Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு சிறுவனின் கேள்வி(வீடியோ)

ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் மும்பையில் நடந்த விழா ஒன்றில் பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது 8ம் வகுப்பு சிறுவன் எழுப்பிய கேள்வி அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ராஜாஸ் எனும் அந்த சிறுவன் ரகுராம் ராஜனிடம் ''சார், அமெரிக்காவின் பணவியல் கொள்கைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ரூபாயின் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற செய்தி பரவிவருகிறது. இதேபோல் எப்போது இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களால் உலக பொருளாதாரத்தில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்ற கேள்வியை கேட்டான்.

ள்வியை கேட்ட அடுத்த நொடியே ரகுராம் ராஜன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து கைதட்டி அந்த சிறுவனை பாரட்டினார். ''முதலில் இந்த கேள்விக்கு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும், அமெரிக்கா பணவியல் கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் போது மற்ற நாடுகளை பாதிக்காத வண்ணம் தயாரிக்க வேண்டும், அதுமட்டுமின்றி நமது கொள்கைகள் எந்த ஒரு நாட்டையும் பாதிக்காத வண்ணம் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் அந்த சிறுவனிடம் நீ எனது வயதில் இருக்கும் போது இந்திய பொருளாதாரம் உலகின் டாப் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.


வீடியோ பதிவை காண:

 

-ச.ஶ்ரீராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close