என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஒற்றை வீடியோ... ஓவர்நைட்டில் உலக ஃபேமஸ்! - டெக்னாலஜியில் கலக்கும் யூடியூபர்

ஜஸ்டின் எசாரிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜஸ்டின் எசாரிக்

#Entertainment

‘ஓவர் நைட்ல ஓபாமா லெவல் ஃபேமஸ் ஆகப்போறேன்’ என்று சொல்லி கலகலப் பூட்டுவார் நடிகர் வடிவேல். இங்கே ஒரு வீடியோவிலேயே உலகப் புகழ்பெற்று சாதனை படைத்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் எசாரிக். பெண்களுக்கும் டெக்னாலஜிக்கும் ரொம்ப தூரம் என்கிற பொதுக்கருத்தை உடைத்துக் காட்டிய இந்தப் பெண் இதைச் சாதித்தது... யூடியூப் என்பது அவ்வளவாக பிரபலமாகாத காலகட்டத்தில், அதுவும் விளையாட்டாக ஒரு வீடியோவை அப்லோடு செய்ததற்கே பல மில்லியன் வியூஸ் குவிந்துவிட்டன.

ஒற்றை வீடியோ... 
ஓவர்நைட்டில் உலக ஃபேமஸ்! - 
டெக்னாலஜியில் கலக்கும் யூடியூபர்

2007-ம் ஆண்டு ஜஸ்டின் வாங்கிய ஐபோனில் AT&T moblity என்ற சேவையை ஆக்டிவேட் செய்திருக்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன், லேப்டாப் போன்றவற்றில் டேட்டா டிரான்ஸ்ஃபர், வெப் பிரௌசிங், டெக்ஸ்ட் மெசேஜ் என அனைத்துப் பயன்பாடுகளின் அடிப்படையில் மாதம்தோறும் பில் அனுப்பப்படும். முதல் மாத பில், ஜஸ்டினுக்கு அனுப்பப்பட்டது. கவரைப் பிரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. ஒன்றல்ல இரண்டல்ல 300 பக்கங்கள் இருந்திருக்கின்றன. இந்த பில்லை வீடியோ எடுத்து ‘300 பக்க ஐபோன் பில்’ என்ற தலைப்பில் யூடியூப் உள்ளிட்ட பிற வீடியோ ஷேரிங் தளங்களிலும் அப்லோடு செய்துவிட்டார். மொத்த வீடியோவும் வெறும் 1.06 நிமிடங்கள் மட்டுமே.

ஒற்றை வீடியோ... 
ஓவர்நைட்டில் உலக ஃபேமஸ்! - 
டெக்னாலஜியில் கலக்கும் யூடியூபர்

வீடியோ பப்ளிஷ் ஆன சில மணி நேரத்திலேயே வைரலாகத் தொடங்கிவிட்டது. அதைப் பின்பற்றி பலரும் ஆப்பிள் நிறுவனத்தின் பில்லிங்கில் இருக்கும் பிரச்னைகளைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். சில தினங்களில் 20 லட்சம் வியூஸ் பெற்றதோடு சர்வேதச செய்திகளிலும் இடம்பிடித்தது. ஓரிரு மாதங்களில் 80 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்திருந்தனர். இந்த ஒற்றை வீடியோவுக்கு `ரெவ்வர்' என்ற வீடியோ தளத்திலிருந்து மட்டும் இந்திய மதிப்பில் ரூ.2.25 லட்சம் ஜஸ்டினுக்குக் கிடைத்தது. யூடியூப் மூலம் கிடைத்த வருமானம் பல லட்சங்கள்.

இந்த வரவேற்புக்குப் பிறகு iJustine சேனலில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடத் தொடங்கினார். புதிதாக லாஞ்ச் செய்யப்படும் மொபைல்போன், டிவி, லேப்டாப், பி.எம்.டபிள்யூ காரிலுள்ள வெர்ச்சுவல் அசிஸ்டன்ட் என அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்துவிடுவார் வீடியோவில்.

