Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸடீவ் ஜாப்ஸ் சினிமா டிரெய்லர்

   ஸ்டீவ் ஜாப்ஸ், பெற்றோர்களால் குழந்தையாக இருந்தபோதே கைவிடப்பட்டவர். சிறு வயதில் உணவு இல்லாமல் பசியால் வாடியவர். கல்லூரியிலிருந்து இடையிலே விரட்டப்பட்டவர். இருந்த போதிலும் அவருக்குள் மிகப்பெரிய தாகம் இருந்தது . இருபது வயதிலேயே ஆப்பிள் நிறுவனத்தை சிறிய முதலீட்டில் நண்பருடன் சேர்ந்து ஆரம்பித்து விட்டார். பத்து வருடத்தில் அந்த நிறுவனம் 2 பில்லியன் டாலர் மதிப்புடையதாகவும் , 4000 பேர் பணி செய்யும் நிறுவனமாகவும் மாறியது .

       அவர் உருவாக்கிய நிறுவனத்திலிருந்தே  வெளியே விரட்டப்பட்டார். எங்கு செல்வது என்று தெரியாமல் அவர் அலைந்து கொண்டிருக்கவில்லை . சில மாதங்களிலே பிக்ஸர் என்ற அனிமேஷன் ஸ்டூடியோவை உருவாக்கினார். அந்த ஸ்டூடியோ 'டாய் ஸ்டோரி' போன்ற புகழ்பெற்ற அனிமேஷன் படங்களை உருவாக்கியது . இன்றும் உலகில் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோவில் ஒன்றாக விளங்குகிறது. நெக்ஸ்ட் என்ற கம்பெனியையும் உருவாக்கினார். அந்த கம்பெனியை ஆப்பிள் வாங்கியது. மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். கணைய புற்று நோயின் காரணமாக 2011 ல் இறந்துவிட்டார். 


         ஸ்டீவ் ஜாப்ஸ் டிஜிட்டல் உலகில் மாபெரும் மாற்றங்களை 30 வயதுக்குள்ளேயே நிகழ்த்தி காட்டி இளைஞர்களில் மத்தியில் தனக்கென  தனித்த ஒரு இடத்தை பிடித்துக்கொண்டவர். ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரை கேட்டாலே நமக்குள் மெய் சிலிர்க்கிறது..அவரின் வாழ்க்கைக் கதை ஸ்டீவ் ஜாப்ஸ் ( steve jobs ) என்ற பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற நடிகரான மைக்கேல் பாஸ்பைன்டைர் ஸ்டீவ் ஜாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டைட்டானிக் புகழ் கேத் வின்ஸ்லெட்டும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நம்ம ஊர் ஏ.ஆர் .ரகுமானுக்கு ஆஸ்கார் விருதை பெற்று தந்த ஸ்லெம்டாக் மில்லினியர் படத்தை இயக்கிய டேனி பாயல் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.


      வால்ட்டர் ஐசக்சன் எழுதிய  ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை பற்றிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் விருதை வென்றுள்ள ஆரன் சோர்கின் திரைக்கதையை எழுதியிருக்கிறார். பேஸ்புக்கின் நிறுவனர் மார்க்கின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட தி சோசியல் நெட்வொர்க் [ the social network )படத்திற்கு திரைக்கதை எழுதியவரும் ஆரன் சோர்க்கின் தான் 
ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 2013 இல் ஜாப்ஸ் ( jobs) என்ற படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை 


ஸ்டீவ் ஜாப்ஸின் டிரெய்லர் ஜூலை 1 இல் வெளியாகி மக்கள மத்தியில் பெரும்பரபரப்பை ஏறபடுத்தியிருக்கிறது. இதோ அந்த டிரெய்லர்
https://www.youtube.com/watch?v=aEr6K1bwIVs

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close