ஷேர்லக்: சீனாவிலிருந்து வரும் எஃப்ஐஐக்கள்!
‘‘ஏற்றம் தரும் மாற்றங்கள்! முத்தான மூன்று தொடர்கள்! அட, அட்டையைப் பார்த்தாலே இனி நாணயம் விகடனைக் கட்டாயம் படித்தாக வேண்டும்போல் இருக்கிறதே! புதுப் பொலிவில் வந்திருக்கும் நாணயம் விகடனைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்!’’ என்ற ஷேர்லக்குக்கு நன்றி சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.
‘‘இந்த வாரம் பங்குச் சந்தை ஏற்றம் கண்டிருக்கிறதே?’’
‘‘அமெரிக்காவில் உடனடியாக வட்டி அதிகரிப்போ, இதர நிதிக் கொள்கை மாற்றமோ இருக்காது என ஃபெடரல் ரிசர்வ் அறிவித்திருப்பது சந்தையின் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வருகிற செப்டம்பரில்தான் அமெரிக்காவில் வட்டி உயர்த்தப் படும் சூழ்நிலை இருக்கிறது. சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் எஃப்ஐஐக்கள் பங்குகளை தொடர்ந்து விற்று வருகிறார்கள். இதற்கு காரணம், குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) விஷயத்தில் மத்திய அரசு தன் தெளிவான முடிவைச் சொல்லாததே.
அமெரிக்க வட்டி பிரச்னை இப்போதைக்கு இல்லை என்ற வுடன், மீண்டும் நம் சந்தையை எட்டிப் பார்த்திருக்கிறார்கள் எஃப்ஐஐக்கள். தவிர, கடந்த சில ஆண்டுகளில் காட்டுத்தனமாக வளர்ந்த சீன சந்தை இன்றைக்கு மட்டும் 6 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தது. எனவே, சீனச் சந்தையிலிருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள் நம் சந்தைக்கு வந்திருக்கக்கூடும்'' என்று பேசிக் கொண்டே போனவருக்கு சுடச்சுட டீ தந்தோம். லேசான சாரலில் நனைந்து வந்திருந்ததால், சூடான டீயை ரசித்துக் குடித்தார் அவர்.
‘‘சரி, சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?’’ என்று கேட்டோம்.
‘‘வேளாண் பொருட்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலை சர்வதேச விலை நிலவரங் களுக்கு ஏற்பத்தான் அதிகரிக்கப் படும் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. மேலும், பருவமழை மோசமாக இருக்கும் என்கிற கணிப்புக்கு எதிராக நல்ல மழை பெய்து வருகிறது. இந்தியாவின் 75 சதவிகித பகுதிகளில் வழக்கமான அளவு அல்லது அதைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. அந்தவகையில், பணவீக்க விகிதம் அதிகரிக்கும் அபாயம் குறைந்திருப்பதாக அனலிஸ்ட்டுகள் தெரிவிக்கி றார்கள். பணவீக்க விகிதம் குறைந்தால் அல்லது அதிகரிக்காமல் இருந்தால், ஆர்பிஐ வட்டியை இன்னும் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது பாசிடிவ்வான விஷயம். இதன் அடிப்படை யிலேயே வங்கி, பார்மா, ஆட்டோ நிறுவன பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்து வருகின் றன'' என்று விளக்கினார்.
‘‘ஆனால் டாயிட்ச் பேங்க், சென்செக்ஸ் இலக்கை இறக்கி இருக்கிறதே?’’ என்று கிடுக்கிப்பிடி போட்டோம்.
‘‘2015-ம் ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 33000 புள்ளிகளாக இருக்கும் என டாயிட்ச் பேங்க், பருவமழை குறைவு, மேட் பிரச்னை, நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் குறைவு போன்ற வற்றை கருத்தில்கொண்டு இலக்கை 31000 புள்ளிகளாக தற்போது குறைத்துள்ளது. தற்போது சென்செக்ஸ் 27300ஆக இருக்கிறது. அது 31000-ஆக அதிகரித்தால், 13.5% வளர்ச்சி. இது நல்ல லாபம்தானே என்கி றார்கள் அனலிஸ்ட்டுகள்.
ஆனால், அமெரிக்க வட்டி உயர்வு என்கிற கத்தி எப்போதும் தலைக்குமேலே தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த விஷயம் மீண்டும் தலைதூக்கி னால், சந்தை மீண்டும் சரியும். எப்படி இருந்தாலும், நீண்ட காலத்தில் சந்தை உயரும் என்பதை முதலீட்டாளர்கள் உணர்ந்து, தொடர்ந்து முதலீடு செய்வதே புத்திசாலித்தனம்’’ என்று விளக்கம் தந்தார்.
‘‘ஆம்டெக் பங்கின் விலை ஒரே நாளில் 12% குறைந்துள்ளதே?’’ என்றோம் சற்று வருத்தப்பட்டபடி.
மேலும் விவரங்களுக்கு விற்பனையில் இருக்கும் நாணயம் விகடனை வாங்கி படியுங்கள்.