கல்வி உதவித் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?
நான் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்து, வருமான வரி செலுத்தி வருகிறேன். இந்த ஆண்டு இரண்டு வருட மேற்படிப்புச் சம்பந்தமாக கல்வி விடுமுறையில் இருக்கிறேன். இந்த இரண்டு ஆண்டுகளுக்கு எனக்கு சம்பளம் கிடையாது. ஆனால், என் கல்வி நிறுவனம் மூலம் ஆண்டுக்கு லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெறுகிறேன். இந்தத் தொகைக்கு நான் வருமான வரி செலுத்த வேண்டுமா?
மரு.கே.ராஜீவ்குமார், விழுப்புரம்.
வி.கே.தினேஷ் கிருபாகரன், ஆடிட்டர்.
“பொதுவாக, கல்வி செலவுகளைச் சமாளிக்க வழங்கப்படும் உதவித்தொகை முழுவதற்கும், வருமான வரிச் சட்டம் பிரிவு 10 உட்பிரிவு 16-ன் படி விலக்கு உண்டு. கல்வி உதவித்தொகையாகக் கிடைத்த தொகை, வருமான வரி கணக்கிடும் வருமானத்தில் சேர்க்கப்படாது. எனவே, உங்களுக்குக் கிடைத்த கல்வி உதவித் தொகைக்கு வரி செலுத்த வேண்டாம்.”