Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த... அதன் இறக்குமதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு!

பாசிப் பருப்பு, உளுந்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு என பலவகையான பருப்புகளின் விலை சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. அன்றாடம் பயன்படுத்தும் உணவும் பொருட்களில், பருப்புகள் அத்யாவசியமானவை என்பதால், மக்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழ ஆரம்பித்திருக்கின்றன. பருப்பு விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், அதன் சப்ளைகளை அதிகரிக்க வேண்டும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னமே தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தற்போது மத்திய அரசாங்கம் பருப்பு வகைகளின் இறக்குமதியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த ஓராண்டுகளில் பருப்பு வகைகளின் விலை 64% வரை அதிகரித்துள்ளது. 2014-15-ம் ஆண்டின் ஜூன்-ஜூலை பருவத்தில் உள்நாட்டின் பருப்பு வகைகள் உற்பத்தி 20 லட்சம் டன் குறைந்துள்ளது. பருப்புகள் அதிகமாக உற்பத்தியாகும்ன் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்ர பிரதேசம், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பருவ நிலை மிகவும் மோசமாக இருப்பதால் பருப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த பருப்பு உற்பத்தியில் இந்த ஐந்து மாநிலங்களின் பங்கு 80 சதவிகிதமாக காணப்படுகிறது.

ஒராண்டில் 1.90 கோடி டன் பருப்புகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், உள்நாட்டுத் தேவை அதிகமாக இருப்பதால் இதுவரை ஆண்டுக்கு 30-40 லட்சம் டன் அளவுக்கு பருப்புகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இந்த இறக்குமதி அளவை மேலும் அதிகப்படுத்தினால்தான் தற்போதைய பருப்பு விலைவாசி அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close