நடப்பு 2014-15 நிதி ஆண்டில் ரூ.33,000 கோடிக்கு மொத்த வர்த்தகம் மேற்கொள்ள எல்.ஐ.சி. ஹவுசிங் ஃபைனான்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது 22 சதவிகித வளர்ச்சியாக இருக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.27,000 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. அந்த ஆண்டில் வழங்கிய வீட்டுக் கடன் 18% அதிகரித்துள்ளது.
சொந்த வீடு என்பது இந்திய குடும்பங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு பொதுவான கனவு. “வீட்டை கட்டிப்பார்” என்ற சொலவடை நெடுங்காலமாய் நம் வாழ்வுடன் பயணித்து கொண்டிருப்பது இதை உறுதிப்படுத்தும். இப்படி அனைவரின் கனவாக உள்ள “ஒரு சொந்த வீடு”, சமீப கால பொருளாதார சிக்கல்களால் மேலும் களையிழந்து அனைவருக்கும் எட்டாக் கனியாய் போய்விடுமோ என்று அச்சம் இன்றளவும் அனைவரையும், குறிப்பாக நடுத்தர குடும்பங்களை பெரிதும் ஆட்டிப்படைக்கிறது.
பாமர மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டு மனை வாங்கி வருகிறார்கள். காரணம், வீட்டு மனை மூலம் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புதான். 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் ரூபாய் தந்து வாங்கிய காலிமனை இன்றைக்கு 30 லட்சத்துக்கும் 40 லட்சத்துக்கும் விலைபோவதைப் பார்க்கும் மக்கள், இனிவரும் காலத்திலும் அப்படி ஒரு லாபம் கிடைக்கும் என்று நினைத்து காலி மனைகளை வாங்குகிறார்கள்.
ஆன்லைன் மூலம் செல்போன், கேமிரா உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது அண்மைக்காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக வீடு, மனைகளையும் நம்மவர்கள் ஆன்லைன் மூலம் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கேற்ப, ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் ஆன்லைன் மூலம் ரியல் எஸ்டேட் புராஜெட்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
ரியல் எஸ்டேட்டை பொறுத்தவரையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா முழுக்க மந்தநிலைதான் காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும் எனில், மெட்ரோ நகரங்களில் கடந்த ஓராண்டில் ரியல் எஸ்டேட் விலை 20-30% வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்படவில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடங்களில் போடப்பட்ட லே-அவுட்களில் மனைகள், மறுவிற்பனை விலை இல்லாமல் மந்தநிலையில் காணப்படுகிறது. புதிய லே-அவுட்களில் மனை விலை, பழைய லே-அவுட் மறுவிற்பனை விலையைவிடக் குறைவாகப் பல இடங்களில் காணப்படுகிறது. அந்த வகையில் மனையில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்பது பலரின் பரிந்துரையாக இருக்கிறது.
A+1 புதிய அரசிடம் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்பது என்ன? வீடு வாங்குபவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலத்தின் விலை, கட்டுமான செலவு, வட்டி விகிதம் மற்றும் அனுமதி பெறுவதிலான கால அவகாசம் போன்றவற்றால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். புதிய மத்திய அரசிடம் ரியல் எஸ்டேட் துறையினர் மற்றும் வீடு வாங்குபவர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்.?
கடந்த ஜனவரி - மார்ச் வரையிலான மாதத்தில் டாப் 8 நகரங்களில் புதிதாக சுமார் 55,000 வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது 43 சதவிகிதம் அதிகம் என்று சர்வதேச சொத்து ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் & வேக்பீல்டு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
சென்னை ரியல் எஸ்டேட் நிலவரம் குறித்து ரியல் எஸ்டேட் நிறுவன கூட்டமைப்பான ‘கிரெடாய்’ மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘ஜோன்ஸ் லேங் லசாலே’ சார்பில் கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடந்தது. கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, சந்தை நிலவரம், குடியிருப்பு சொத்து வகைகள், ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் காரணிகள், சந்தையில் உடன் நிகழக்கூடிய மாற்றங்கள், முதலீட்டுக்கான வழிகாட்டல்கள் குறித்து ஆராயப்பட்டது.
வீடு விற்பனை 22 % வளர்ச்சி! நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆறு பெரிய நகரங்களில் வீடுகள் விற்பனை 22 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி குறைந்தது மற்றும் நிலையற்ற அரசியல் சூழ்நிலை போன்றவற்றால் உள்நாட்டில் முந்தைய சில காலாண்டுகளில் வீடுகள் விற்பனை சரிவடைந்திருந்தது. ஆனால் மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவு வளர்ச்சியடைந்ததையடுத்து வீடு விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது.
வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர்.