ஒற்றை வீடியோ... 
ஓவர்நைட்டில் உலக ஃபேமஸ்! - 
டெக்னாலஜியில் கலக்கும் யூடியூபர்

“என்னுடைய சேனலில் பெரும்பாலும் டெக்னாலஜி சார்ந்த விஷயங்கள்தான் இடம்பிடிக்கும். ஏனென்றால் ஐ லவ் டெக்னாலஜி! ஆனால், எனக்குப் பயணம், சமையல், என் நாய்க்குட்டியும் மிகவும் பிடிக்கும்” எனும் ஜஸ்டின், பயண Vlog, சொதப்பிய சமையல் வீடியோக்கள், நாய்க்குட்டி குளியல் வீடியோ என வெரைட்டியுடன் ஹியூமரும் கலந்துகொடுக்கிறார்.

“யூடியூபுடன் கேமிங் சேனல், ஒரு பயண வீடியோக்கான சேனல், ஐபோன் வீடியோ சேனல் என ஐந்து சேனல்களை நடத்துகிறேன். ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு 40 - 50 வீடியோக்களை வெளியிட்டேன். வீடியோக்கள் அனைத்தையும் யாருடைய உதவியும் இல்லாமல் நானே எடுத்து, எடிட் செய்து வெளியிடுவேன். ஒருகட்டத்தில் நான் செய்வது ‘டூ மச்!’ என்ற உணர்வு ஏற்பட்டது. என்னை நானே நோயாளி ஆக்கிக்கொள்ளப் போகிறேன் என்று தோன்றியது. இளமையாக இருக்கும்போது நம்முடைய ஆரோக்கியத்தையும் எனர்ஜி லெவலையும் மிகவும் அலட்சியப்படுத்துகிறோம். சற்று வயதானவுடன் அதே அளவு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. அதன் பிறகு, இரவெல்லாம் கண்விழித்து எடிட் செய்வதைத் தவிர்த்தேன். சரியாகத் திட்டமிட்டு குறைந்த எண்ணிக்கையிலான வீடியோக்களை மட்டுமே வெளியிடுகிறேன்” ஜஸ்டினின் இந்த வார்த்தைகள் நமக்கும் பாடம்தான்.

ஒற்றை வீடியோ... 
ஓவர்நைட்டில் உலக ஃபேமஸ்! - 
டெக்னாலஜியில் கலக்கும் யூடியூபர்
ஒற்றை வீடியோ... 
ஓவர்நைட்டில் உலக ஃபேமஸ்! - 
டெக்னாலஜியில் கலக்கும் யூடியூபர்

யூடியூபர்களுக்கு ஜஸ்டினின் மிக முக்கியமான டிப்ஸ்... “ஒரு வீடியோ ஷூட் செய்யத் திட்டமிடும்போதே, அதனுடன் தொடர்புடைய பல வீடியோக்களையும் சேர்த்து எடுத்து விடுவேன். அது அந்த நேரத்துக்குத் தேவை இல்லாத, டிரெண்டில் இல்லாத விஷயமாகக்கூட இருக்கும். இதுபோன்ற ஸ்பேர் வீடியோக்கள் மிக முக்கியமான நேரத்தில் கைகொடுப்பதோடு வியூஸையும் அள்ளும்” என்பவரின் ஒற்றை சேனலுக்கு மட்டும் உலகம் முழுவதும் 68.4 லட்சம் சப்ஸ்கிரைபர்கள்!

சில நேரம் வீடியோக்களுக்கு வியூஸ் குறைவாக இருக்கலாம். அதை மனதில் ஏற்றிக்கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கும் ஜஸ்டின், “வீடியோக்களுக்கு வரும் கமென்ட்டுகள்தான் யூடியூபர்களின் முகம் காட்டும் கண்ணாடி. கமென்டு களுக்கு கண்ணை மட்டுமல்ல; காதையும் கொடுங்கள். உங்கள் வீடியோ ரசிகர்களிடம் முடிந்தவரையில் தொடர்பிலிருங்கள். சேனல் பிரபலமடையத் தொடங்கியதும் சிலர் ரசிகர்களிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள். இது எப்போதும் ஆபத்தானது” என்கிறார் ஜஸ்டின்.

நோட் பண்ணுங்கப்பா!