Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி!

ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தென் இந்தியாவின் ஆறு மாநிலங்களுக்கு இடையேயான இன்கமிங் கால் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளது. அதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்குள்  ஏர்செல் வாடிக்கையாளர்கள், எங்கு பயணம் மேற்கொண்டாலும் இன்கமிங் கால் ரோமிங் கட்டணம் கிடையாது என ஏர்செல் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏர்செல் வாடிக்கையாளர்களின் சரசாரியாக அலைபேசி வாயிலாக பேசும் நேரம் (ரோமிங் கட்டணத்தில்) 2010-ம் ஆண்டில் (9%) இருந்ததை விட 2014-ல் 30 சதவிகிதமாக அதிகரித்திருப்பதாகவும், இந்த மாநிலங்களுக்கு இடையே வியாபார ரீதியாக பல ஏர்செல் வாடிக்கையாளர்கள் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதாலும் இந்த சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருப்பதாகவும் ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்தந்தந்த மாநிலங்களில் இருந்து செய்யப்படும் அவுட்கோயிங் காலுக்கு குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஏர்செல் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close