Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு மாதத்தில் ரூ. 9.5 லட்சம் கோடி

 பங்கு முதலீட்டாளர்களின் மதிப்பு இரண்டு மாதத்தில் ரூ. 9.5 லட்சம் கோடி


மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் வருமானம் கடந்த இரண்டு மாதங்களில் 9.5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. 
மும்பை பங்குச் சந்தையில், ஜூன் 12 லிருந்து சரியாக இரண்டு மாதத்தில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பானது 9.5 லட்சம் கோடி அதிகரித்து 106,59,739 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 
 
கடந்த ஜூன் 11ஆம் தேதியில் சென்செக்ஸ் 26,371ஆக இருந்தது. இந்த இரண்டு மாதத்தில் ஏறக்குறைய 2,007 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இன்று 12:03 மணியளவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்து 28,379ஆக உயர்ந்தது.  இதன் மூலம், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு, மொத்த சந்தை மூலதனத்தைப் பொறுத்து 9.5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்து 106,59,739 கோடி ரூபாயாக உள்ளது.

பங்குச் சந்தையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து 4,837 கோடி ரூபாயான நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ரூ. 12,845 கோடியாக உயர்ந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close