Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகப் பொருளாதாரம்... இப்படித்தான் இயங்குகிறது!

 அழகான டப்ளின் நகரம் . அந்த நகரத்தில் மேரி என்ற நாற்பது வயதான பெண் வாழ்ந்து வந்தாள்.அவளுக்கென்று யாருமில்லை. அவள் ஒரு மது விடுதியை நடத்தி வந்தாள்.அந்த மது விடுதியில் பதினொரு பேர் வேலை செய்தனர் அந்த மது விடுதிக்கு குறைவான வாடிக்கையாளர்களே வந்தும் போய்க்கொண்டும் இருந்தனர். 

 
ஏறக்குறைய அந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் வேலையற்றவர்கள். கடன் வாங்கியும் , கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திரட்டிக் கொண்டும் மதுவை வாங்கி ருசித்தனர். இந்த மாதிரியான வாடிக்கையாளர்களால் தொடர்ந்து லாபகரமாக விடுதியை நடத்த முடியாது என்பதை எண்ணி மேரி கவலையுற்று மனமுடைந்து போனாள்
நாட்கள் சென்றன. முன்பைப் போல மதுவிடுதிக்கு யாரும் வருவதில்லை . மது விடுதி வெறிச்சோடி போய்க் கிடந்தது. மேரி மது விடுதியின் வெளியே வந்து நின்று யாராவது வருகிறார்களா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். 
 
கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமே இல்லை . மிகுந்த சோர்வுடன் கவலையுடன் உறங்கப்போனாள்
காலையில் எழுந்தவுடன் ஒரு புதிய யோசனை அவளுக்குள் முளைத்தது. மது விடுதியின் நுழைவாயிலில் "மதுவை ருசியுங்கள், பணத்தை பின்னர் தாருங்கள்" என்ற போர்டை மாட்டினாள் . 
 
அப்போது ஒரு வாடிக்கையாளர் அங்கே வந்தார் . அவர் மதுவை அருந்திவிட்டு மேரியிடம் பணத்தை தரும் போது மேரி அவரிடம் இப்ப ஒன்றும் அவசரமில்லை , உங்களுக்குத் தானே வேலையில்லையே இந்தப் பணத்தை வேற எதாவது செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மது அருந்தியதற்கு உரிய பணத்தை பின்னர் தாருங்கள் என்று சொன்னாள்.இதை கேட்டு ஆனந்தம் அடைந்த அவர் மேரி கடையில் யார் வேண்டுமானாலும் மது அருந்திக்கொள்ளலாம் அதற்கு உரிய பணத்தை பிறகு தந்து கொள்ளலாம் என்ற விஷயத்தை காட்டுத்தீ போல ஊர் முழுக்க பரப்பிவிட்டான்.
 
மேரியின் மது விடுதியில் கூட்டம் அலைமோதியது. மேரி கவனமாக யார் யார் குடித்தார்கள் எவ்வளவு குடித்தார்கள் , மொத்த தொகை எவ்வளவு என்பதை வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களை கணக்காளர் குறித்து வைத்திருப்பதைப் போல ஒரு நோட்டில் குறித்து வைத்தாள் .இது அவள் வங்கியில் வாங்கப் போகும் கடனுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தாள்.
 
டப்ளின் நகரத்திலேயே அதிகமாக மது விற்பனையாகும் விடுதி என்ற பெயர் மேரியின் மதுவிடுதிக்கு கிடைத்தது. மேரி வாடிக்கையாளர்களுக்கு அதிகமாக சுதந்திரத்தை கொடுத்தாள்.. பணத்தை கேட்டு நச்சரிக்கவுமில்லை..இதனால் அவள் மது வகைகளின் விலைகளை ஏற்றுவதை வாடிக்கையாளர்கள் பெரிசாக கண்டுகொள்ளவில்லை.
 
அவளுக்கு விற்பனையான பணம் கிடைக்காததால் , கொள்முதல் செய்ய வங்கியில் கடன் வாங்கினாள்.மதுவிடுதிக்கு அருகில் உள்ள வங்கியில் புதிதாக சேர்ந்திருக்கும் முப்பது வயதே நிரம்பிய வங்கியின் தலைவர் அவளுக்கு எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் கடன் கொடுத்தார். அவளுக்கு வாடிக்கையாளார்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை எதிர்காலத்தில் வங்கிக்கு சேரப்போகும் சொத்து என்று அந்த இளம் வங்கி அதிகாரி நினைத்தார். 
 
வேலையில்லாத அந்த குடிகாரர்கள் எப்படி பணத்தை திருப்பி செலுத்துவார்கள் என்று மேரியைப் போல அந்த வங்கி அதிகாரியும் சிந்திக்கவில்லை. கமிஷனுக்கு ஆசைப்பட்ட வங்கியின் தலைமை அலுவலகம் அந்த கடன்களை எல்லாம் கடன் பத்திரங்களாக மாற்றியது.  இதைப் போட்டிப்போட்டுக் கொண்டு எல்லா புரோக்கரேஜ் கம்பெனிகளும்  விற்றுத் தள்ளின.
 
நாட்கள் சென்றன .வங்கி மேரியை கடனை திருப்பு செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது. மேரி தனது வாடிக்கையாளர்களான வேலையில்லாத குடிகாரர்களிடம் கடனை திருப்பி கட்டுமாறு நச்சரிக்க ஆரம்பித்தாள் . ஆனால் அந்த வேலையில்லாத இல்லாத குடிகாரர்கள் எப்படி பணத்தை திருப்பி தருவார்கள்
மேரி மது விடுதியை மூடும் நிலைக்கு வந்தாள். 
 
அங்கே வேலை செய்த பதினொரு பேரும் வேலையை இழந்தனர். மீண்டும் மனமுடைந்து கவலைக்கு உள்ளானாள் மேரி. வங்கிக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இந்த கடன் பாண்டுகளின் மதிப்பு சந்தையில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் வங்கியின் பணப்புழக்கம் முடங்கியது. புது கடன்களை வழங்க முடியாமல் போனது. இதன் விளைவாக பொருளாதாரம் பெரிய சரிவைச் சந்தித்தது. இந்த மாதிரி பல கடன்களை திரும்ப பெற முடியாததால் வங்கியும் திவாலானது. இந்த சரிவை சமாளிப்பதற்காக அரசாங்கம் அதிக கடன்களை வழங்குகிறது.இந்த கடன்களை வழங்குவதற்கு அரசாங்கம் புதிய வரிகளை விதிக்கிறது. இப்ப புரிகிறதா மக்களின் வரிப்பணம் சிலருடைய தவறுகளால் எப்படி வீணடிக்கப்படுகிறது என்று? 
இன்றைய சூழலில் உலகத்தில் பல நாடுகளின்  பொருளாதர நிலையும் இப்படித்தான் இயங்குகிறது.
 
-வாட்ஸப்பில் உலா  வந்த கதை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close