Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் சோனி பிராவியா டிவி உற்பத்தி

 எல்க்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமான சோனி, பிராவியா வகை டிவிக்களைத் தமிழகத்தில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. 

 
பெரும்பாலானோர் பழைய சிஆர்டி டிவிகளிலிருந்து எல்சிடி டிவிக்களுக்கு மாறிவருவதால் புது வகை டிவிகளின் தேவை அதிகரித்து வருகின்றன. எனவே பிராவியா, 4கே மற்றும் ஆன்ட்ராய்ட் டிவிகளின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக சோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சோனி இந்தியா நிறுவனம், பிராவியா மற்றும் ஆன்ட்ராய்ட் டிவிகளை உற்பத்தி செய்ய காம்படிஷன் டீம் டெக்னாலஜி நிறுவனத்தின் இந்தியப் பிரிவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அந்த டிவிக்களின் பாகங்களை உற்பத்தி செய்ய தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளனர். 
 
சோனி நிறுவனத்தில் மொத்த விற்பனையில் பிராவியா டிவிகள் மட்டும் 40% விற்பனையாகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்வதன் மூலம், அதனை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது எளிதாக மாறுவதோடு விளம்பர மற்றும் விநியோக செலவும் பெருமளவில் குறையும்.  
 
2013-14ம் நிதி ஆண்டில் சோனி நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.10,600 கோடி ஆகும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close