Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹோண்டா சிபிஆர் 650எஃப் ஸ்போர்ட் பைக் அறிமுகம்

 முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா புதிய சிபிஆர் 650எஃப் ஸ்போர்ட் பைக்கை டெல்லியில் அறிமுகம் செய்துள்ளது. இதனை நடிகர் அக்‌ஷய்குமார், நடிகை டாப்ஸி அறிமுகம் செய்து வைத்தனர்.


முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த சிபிஆர் 650எஃப் ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை ரூ. 7.3 லட்சம் ஆகும். இந்த ஹோண்டா சிபிஆர் 650எஃப் 649சிசி திறன் கொண்டது. மோனோ சஸ்பென்ஷன் கொண்ட இதன் எஞ்சின் 16 வால்வுகள் மற்றும் 4 சிலிண்டர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 88.2 குதிரை திறன் கொண்டது. மேலும் இதில் 6 ஸ்பீட் கியரும், திரவ எஞ்சின் கூலிங் வசதியும் உண்டு. 


ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு 50 லட்சம் வண்டிகளை விற்பனை செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close