Published:Updated:

உலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா? #DoubtOfCommonMan

Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
News
Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das ( Photo: AP / Rajanish Kakade )

ரிசர்வ் வங்கிதான் பணத்தை அச்சிடுகிறது. ஆனால், அதன் இஷ்டத்துக்குப் பணத்தை அச்சிட முடியாது. அதற்கென்று சில நிபந்தனைகள் இருக்கின்றன.

Published:Updated:

உலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா? #DoubtOfCommonMan

ரிசர்வ் வங்கிதான் பணத்தை அச்சிடுகிறது. ஆனால், அதன் இஷ்டத்துக்குப் பணத்தை அச்சிட முடியாது. அதற்கென்று சில நிபந்தனைகள் இருக்கின்றன.

Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
News
Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das ( Photo: AP / Rajanish Kakade )
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``நமது நாட்டின் பணத்தை ரிசர்வ் வங்கிதான் அச்சிடுகிறது என்றால், தேவையான அளவு அச்சிட்டுக்கொள்ளாமல் ஏன் உலக வங்கிகளில் கடன் வாங்குகிறது" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் சுதாகர் ராமகிருஷ்ணன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of common man
Doubt of common man

நம் நாட்டில் பல்வேறு வங்கிகள் இருந்தாலும் அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்துவது `இந்திய ரிசர்வ் வங்கி' (Reserve Bank of India). ரிசர்வ் வங்கிதான் இந்தியாவில் உள்ள வங்கிகளின் கட்டுப்பாட்டாளர். ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதும், பண விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதும் மட்டுமல்லாமல், மேலும் நாட்டின் கடன் மற்றும் நாணய முறையை ஒழுங்குபடுத்துவதும் ரிசர்வ் வங்கியின் பணிதான்.

1926-ம் ஆண்டில் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டிஷ் பிரதேசங்களின் நாடுகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் `ஹில்டன் யங் கமிஷன்.' பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியிலிருந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையாதவையாக இருந்தன. எனவே, இந்த நாடுகளின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், அதைக் கண்காணிப்பதற்கும் அமைக்கப்பட்டதுதான் `ஹில்டன் யங் கமிஷன்.' இந்த அமைப்பின் ஆலோசனைப்படி 1934-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி கட்டமைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ல் இயற்றப்பட்டு ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது. தொடங்கப்பட்டபோது தனியார் வசமிருந்த ரிசர்வ் வங்கி இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 1949-ம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டது.

Reserve Bank of India
Reserve Bank of India

நாடெங்கும் பணப்பாற்றக்குறை இருக்கிறது. பணத்தை அச்சடிப்பது ரிசர்வ் வங்கி, கொஞ்சம் அதிகமாகத்தான் அச்சிட்டால் என்ன... ரிசர்வ் வங்கிக்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்? என்று நம்மில் பலருக்கு ஆதங்கம் இருக்கும். இந்த எண்ணத்தின் நீட்சியாகவே, ``ரிசர்வ் வங்கி தேவையான அளவு அச்சிட்டுக்கொள்ளாமல் ஏன் உலக வங்கியிடமிருந்து கடன் வாங்குகிறது என்ற கேள்வியும் எழுகிறது. அந்தக் கேள்வியை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ப்ராங்கோவிடம் முன்வைத்தோம்‌.

உலக வங்கியில் கடன் வாங்குவதைவிட ரிசர்வ் வங்கியே பணத்தை அதிகமாக அச்சடிக்க முடியாதா? #DoubtOfCommonMan

``ரிசர்வ் வங்கிதான் பணத்தை அச்சிடுகிறது. ஆனால், அதன் இஷ்டத்துக்குப் பணத்தை அச்சிட முடியாது. அதற்கென்று சில நிபந்தனைகள் இருக்கின்றன. முன்பிருந்த நிபந்தனைப்படி, ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட மதிப்புள்ள பணத்தை அச்சிடுகிறது என்றால் அதற்கு நிகரான தங்கத்தை வங்கியில் இருப்பாக (ரிசர்வ்) வைக்க வேண்டும். தற்போது தங்கம் கட்டாயம் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், எவ்வளவு பணத்தை அச்சிடுகிறோமோ அந்த அளவுக்கு நிகரான அரசு ஆவணங்கள், அரசு உடைமைகள் போன்றவற்றை இருப்பாக வங்கியில் வைக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு கோடி ரூபாய் அச்சிடுகிறார்கள் எனில், ஒரு கோடி ரூபாய்க்கு நிகரான அரசு உடைமைகளையோ தங்கத்தையோ இருப்பாக வங்கியில் வைக்க வேண்டும். ஒருவேளை, ரிசர்வ் வங்கி அளவுக்கு மீறி பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் அதிகரிக்கும்.

தாமஸ் ஃப்ராங்கோ
தாமஸ் ஃப்ராங்கோ
vikatan

ஒரு டாலர் மதிப்பு 71.28 ரூபாய் என்றிருப்பது இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. ஒரு டாலர் மதிப்பு 100 ரூபாயைத் தொடும் அபாயம் நேரிடலாம். ரிசர்வ் வங்கி, உலக வங்கியிடமிருந்து கடன் எதுவும் வாங்குவதில்லை. ரிசர்வ் வங்கியிடமிருந்து இந்திய அரசாங்கம்தான் கடன் வாங்குகிறது. அதன் தேவைக்காகவும் சூழ்நிலைக்கேற்றவாறும் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குகிறது. அதனால், ரிசர்வ் வங்கியால் குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டுமே அச்சடிக்க முடியும்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man