இந்திய அளவில் பத்திரப்பதிவு நடைமுறைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம் வகிக்கிறது. முதலிடத்தில் ஆந்திராவும், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மூன்று, நான்காம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் பத்திரப்பதிவில் இன்னும் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டால் முதன்மை மாநிலமாக முன்னேற்ற முடியும்? குறிப்பாக, மோசடிகளைத் தவிர்க்க
வீடுகளின் விலை 8% இருக்கலாம்! இந்தியாவில் கடந்த சில வருடங்களில் வளர்ச்சி 2 இலக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து வரும் வருடத்தில் சாதகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வட்டி
கம்ப்யூட்டர் மனைப் பட்டா! கிராமப்புற நில ஆவணங்கள் மட்டுமே இதுவரை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. நகரங்களில் உள்ள பகுதிகளில் நில ஆவணங்கள் கணினி மயமாக்கம் செய்யும் பணிகள் தேசிய தகவல் மையம் தயாரித்து வழங்கியுள்ள மென்பொருளைக் கொண்டு நடைபெற்று வருகிறது. நகர்ப்புற நில ஆவண படிவத்தில் உள்ள தகவல்களை கணினியில் உள்ளீடு செய்ய ஏற்ற வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் வளர்ச்சி, அதன் உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தே இருக்கிறது. இந்தியாவில் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்கள் மத்திய, மாநில அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு, பாதி கிணறு தாண்டிய நிலையில் அப்படியே நிற்கின்றன. சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இன்ஃப்ரா திட்டங்கள் ஏறக்குறைய கைவிடப்படக்கூடிய நிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம், நிலத்தைக் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்தான். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக மத்திய அரசு நிலம் கையகப்படுத்தல் சட்ட மசோதாவைக் கொண்டுவந்து தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது.
சென்னை வர்த்தக மையத்தில் செப்டம்பர் 14 மற்றும் 15 ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலான கண்காட்சி நடைபெறுகிறது. நன்கு அலசி ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட ‘ரெசிடென்சியல் மைக்ரோ மார்க்கெட்ஸ் ஆப் சென்னை’ என்ற ஆய்வறிக்கையும் இந்தக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது.சென்னையில் வீடு வாங்கும் விருப்பம் உள்ளவர்களுக்கு, இந்த ஆய்வறிக்கை வழிகாட்டும். சென்னையில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் ‘கிரஹப்பிரவேசம்’ கண்காட்சியில் 100 க்கும் அதிகமான பில்டர்களின் 200 புதிய ப்ராஜக்ட்கள் இடம் பெறுகின்றன.
இது ரொம்ப முக்கியம். வீட்டுக் கடன் வாங்குற எல்லாருமே ரெண்டு வகையான இன்ஷூரன்ஸ்களை கட்டாயம் எடுத்துக்கணும். ஒண்ணு கடனுக்கு! இன்னொண்ணு வீட்டுக்கு! கடன் வாங்கினவருக்கு திடீர்னு ஏதாச்சும் அசம்பாவிதம் ஏற்பட்டா, கடனைக் கட்ட முடியாம மனைவி, பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாதில்லையா.. அதனால வீட்டுக் கடனுக்கு இன்ஷூரன்ஸ் அவசியம். அப்புறம், புயல், வெள்ளம், பூகம்பம், தீவிரவாதத் தாக்குதல் மாதிரியான பிரச்னைகள்ல சிக்கி வீடு பாதிக்கப்பட்டா, மொத்தமா இடிஞ்சுபோய் உட்கார்ந்திடாம இருக்க வீட்டுக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கணும். இதுக்கு வீட்டு உரிமையாளர் பாலிசினு பேர்.
என்சிசி நிறுவனத்தின் துணை நிறுவனமான என்சிசி அர்பன் (NCC Urban), வீடு மற்றும் அலுவலக பயன்பாட்டுக்கான உள் அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்யும் அவன்ட் (Avant) நிறுவனத்துடன் வர்த்தக உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது. அவன்ட் நிறுவனம், தரை, கூரை, சுவர், மேல்தளம் என பல்வேறு பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்கிறது. இதன் தயாரிப்புகளை புதிய ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் என்சிசி அர்பன் நிறுவனம் சந்தைப்படுத்தும்.
சென்னை மற்றும் அதன் புற நகர்களில் அதிக எண்ணிக்கையில் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இதில், அதிகபட்சம் 5 மாடிகளை கொண்ட குடியிருப்புகளைதான் சென்னைவாசிகள் விரும்புவதாக சரே ஹோம்ஸ் (SARE Homes) -ன் முதன்மை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்தார். சரே ஹோம்ஸ் -ன் செயல் இயக்குநர் டேவிட் வாக்கர், '' சென்னையை பொறுத்தவரையில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவே பெரும்பாலோர் விரும்புகிறார்கள். அந்த வகையில் உடனடியாக குடிபோக கூடிய வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை பழைய மகாலிபலிபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) திருப்போரூர் அருகே உருவாக்கி இருக்கிறோம். இங்கு ரூ, 27.5 லட்ச ரூபாய் முதல் ஃபிளாட்களை வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் கேட்கும் அதிக வசதிகளையும் செய்து தருகிறோம்" என்றார்.
இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) நடத்தும் வீட்டுமனை கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஆகஸ்ட் 2,3,4 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8மணி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிற்து. 30க்கும் மேற்பட்ட கிரடாய் உறுப்பினர்களால் கட்டப்பட்ட வீடுகள் ரூ. 20லட்சம் முதல் 6 கோடி வரையிலான விலைகளில் கிடைகிறது.. இது பற்றி கிரடாய் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஸ்.பாலகிருஷ்ணன், இந்த கண்காட்சி நடக்கும் 3 நாட்களில் 10 000 பார்வையாளர்கள் வரை பங்கேற்பர்,, 2500 வீடுகள் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்பதாக கூறினார்.