Shine 125 ( HMSI India )
"நான் மகாராஷ்டிராவில் தற்போது வசிக்கிறேன். அங்கே தினசரிப் பயன்பாட்டுக்காக, ஒரு பைக்கை வைத்திருக்கிறேன். எனக்கு இன்னும் சில மாதங்களில், தமிழ்நாட்டுக்குப் பணி மாறுதல் கிடைக்கவுள்ளது. மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டுள்ள பைக்கை, தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியுமா? அதற்கு ஏதேனும் நடைமுறைகள் இருக்கின்றனவா? தமிழ்நாட்டில் அதை மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா? இல்லையெனில் சாலை வரி செலுத்தினால் மட்டும் போதுமா?"

இப்படியொரு கேள்வியை, விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் எழுப்பியிருக்கிறார் ஜே.சுபன். அவருக்கான பதில்...

"நீங்கள் பணிநிமித்தமாக சில காலத்துக்கு மட்டும் தமிழகத்தில் இருப்பீர்கள் என்றால், உங்கள் வாகனத்தை அதே பதிவு எண்ணில் தொடர்ந்து பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வாகனத்தை ஒருமுறை மட்டுமே மறுபதிவு செய்ய முடியும். நிரந்தரமாக நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கப்போகிறீர்கள் என்றால் மட்டுமே, உங்கள் வாகனத்தை இங்கே மறுபதிவு செய்ய வேண்டும்''.

மறுபதிவு செய்யத் தேவையான ஆவணங்கள் விவரம்...

* Form 20

* Bank Hypothecation சான்றிதழ் (ஒருவேளை வாகனம் வங்கிக்கடனில் வாங்கப்பட்டிருந்தால்)

* பார்ம் 27 (New Registration)

* பார்ம் 28 (No Objection Certificate)

* பார்ம் 29 மற்றும் பார்ம் 30 (Transfer of Ownership)

* பார்ம் 33 (Change of Address)

* வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் மற்றும் நடப்புக் காப்பீட்டுச் சான்றிதழ்

* Police Clearance சான்றிதழ் (இது திருட்டு வண்டியல்ல என நிருபணம் செய்வதற்கு)

* Address Proof (ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், Mark Sheet ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று)

* சாலை வரி கட்டியதற்கான ரசீது

* Pollution Under Control சான்றிதழ்

* 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

Jupiter Grande
Jupiter Grande
TVS Motors

உங்கள் வாகனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட RTO அலுவலகத்துக்குச் சென்று, நீங்கள் செல்லப்போகும் மாநிலம் மற்றும் அங்கே இருக்கப்போகும் முகவரியைக் கொடுத்துவிட்டு, அதற்கு NOC பெற வேண்டும். மேலும் நீங்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள காவல்நிலையத்துக்குச் சென்று, Police Clearance சான்றிதழ் பெற்றுவிட வேண்டும். பின்னர் நீங்கள் கொடுத்திருக்கும் புதிய முகவரியில் உள்ளடங்கிய RTO அலுவலகத்துக்குச் சென்று, வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டும். இது புதிய வாகனப் பதிவாகவே கணக்கில் கொள்ளப்படும் என்பதால், இதற்கும் சாலை வரி (2,500-3,000 ரூபாய்) கட்டவேண்டியது அவசியம்.

ஏப்ரல் 2017 முதலாக BS-4 மாசு விதிகளுக்குட்பட்ட வாகனங்களை மட்டுமே இந்தியாவில் பதிவு செய்யமுடியும் என்பதால், இந்த விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவும். ஒருவேளை உங்கள் வாகனம் இரண்டு வருடங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலோ, இரு மாநிலங்களுக்குமான (தமிழகம், மஹாராஷ்ட்ரா) சாலைவரி 2% மட்டுமே வித்தியாசம் இருந்தாலோ, நீங்கள் சாலைவரி கட்ட வேண்டிய தேவை இருக்காது. பின்னாளில் நீங்கள் இதே வாகனத்துக்கு, முன்பு கட்டிய சாலை வரியையும் திரும்பப் பெற்றுக்கொள்ளமுடியும். ஒட்டுமொத்தமாக இதற்கு 50 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றாலும், மறுபதிவு செய்யப்பட்ட வாகனத்தின் புதிய ஆவணங்கள் உங்கள் வசம் வருவதற்கு, கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை ஆகலாம். இதை ஆன்லைனிலும் செய்யலாம் என்றாலும், கொஞ்சம் பொறுமை தேவை.

#DoubtofCommonMan
#DoubtofCommonMan
Vikatan

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.